வீடியோ; பேர்ஸ்டோவை சர்ச்சையான முறையில் ரன் அவுட் செய்த அலெக்ஸ் கேரி; பரபரப்பான கட்டத்தில் இரண்டாவது டெஸ்ட் போட்டி!

0
2615
Ashes2023

ஐந்து போட்டிகள் கொண்ட உலகப் புகழ்பெற்ற ஆசஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே இங்கிலாந்து லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது!

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்று பந்து வீசிய இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை மிகச் சிறப்பாக எதிர் கொண்டு விளையாடிய ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்ஸில் 416 ரன்கள் குவித்தது. அந்த அணியின் ஸ்மித் 110 ரன்கள் எடுத்தார்.

- Advertisement -

அடுத்து தனது முதல் இன்னிங்ஸ் விளையாடிய இங்கிலாந்து அணிக்கு நல்ல ஆரம்பம் கிடைத்தாலும் அதை பயன்படுத்திக் கொண்டு நல்ல ஸ்கோருக்கு செல்ல முடியவில்லை. இறுதியில் மிட்சல் ஸ்டார்க் அதிரடியாக விக்கெட்டுகள் வீழ்த்த இங்கிலாந்து 325 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியின் பென் டக்கட் 98 ரன்கள் எடுத்தார்.

இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய ஆஸ்திரேலியா அணியை மிகச் சிறப்பான முறையில் பந்து வீசி இங்கிலாந்து அணி 279 ரன்களுக்கு ஆல் அவுட் செய்தது. இதை எடுத்து இங்கிலாந்து அணிக்கு 371 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணிக்கு நேற்று நான்கு விக்கெட்டுகள் விழுந்துவிட்டது. டக்கட் உடன் ஜோடி சேர்ந்த கேப்டன் பென் ஸ்டோக்ஸ் நேற்று விக்கெட் விடாமல் விளையாடி அணியை பாதுகாத்தார்.

- Advertisement -

இன்று ஆட்டத்தின் ஐந்தாவது நாள் தொடர்ந்து விளையாடிய இந்த ஜோடியில் டக்கட் 83 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதற்கு அடுத்து மிகச் சிறப்பாக விளையாடிய பென் ஸ்டோக்ஸ் சதம் அடித்து களத்தில் நின்றார்.

இந்த நிலையில் அடுத்து விளையாட வந்த ஜானி பேர்ஸ்டோ தனக்கு வீசப்பட்ட ஒரு பவுன்சர் பந்துக்கு குனிந்து விளையாடிவிட்டு, கீப்பரைத் திரும்பி பார்க்காமல், அப்படியே கிரீசை விட்டு வெளியே வந்து விட்டார். இந்த நேரத்தில் மிகச் சாதுரியமாக செயல்பட்ட ஆஸ்திரேலியா விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி ஸ்டெம்புக்கு பந்தை த்ரோ செய்து ரன் அவுட் செய்தார்.

இங்கிலாந்து அணி அதிர்ச்சி அடைய நடுவர்கள் அவுட் குறித்து அலச ஆரம்பித்தார்கள். இறுதியில் பந்து கீப்பரிடம் இருக்கும் பொழுது, நடவடிக்கை முழுமை அடைந்திருக்காத பொழுது, பேட்ஸ்மேன் வெளியேறுவதை தெரிவிக்காமல் வெளியேறினால், அந்த நேரத்தில் ரன் அவுட் செய்யலாம்என்கின்ற விதியின் கீழ் அவுட் கொடுத்தார்கள்.

தற்பொழுது வெற்றிக்கு மேற்கொண்டு 128 ரன்கள் தேவைப்படுகின்ற நிலையில் இங்கிலாந்து 6 விக்கெட்டுகளை இழந்து இருக்கிறது. இதனால் இந்த போட்டி விறுவிறுப்பாக மாறி இருக்கிறது. அதே சமயத்தில் இந்த ரன் அவுட் ரசிகர்களிடையே மிகப்பெரிய சர்ச்சையாக சமூக வலைதளத்தில் உருவாகி இருக்கிறது. இதற்கான வீடியோ இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது!