வீடியோ; அர்ஸ்தீப் கலக்கல் பந்துவீச்சு; முதல் ஓவரில் இரண்டு விக்கெட், திக் திக் ரிவ்வூ!

0
264
Arsdeep

ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் எட்டாவது டி20 உலக கோப்பை தொடரில் இன்று அதிவேக பெர்த் மைதானத்தில் இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகள் மிக முக்கியமான போட்டி ஒன்றில் விளையாடுகின்றன. இரண்டு அணிகள் அரை இறுதி சுற்றுக்கு முன்னேறவும் இந்த போட்டி மிக முக்கியமான போட்டியாகும்.

இந்த போட்டிக்கான டாசில் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங் செய்வது என தீர்மானித்தார். ஆனால் இந்திய பேட்ஸ்மேன்கள் யாரும் அதை விரும்பாதது போல் வருவதும் போவதுமாக இருந்தனர்.

ரோகித் சர்மா, கேஎல் ராகுல், விராட் கோலி, தீபக் ஹூடா, ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் என யாருமே சரியாக விளையாடவில்லை. ஆனாலும் இந்திய அணியின் தற்போதைய சூப்பர் ஸ்டார் பேட்ஸ்மேன் சூரியகுமார் யாதவ் மட்டும் ஒரு முனையில் நின்று 40 பந்துகளில் 68 ரன்கள் விளாசினார். இவரது அதிரடியான பேட்டிங்கால் பிரியாணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 133 ரன்கள் சேர்த்தது.

இதற்கு அடுத்து களம் இறங்கிய தென் ஆப்பிரிக்கா அணிக்கு இந்திய அணியின் இளம் இடது கை வேகப்பந்துவீச்சாளர் அர்ஸ்தீப் சிங் பெரிய அச்சுறுத்தலாக விளங்கினார். அவரது முதல் ஓவரில் குயிண்டன் டி காக் மற்றும் ரைலி ரூசோவ் விக்கெட்டை வீழ்த்தினார். இதற்கான வீடியோ லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது!

இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர்களின் சிறப்பான செயல்பாட்டால் தென் ஆப்பிரிக்கா அணி வீரர்கள் தற்போது திணறி வருகிறார்கள். ஆறு ஓவர்கள் பவர் பிளே முடிவில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 24 ரன்களை மட்டுமே சேர்த்து இருக்கிறார்கள்.