வீடியோ ; ஹாட்ரிக் விக்கெட் எடுத்து சாதனை படைத்த யுஏஇ தமிழர் ; டி20 உலக கோப்பையில் சாதனை!

0
959
T20iwc2022

எட்டாவது டி20 உலக கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் தகுதி சுற்று போட்டியில் இன்று முதலில் நெதர்லாந்து நமீபியா அணிகள் மோதின. இதில் நெதர்லாந்து வெற்றி பெற்றது.

இன்றைய நாளின் 2-வது தகுதி சுற்று போட்டியில் இலங்கை யுஏஇ அணிகள் மோதின. இந்த போட்டியில் இலங்கை அணி 79 ரன்கள் வித்தியாசத்தில் தற்போது வெற்றி அடைந்திருக்கிறது.

- Advertisement -

முதலில் பேட் செய்த இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 152 ரன்கள் எடுத்தது. இலங்கை அணி தரப்பில் நிசாங்கா 60 பந்துகளில் 74 ரன்கள் எடுத்தார். யுஏஇ அணிக்காக விளையாடி வரும் தமிழகத்தைச் சேர்ந்த கார்த்திக் மெய்யப்பன் தான் வீசிய ஆட்டத்தின் 16-வது ஓவரில் நான்காவது ஐந்தாவது மற்றும் ஆறாவது பந்தில் ராஜபக்சே, அசலங்கா மற்றும் கேப்டன் சனக விக்கெட்டை வீழ்த்தி ஹாட்ரிக் சாதனை படைத்தார். இதற்கான வீடியோ லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து களமிறங்கிய யுஏஇ அணி இலங்கை அணியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 17.1 ஓவரில் 73 ரன்களுக்கு சுருண்டது. இலங்கை அணி 79 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணியின் ரன் ரேட் உயர்ந்துள்ளது. இதற்கு அடுத்து இலங்கை அணி நெதர்லாந்து அணி உடன் விளையாடும் போட்டியில் சராசரியாகப் போட்டியை வென்றாலே அடுத்த சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது!

- Advertisement -

!

.

.