வீடியோ; 50 பந்துகள்; 9 சிக்ஸர்கள் ; 92 ரன்கள் ; குஜராத் பந்துவீச்சை பிரித்து எடுத்த ருதுராஜ்!

0
89
Ruturaj

இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்தும் உலகப் பிரபல டி20 லீக் ஐபிஎல் தொடரின் 16வது சீசன் இன்று அகமதாபாத் மைதானத்தில் குஜராத் சென்னை அணிகளுக்கு இடையே நடக்கும் போட்டியின் மூலம் துவங்கியது!

இந்த போட்டிக்கான டாசில் வென்ற குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார். இம்பேக்ட் பிளேயர் விதியை பயன்படுத்திக் கொள்ள மகேந்திர சிங் தோனி தனது பிளேயிங் லெவனில் இரண்டே வேகப்பந்து வீச்சாளர்களை மட்டும் வைத்துக் கொண்டார்.

- Advertisement -

சென்னை அணிக்கு இந்த முறை டெவன் கான்வே – ருதுராஜ் ஜோடி துவக்க வீரர்களாக களம் இறங்கியது. கான்வே ஆறு பந்துகளில் ஒரு ரன்கள் எடுத்து ஏமாற்றினார். அடுத்து வந்த மொயின் அலி 17 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து வெளியேறினார். பெரிய விலைக்கு வாங்கப்பட்ட பென் ஸ்டோக்ஸ் 6 பந்துகளில் 7 ரன்கள் எடுத்து வெளியேறினார். அம்பதி ராயுடு 12 பந்துகளில் 12 ரன்கள் மட்டும் எடுத்து ஆட்டம் இழந்தார்.

இப்படி எல்லோரும் ஒரு பக்கம் ஏமாற்றிக் கொண்டிருக்க இன்னொரு முனையில் நின்ற இளம் வீரர் ருதுராஜ் தனது கிளாசிக்கான அட்டாக் பேட்டிங் மூலம் சென்னை அணி ரசிகர்களுக்கு விருந்து படைத்து குஜராத் அணி வந்து வீச்சாளர்களை பதற வைத்தார்.

ஆரம்பத்தில் இருந்து அதிரடி காட்டிய ருத்ராஜ் பௌண்டரிகளால் டீல் செய்யவில்லை. மாறாக சிக்ஸர்களால் வெளுத்து எடுக்க ஆரம்பித்தார். 23 பந்துகளில் அரை சதத்தை கடந்த அவருக்கு சரியான ஒத்துழைப்பு மறுபுறம் இல்லை. ஆனாலும் அவர் தனது அதிரடியை பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் காட்டி சென்னை அணிக்கு நம்பிக்கையை அளித்தார்.

- Advertisement -

இறுதியில் ருதுராஜ் 50 பந்துகளை சந்தித்து 92 ரன்களை நான்கு பவுண்டரி மற்றும் 9 சிக்ஸர்கள் உடன் எடுத்து அல்ஜாரி ஜோசப் பந்தில் ஆட்டம் இழந்தார். சென்னை அணிக்காக ஒரு இன்னிங்ஸில் ஒரு வீரர் அடித்த மூன்றாவது அதிக எண்ணிக்கையிலான சிக்ஸர்கள் இதுவாகும். இதற்கு முன்பு முரளி விஜய் 11 சிக்ஸர்கள், மைக் ஹஸ்சி 9 சிக்ஸர்களை விளாசி இருக்கிறார்கள்.

200 ரண்களை எட்ட வேண்டிய சென்னை அணி ருதுராஜ் தவிர யாரும் சரியாக விளையாடாத காரணத்தால், இரண்டாவது பந்து வீசுவதற்கு தேவையான 180 ரன்கள் எட்ட போராடிக் கொண்டிருக்கிறது. ருத்ராஜ் அடித்த சில அருமையான சிக்ஸர்களுக்கான வீடியோ லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது!