ரோகித் சர்மா துரதிஷ்டவசமான கேட்ச்; வீடியோ இணைப்பு!

0
101
Rohit sharma

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வரும் 15வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை இன்று துபாய் சர்வதேச மைதானத்தில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் மிகப்பெரிய போட்டி நடந்து வருகிறது!

நடப்பு ஆசிய கோப்பை தொடரில் முதல் சுற்றில் ஆப்கானிஸ்தான் இந்தியா இலங்கை பாகிஸ்தான் நான்கு அணிகளும், அடுத்த சுற்றான சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறின. இந்த சுற்றின் முதல் ஆட்டத்தில் மோதிய ஆப்கானிஸ்தான் இலங்கை ஆட்டத்தில் இலங்கை அணி அபாரமாய் 175 ரன்களை விரட்டி வென்றது.

- Advertisement -

இதையடுத்து சூப்பர் 4 சுற்றின் இரண்டாவது போட்டியாக இந்தியா பாகிஸ்தான் அணிகள் தற்போது மோதி வருகின்றன. இந்த போட்டிக்கான டாசில் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசம் முதலில் பந்து வீசுவது என தீர்மானித்தார்.

இந்திய அணி தரப்பில் ஹர்திக் பாண்டியா, தீபக் ஹூடா, ரவி பிஷ்னோய் அணிக்குள் வந்தனர். தினேஷ் கார்த்திக் ரவீந்திர ஜடேஜா ஆவேஸ் கான் வெளியேற்றப்பட்டனர். ரிஷப் பண்ட் அணியில் தொடர்கிறார்.

இந்திய அணியின் இன்னிங்சை துவங்க கேஎல் ராகுலும் கேப்டன் ரோகித் சர்மாவும் களம் புகுந்தனர். உள்ளே வந்த இவர்கள் ஆரம்பம் முதலே ஒரு தெளிவான திட்டத்தில் இருந்தனர் அது பாகிஸ்தான் பந்து வீச்சை எடுத்ததும் சிதறடிப்பது. அந்த திட்டத்தை அச்சுபிசகாமல் இருவரும் மிகச்சரியாக செய்தனர்.

- Advertisement -

பாகிஸ்தான் அணியுடனான முதல் போட்டியில் மிகச் சிறப்பாக பந்து வீசிய நதிம் ஷா இந்தப் போட்டியில் இந்திய அணியில் துவக்க ஆட்டக்காரர்கள் இடம் வசமாக சிக்கிக் கொண்டார். பவர் பிளேவில் அவர் பந்து வீசிய இரண்டு ஓவரில் 3 சிக்சர்களை இந்திய துவக்க ஆட்டக்காரர்கள் விளாசினார். இந்த ஜோடி 4.2 ஓவர்களில் 50 ரன்களை கொண்டுவந்தது.

இதையடுத்து ஐந்தாவது ஓவரை ஹாரிஸ் ரவுப் வீச வந்தார். அந்தப் பந்தை ஒரு மெதுவான பந்தாக அவர் வீச, தாக்கி ஆட வேண்டும் என்ற முடிவில் இருந்த ரோகித்சர்மா அதைக் கணிக்காமல் அடிக்கப் போய் பந்து வானத்தில் நேராக எழும்பியது. இந்த கேட்சை பிடிக்க பாகிஸ்தான் அணியின் பகர் ஜமான், இப்திகார் என இருவரும் முயற்சி செய்ய, பந்து பகார் ஜமானின் கையில் படாமல், பாகிஸ்தான் அணிக்கு அதிர்ஷ்டவசமாக இப்திகார் கையில் விழுந்தது. துரதிஷ்டவசமாக ரோகித் சர்மா ஆட்டமிழந்தார். அவர் 16 பந்துகளில் 3 பவுண்டரி 2 சிக்சர்களோடு 28 ரன்கள் எடுத்தார். இதற்கு முன்பு இந்தியா பாகிஸ்தான் மோதிய ஒரு போட்டியில் போட்டியில் பாகிஸ்தான் வீரர் சயீத் அஜ்மல் இப்படி ஒரு கேட்சை தவற விடுவார். ஆனால் இந்தமுறை அதிர்ஷ்டம் பாகிஸ்தான் பக்கம் இருந்தது. இதற்கான காணொளி லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.