கத்துக்குட்டின்னு தப்பா நெனச்சிட்டோம்.. எங்க தோல்வி எந்த இடத்தில் முடிவாச்சுன்னா? – தென்னாபிரிக்கா கேப்டன் உருக்கமான பேட்டி!

0
35956

இதனால்தான் நாங்கள் நெதர்லாந்திடம் தோல்வியை தழுவினோம் என்று உருவமாக பேட்டி அளித்துள்ளார் தென் ஆப்பிரிக்கா கேப்டன் டெம்பா பவுமா.

அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் குரூப் 2 – சூப்பர் 12 போட்டியில் தென்னாபிரிக்கா மற்றும் வங்கதேசம் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. மிபர்க் 37 ரன்களும், மாக்ஸ் 29 ரன்களும் அடித்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்து ஆட்டமிழந்தனர்.

- Advertisement -

அடுத்துவந்த, டாம் கூப்பர்(35) விக்கட் விடாமல் ஸ்கொரை உயர்த்த நிலைத்து ஆடினார். நட்சத்திர வீரர் அக்கர்மன் அதிரடியை வெளிப்படுத்தி 26 பந்துகளில் 41 ரன்கள் அடித்தார். கேப்டன் எட்வர்ட்ஸ் 12(7) அடித்து இறுதிவரை அவுட் ஆகாமல் இருக்க 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்தது.

2வது பேட்டிங் செய்த தென்னாபிரிக்காவுக்கு மீண்டும் மோசமான துவக்கம் கிடைத்தது. டி காக்(13), பவுமா(20) இருவரும் அடுத்தடுத்து அவுட் ஆகினர். ரூஸோவ்(25) நிலைத்து நிற்காமல் வெளியேறினார்.

மிடில் ஆர்டரில் மார்க்ரம்(17), மில்லர்(17), பர்னல்(0) ஆகியோர் போதிய பார்ட்னர்ஷிப் அமைக்காமல் அவுட் ஆக 120/7 என தென்னாபிரிக்கா திணறியது. க்ளாசன் 21 ரன்களும், மகாராஜ் 13 ரன்களும் எடுத்து வெளியேறினார். நெதர்லாந்து பந்துவீச்சு மற்றும் பீல்ட்டிங் இதுவரை கண்டிராத அளவிற்கு உலகத்தரமாக இருந்தது.

- Advertisement -

இறுதியில் இலக்கை எட்ட முடியாமல் 8 விக்கட் இழப்பிற்கு 145 ரன்கள் மட்டுமே எடுத்து நெதர்லாந்து அணியிடம் 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது தென்னாபிரிக்கா.

வென்றாலே அரை இறுதி போட்டிக்கு தகுதி பெற்று விடலாம் என களமிறங்கிய போட்டியில், இப்படி பரிதாபமாக தோல்வியை தழுவியது பற்றி போட்டி முடிந்த பிறகு பேட்டி அளித்த தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன் பவுமா பேசியதாவது:

மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது. வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற போட்டியில், இப்படி தவறு செய்து விட்டோம். சரியான நேரத்தில் எதை செய்யக்கூடாதோ அதை செய்து விட்டோம். சிறிய அணிதான் என்று தவறாக எடை போட்டுவிட்டோம் என நினைக்கிறேன்.

டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தேன். அந்த இடத்தில் தான் தவறு நேர்ந்தது. அடுத்ததாக நெதர்லாந்து அணியை ரன்கள் அடிக்கவிட்டு, 150 ரன்கள் கடக்க வைத்தது இரண்டாவது தவறு.

பாகிஸ்தான் போட்டியில் நேர்ந்தது போலவே இப்போட்டியிலும் எங்களது பேட்டிங்கில் தவறு நேர்ந்து விட்டது பார்ட்னர்ஷிப் அமைக்காமல் அடிக்கடி விக்கெட் இழந்து வந்தது சிக்கலை ஏற்படுத்தி விட்டது. மைதானத்தின் போக்கையும் சரியாக கணிக்க மறந்து விட்டோம். அனைத்து பகுதிகளிலும் எங்களுக்கு தவறு நேர்ந்து விட்டது. இந்த தோல்வியை முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை.” என்றார்.