கிரிக்கெட்

இலங்கைக்கு எதிரான தொடரில் துரதிர்ஷ்டவசமாக இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காமல் போன 5 இளம் கிரிக்கெட் வீரர்கள்

இலங்கைக்கு எதிராக மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஷிகர் தவான் தலைமையில் இளம் வீரர்கள் இலங்கைக்கு இந்த மாத இறுதியில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கின்றனர். ஜூலை 13ம் தேதி முதல் ஜூலை 25-ம் தேதி வரை 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொழும்பு மைதானத்தில் வைத்து நடக்க இருக்கிறது.

- Advertisement -

இந்திய அணியில் படிக்கல், ருத்ராஜ், ராணா, கிருஷ்ணன் கவுதம் சக்காரியா, வருன் சக்கரவர்த்தி போன்ற இளம் வீரர்கள் முதல் முறையாக இந்திய அணிக்கு விளையாட இருக்கின்றனர். இருப்பினும் ஒரு சில வீரர்கள் துரதிஷ்டவசமாக அணியில் இடம்பெற முடியாமல் போனது. அப்படி இடம்பெற முடியாமல் போன சிறந்த கிரிக்கெட் வீரர்களை பற்றி பார்ப்போம்

5. ரியன் பராக்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் சிறப்பாக விளையாடிய ஒரு ஆல்ரவுண்டர் வீரர். சமீப சில ஐபிஎல் தொடர்களில் மிகவும் சிறப்பாக விளையாடி அனைவர் மத்தியிலும் நற்பெயர் வாங்கிக் கொண்ட ஒரு வீரர். இளம் வீரரான இவரை தற்போது இலிருந்து இந்திய அணியில் விளையாட வைத்தால் நிச்சயமாக வருங்காலத்தில் ஒரு சிறந்த ஆல்ரவுண்டர் வீரராக வலம் வருவார் என்று அனைத்து ரசிகர்களும் எதிர்பார்த்தனர்.

அதனடிப்படையில் இவருக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்படும் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் மத்தியில் கணிக்கப்பட்டது. இருப்பினும் தற்போது இவருக்கான வாய்ப்பு வழங்கப்படவில்லை. எனினும் நிச்சயமாக இனி அடுத்து வரும் சர்வதேச தொடர்களில் இவருக்கு நிச்சயமாக ஒரு வாய்ப்பு வழங்கப்படும் என்று அனைவரும் கூறி வருகின்றனர்.

- Advertisement -

4. ராகுல் தெவாட்டியா

Photo: IPL/BCCI

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் சென்ற ஆண்டு மிக சிறப்பாக விளையாடிய ஒரு வீரர். அதன் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இவர் விளையாடும் வாய்ப்பைப் பெற்றிருந்தார், வாய்ப்பு கிடைத்த போதிலும் இவருக்கு காயம் ஏற்பட்ட காரணத்தினால் போட்டியில் விளையாட முடியாமல் போனது.

எனவே அதற்கு அடுத்து வரும் தொடர்களில் இவரது பெயர் இடம் பெறும் என்று ரசிகர்கள் நினைத்திருந்த வேளையில், இலங்கைக்கு எதிரான தொடரில் இவரது பெயர் இடம் பெறவில்லை என்பது அனைவருக்கும் ஆச்சரியமளிக்கிறது. இவருக்கு பதிலாக ஸ்பின் பவுலிங் போடக்கூடிய ஆல்ரவுண்டர் வீரராக கிருஷ்ணன் கௌதம் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

3. ரவி பிஷ்னோய்

மிக இளம் வீரரான இவர் லெக் ஸ்பின் பவுலிங்கில் அசத்த கூடிய ஒரு திறமையான பந்து வீச்சாளர். அணியில் சஹால், குல்திப் யாதவ், மற்றும் ராகுல் சஹர் இருக்கையில் இவருக்கு இடம் கிடைப்பது கடினம் தான்.

இருப்பினும் இவருக்கு ஒரு வாய்ப்பு இந்திய தேர்வு குழு வழங்கும் என்று ரசிகர்கள் ஆசைப்பட்டனர். எனினும் எதிர்பார்த்தது போலவே இவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இருப்பினும் இளம் வயதே ஆன இவர் வருங்காலத்தில் நிச்சயமாக இந்திய அணியில் விளையாடுவார் என்று அனைவரும் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

பஞ்சாப் அணியில் இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சில போட்டிகளில் மட்டும் இடம் பெற்றிருந்தாலும், இடம்பெற்றிருந்த அனைத்து போட்டிகளிலும் மிகச் சிறப்பாக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

2. ஜெயதேவ் உணத்கட்

Photo: IPL/BCCI

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக பல ஆண்டுகாலமாக விளையாடும் வரும் வீரர் இவர். சமீப ஆண்டுகளாக தடை வந்தாலும் கடந்த ஓரிரு ஆண்டுகளாக மிக சிறப்பாக உள்ளூர் ஆட்டங்களில் விளையாடி வருகிறார். இவரது தலைமையில் சௌராஷ்ட்ரா அணி முதல் முறையாக இரஞ்சி டிராபி தொடரை கைப்பற்றியது.

மேலும் அந்த தொடரில் இவர் 67 விக்கெட்டுகளை கைப்பற்றி அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரராக தனது திறமையைக் காண்பித்தார். நிச்சயமாக இவருக்கு இலங்கைக்கு எதிரான தொடரில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் இவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இவருக்கு பதிலாக இளம் வீரர் சேட்டன் சக்காரியவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

1. ஹர்ஷல் பட்டேல்

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மிக சிறப்பாக பந்து வீசிய ஒரு பந்து வீச்சாளர். அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய பந்துவீச்சாளராக மிக சிறப்பாக செயல்பட்டு, பர்ப்பில் தொப்பியை தன் கைவசம் வைத்திருக்கிறார். மிகச் சிறப்பாக பந்து வீசுவார் அதேசமயம் கடைசி நேரத்தில் சிறப்பாக பேட்டிங் செய்யக்கூடிய ஒரு வீரர்.

எனவே இவரை இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி களம் இருக்கும் என்று நினைத்திருந்த வேளையில், இவரை இந்திய அணி தேர்ந்தெடுக்கவில்லை. எனவே நிச்சயமாக இலங்கைக்கு எதிரான தொடரில் இவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று அனைவரும் உறுதியாக நம்பி இருந்த நிலையில், இலங்கைக்கு எதிரான தொடரிலும் இவரது பெயர் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Published by