2021ம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் எடுக்கப்படாத ஐந்து முக்கிய தமிழக வீரர்கள்

0
5111
Ganeshan Periyaswamy and Arun Karthik
Photo Source: Twitter

உலக அரங்கிலே பலதரப்பட்ட மக்களால் மிகவும் விரும்பப்படும் கிரிக்கெட் தொடர் என்றால் அது ஐபிஎல் தான். ஒவ்வொரு ஆண்டும் உலக கோப்பைக்கு நிகராக மிகவும் பிரமாண்டமாய் நடத்தப்பட்டு வருகின்றது. இந்தியாவின் முக்கியமான எட்டு நகரங்களை அடிப்படையாக கொண்டு அரங்கேறி வருகிறது ஐபிஎல். இந்த எட்டு நகரங்களில் சென்னை அதாவது தமிழ்நாட்டிற்கு மிக முக்கிய பங்குண்டு. இந்தியா கிரிக்கெட்டிற்கும் தனது சிறப்பான பங்கினை தவறாமல் தந்து கொண்டிருக்கிறது.

இந்தியா இளம் வீரர்களுக்கு ஐபிஎல் தொடர் எப்படி வரப்பிரசாதமாக அமைந்ததோ, அதுபோல் தமிழ்நாட்டு வீரர்களுக்கு டி.என்.பி.எல் சிறப்பாக அமைந்தது. அதன் எழுச்சியால் வாஷிங்டன் சுந்தர், நடராஜன் ஆகியோர் இந்தியா அணியில் இடம் பிடிக்கும் வாய்ப்பும் கிட்டியது. அது மட்டுமின்றி கடந்து சில வருடங்களாக தமிழ்நாட்டு அணியின் எழுச்சியும் மிகவும் குறிப்பிடும்படியாக இருந்தது.

- Advertisement -

தற்போது நடந்த SMAT டி20 தொடரையும் தினேஷ் கார்த்திக் தலைமையிலான தமிழ்நாடு அணி வென்று சாதித்தது. இதன் காரணமாக பல தமிழக வீரர்களுக்கு இந்த 2021 ஐபிஎல் தொடரில் விளையாட தேர்வாக வாய்ப்புள்ளது என்று எண்ணி இருந்தனர். ஹரி நிஷாந்த் மற்றும் ஷாருக் கான் ஆகியோர் முறையே CSK மற்றும் PBKS அணிக்காக விளையாட தேர்தெடுக்கப்பட்டனர். ஆனால் மேலும் பல வீரர்கள் எதிர்பார்த்து ஏமாற்றமடைந்தனர். அவர்கள் யார் யார் என்பதை இந்த கட்டுரையில் காண்போம்.

ஜி. பெரியசாமி:

இந்தியாவின் மலிங்கா என்று செல்லமாக அழைக்கப்படும் வீரர் தான் இந்த பெரியசாமி. நடராஜனுக்கு மிகவும் நெருங்கிய நபரான இவர் மலிங்க போல பந்து வீசக்கூடியவர். இவரின் சிறப்பான ஆட்டம் டிஎன்பிஎல் மட்டும் மாநில டி20 தொடர்களிலும் காணமுடிந்தது. இதன் காரணமாக அதி விரைவில் ஐபிஎல் தொடறில் விளையாட வாய்ப்பை பெற்றுவிடுவார் எனவும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அனைத்தையும் பொய்யாக்கும் வகையில் இந்தமுறை ஏலத்திலும் விலைபோகாமல் ஏமாற்றம் அடைந்தார்.

இவரின் திறமை கண்டிப்பாக டி-20 போட்டிகளுக்குகே உரித்தான வகையில் அமைந்திருக்கிறது, இதனை கருத்தில் கொண்டு அடுத்து வரும் சீசன்களில் கண்டிப்பாக ஐபிஎல்லில் இடம்பிடிப்பார் என்று நம்புவோம். அதுவரை அவரின் நண்பரான நடராஜனின் விடாமுயற்சியை இவரும் பின்பற்ற வேண்டும்.

- Advertisement -

பாபா அபராஜித்:

இந்த கிரிக்கெட் ஒருவரை நொடி  பொழுதில் ஒருவரை புகழின் உச்சிக்கே கொண்டு போய்விடும், அதுபோல உச்சியில் இருந்த ஒருவரை சட்டென்று கீழே இறங்கிவிடும். அப்படி ஒரு நிகழ்வுக்கு இறையானவர் தான் பாபா அபராஜித். ஆனால் எந்த ஒரு நிகழ்வும் இவரது செயலால் நிகழவில்லை, காரணம் இவருக்கான எந்த வாய்ப்பும் சரியாக கிட்டவில்லை.

