ரஞ்சிக்கோப்பையில் தமிழக அணிக்கு நேர்ந்த சோகம்.. 20 பந்தில் அரைசதம் அடித்த ஜெகதீசன்.. வீண்!

0
1113

ரஞ்சிக்கோப்பையில் தமிழக அணி மோசமான வானிலையால் வெற்றியை தவறவிட்டுள்ளது.

நடைபெற்று வரும் ரஞ்சிக்கோப்பை தொடரில் தமிழகம் மற்றும் ஹைதராபாத் இரு அணிகளும் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி முதல் இன்னிங்ஸில் 395 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. கேப்டன் தன்மய் அகர்வால் 135 ரன்கள், மைக்கில் ஜெய்ஸ்வால் 137 ரன்கள் அடித்தனர்.

- Advertisement -

தனது முதல் இன்னிசை துவங்கிய தமிழக அணி 510 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்திருந்தபோது டிக்ளர் செய்தது. சாய் சுதர்சன் 179 ரன்கள், ஜெகதீசன் 116 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தனர். இறுதிவரை அவுட் ஆகாமல் இருந்த பாபா அப்ரஜித் 115 ரன்கள் அடித்திருந்தார்.

ஹைதராபாத் அணி இரண்டாவது இன்னிங்ஸில் 285 ரன்கள் அடித்து ஆல் அவுட் ஆனது. நான்காம் நாள் முடிவடைவதற்கு இன்னும் 11 ஓவர்கள் இருந்த நிலையில் தமிழக அணி 144 ரன்கள் சேஸ் செய்து வெற்றி பெற வேண்டும். இதை கருத்தில் கொண்டு அதிரடியாக விளையாடத் துவங்கியது தமிழக அணி.

துவக்க வீரர்கள் சாய் சுதர்சன் மற்றும் ஜெகதீசன் ஜோடி 6 ஓவர்களில் 100 ரன்கள் எட்டினர். சாய் சுதர்சன் 20 பந்துகளில் 42 ரன்கள் அடித்து ஆட்டம் இழக்க, கடைசிவரை களத்தில் இருந்த ஜெகதீசன் 21 ரன்கள் கடந்த பிறகு 22 பந்துகளில் 59 ரன்கள் உடன் இருந்தார்.

- Advertisement -

ஏழு ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் மட்டுமே இழந்து 108 ரன்கள் அடித்திருந்தது தமிழக அணி. இன்னும் நான்கு ஓவர்களில் 36 ரன்கள் அடித்தால் வெற்றி என இருந்தபோது, இதை எளிதாக கடந்து. விடலாம் என பலரும் நினைத்திருந்தனர். ஆனால் களத்தில் இருந்த நடுவர்கள் போதிய வெளிச்சம் இன்மை காரணமாக ஆட்டத்தை முடித்துக் கொள்ளலாம் என அறிவித்து விட்டனர்.

களத்தில் இருந்த ஜெகதீசன் அப்படியே சோகமாக நின்றுவிட்டார். ஏமாற்றம் அடைந்தது தமிழக அணி. நடுவரின் இந்த முடிவால் ஹைதராபாத் அணிக்கு நிம்மதி பெரும் மூச்சாக அமைந்துவிட்டது. வெற்றியை பெற வேண்டிய போட்டியில் டிராவை மட்டுமே தமிழக அணியால் பெற முடிந்தது குறிப்பிடத்தக்கது.