இந்த முறை ஐசிசி ஒன்பதாவது டி20 உலகக்கோப்பை தொடரை கிரிக்கெட்டுக்கு புதிய நாடான அமெரிக்கா வெஸ்ட் இண்டிஸ் நாட்டுடன் சேர்ந்து நடத்துகிறது. இன்று அமெரிக்க அணி தங்களின் இரண்டாவது போட்டியில் பலம் வாய்ந்த பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. எதிரணியில் அமெரிக்க கேப்டன் மோனன்க் படேல் பாகிஸ்தான் அணிக்கு எச்சரிக்கை செய்யும் விதமாக பேசியிருக்கிறார்.
நடப்பு ஐபிஎல் தொடரை நடத்தும் நாடு என்கின்ற காரணத்தின் அடிப்படையில் அமெரிக்கா நேரடியாக இந்த டி20 உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற்றது. மேலும் இந்திய அணி இடம்பெற்றிருக்கும் ஏ பிரிவில் அமெரிக்க அணி இடம் பெற்று இருக்கிறது.
நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரில் தனது முதல் போட்டியில் கனடா அணிக்கு எதிராக பெரிய இலக்கை துரத்தி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் அமெரிக்க வீரர் ஆரோன் ஜோன்ஸ் சிறப்பாக விளையாடி இறுதி வரை ஆட்டம் இழக்காமல் 90க்கும் மேற்பட்ட ரன் எடுத்து அணியை வெற்றி பெற வைத்தார்.
தற்போது பாகிஸ்தானுக்கு எதிராக நடக்க இருக்கும் போட்டி குறித்து அமெரிக்க கேப்டன் மோனன்க் படேல் பேசும் பொழுது “நாங்கள் பாகிஸ்தான் அணியின் மீது கவனம் செலுத்த மாட்டோம். நாங்கள் எங்களுடைய விளையாட்டில் கவனம் செலுத்துவோம். மேலும் நாங்கள் விளையாடி வரும் விதத்தில் தொடர்ந்து விளையாடுவதை உறுதி செய்ய விரும்புகிறோம். இது டி20 போட்டி, எனவே நாங்கள் ஆட்டத்தில் 30 அல்லது 40 நிமிடங்கள் அதிகம் செலுத்தினால், போட்டியை எங்கள் பக்கம் திருப்பி விட முடியும்.
முதல் ஆட்டம் எங்களுக்கு நல்ல வேகம் கிடைப்பதற்கு உதவியது. பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் அந்த வேகத்தை முன்னெடுத்துச் செல்ல நாங்கள் முயற்சி செய்வோம். பாகிஸ்தான் நல்ல அனுபவம் வாய்ந்த அணி. மேலும் நாங்கள் நல்ல கிரிக்கெட் விளையாடுவதை உறுதி செய்வோம்.
இதையும் படிங்க : அயர்லாந்தை 96 ரன்னில் ஆல் அவுட் செய்தாலும்.. இந்திய அணிக்கு தீராத சிக்கல்.. சரி செய்ய முடியுமா?
பாபர் அசாம் அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் சிறந்த வீரர். அவர் பாகிஸ்தான அணியின் சிறந்த வீரர் மற்றும் கேப்டன். அவர் நீண்ட இன்னிங்ஸ் விளையாடினால் என்ன நடக்கும் என்று நாம் பார்த்திருக்கிறோம். எனவே அவருடைய விக்கெட் எங்களுக்கு மிகவும் முக்கியமானது. அவர் டி20 கிரிக்கெட்டில் மிகவும் சீரானவர்” என்று கூறி இருக்கிறார்