தமிழ்நாட்டு  கிரிக்கெட் ரசிகர்களுக்கு நன்கு பரிட்சயமான ஒரு வீரர் தான் அபராஜித். இவரின் ஆட்டநுணுக்கத்தை கண்டு CSK அணிக்காக விளையாட தேர்தெடுக்கப்பட்டார். பின்பு CSK அணி இரண்டு ஆண்டுகள் தடை செய்யப்பட்டதற்கு  பிறகு புனே அணிக்காக விளையாட தேர்தெடுக்கபட்டார். இப்படி ஏலம் எடுக்கப்பட்டாலும் ஒரு போட்டியில் கூட விளையாட வாய்ப்பு கிடைக்காமல் பெஞ்சில் அமரவைக்கப்பட்டார்.

தற்போது இந்த சீசனில் ஏலம் கூட போகவில்லை. தமிழ்நாட்டிற்க்காக களமிறங்கிய எந்த ஒரு தொடரிலும் அதிக ரன் குவிக்கும் வீரர்களில் முதன்மையாக இருக்கும் இவருக்கு சரியான வாய்பளிக்காமல் மறுக்கப்பட்டது மிகவும் வருந்தத்தக்கது. அடுத்து வரும் ஆண்டுகளில் இந்த நிலை மாறும் என்று அனைவரும் நம்புவோம்.

அருண் கார்த்திக்:

இவர் ஒன்றும் புதிய நபரல்ல, 2019 டிஎன்பிஎல் தொடரில் தனது அதிரடியான ஆட்டத்தால் சதமடித்து அனைத்து கிரிக்கெட் ரசிகர்களையும் கவர்ந்த வீரர் தான் இந்த அருண் கார்த்திக். அந்த ஆண்டே ஐபிஎல்லில் ஏலம் எடுக்கபடுவார் என்று எதிர்பார்த்தனர், அதன் காரணமாக RCBல் விளையாட வாய்ப்பு கிட்டியது. ஆனிலும் விளையாடும் XIஇல் வாய்ப்பு கிடைக்காததால். அடையாளம் தெரியாமல் போனார். சில காலம் கழித்து தற்போது அசத்தல் பார்மில் உள்ள இவர் இந்த ஆண்டு ஏலம் போவார் என நம்பியிருந்தனர். அது இந்தமுறை நடக்காமலே போய்விட்டது, ஆனால்  நிச்சயம் இவரின் பேட் ஐபிஎல்லில் சத்தமாக பேசும் நிலை வரும்.

சோனு யாதவ்:

Sonu Yadav Tamil Nadu Cricketer

சோனு யாதவ் ஒரு பந்துவீச்சு ஆல்ரவுண்டர். இவரின் சிறப்பான பங்களிப்பு இந்த ஆண்டு SMAT தொடரிலும் இருந்தது. அதனை அடுத்து ஐபிஎல் ஏலத்திலும் தனது பெயரை சேர்த்தார். ஆனால் துருத்ரிஷ்டவசமாக எந்த ஒரு அணியின் கண்ணும் இவரின் மேல் படவே இல்லை. சரி இருக்கட்டும், மிகவும் இளம் வீரரான இவர் மேலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஐபிஎல் ஏலத்தை அலறடிக்கும் நாள் வரும் என்பதினை இங்கு தெரிவித்து கொள்வோம்.

M மொஹம்மது:

M. Mohammed Tamil Nadu Cricketer

SMAT 2021 தொடர் அரையிறுதி போட்டியில் தனது அசாத்தியமான பந்துவீச்சால் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி தமிழ்நாடு அணி வெற்றிபெற உறுதுணையாக இருந்தவர் மொஹம்மது. இந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் அனைத்து அணிகளும் வேக பந்துவீச்சாளர்களை குறிவைப்பதை பார்த்து இவரும் நம்பிக்கையுடன் காத்திருந்தார். அனால் கடைசிவரை யாரும் இவரை சீண்டவில்லை என்பதே வருத்தத்திற்குரிய உண்மை. தந்து அணியின் மற்றோரு வீரரான பெரியசாமியுடன் ஜோடி சேர்ந்து பல வெற்றிகளை பெற உறுதுணையாக இருந்து, வரும் காலங்களில்  ஐபிஎல் தொடரில் முத்திரை பதிப்பார் என்று அனைவரும் நம்புவோம்.