மகேந்திர சிங் தோனி இடம் கைவசம் இருக்கும் முறியடிக்க முடியாத மிகப்பெரிய 6 சாதனைகள்

0
4350
Dhoni Stumping

மகேந்திர சிங் தோனி கிரிக்கெட் வாழ்க்கை அவ்வளவு சுலபமாக ஒரு கட்டுரையில் கூறிவிட முடியாது. விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆக இந்திய அணியில் களமிறங்கிய அதன் பின்னர் இந்திய அணிக்கு சர்வதேச போட்டிகளில் கேப்டன் ஆனார். 28 வருடங்கள் கழித்து இந்திய அணியை உலக கோப்பை தொடரில் வெற்றி பெற வைத்தார்.

இந்த மாதிரியான சாதனை பட்டியல் அவரது பெயருக்கு பின்னால் நிறைய இருக்கின்றன. தற்பொழுது அந்த சாதனை பட்டியலில் மிகச்சிறந்த சாதனையாக கருதப்படும் ஒரு சில மிகச்சிறந்த சாதனைகளைப் பற்றி இந்த கட்டுரையில் பார்ப்போம்.

- Advertisement -

1. சர்வதேச தொடரில் மூன்று வகை கோப்பைகளையும் பெற்றுக் கொடுத்த ஒரு கேப்டன்

2007 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக உலக கோப்பை டி20 தொடரில் கேப்டனாக களமிறங்கினார். அதுதான் முதல் உலகக் கோப்பை டி20 தொடர் என்பதும் குறிப்பிடத்தக்கது. பலம் வாய்ந்த அணியாக தென்னாப்பிரிக்கா ஆஸ்திரேலியா போன்ற அணிகள் நிறைய இருந்தாலும், மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய அணி சிறப்பாக விளையாடி முதல் உலகக் கோப்பை டி20 தொடரை கைப்பற்றியது. டோனி என்கிற சகாப்தம் அங்குதான் தொடங்கியதும் குறிப்பிடத்தக்கது.

அதன் பின்னர் நான்கு ஆண்டுகள் கழித்து இந்திய மண்ணில் நடந்த 50 ஓவர் உலகக் கோப்பை தொடரை 28 ஆண்டுகள் கழித்து இந்திய அணிக்காக பெற்றுக் கொடுத்தார். ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் மற்றும் இலங்கை போன்ற அணிகளை நாக்-அவுட் போட்டிகள் மிக சிறப்பாக வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது. குறிப்பாக இறுதிப் போட்டியில் இலங்கை அணிக்கு எதிராக கௌதம் கம்பீர் (97) உடன் இணைந்து இவர் அடித்த 91 ரன்கள் இந்திய அணியின் வெற்றியை உறுதிப்படுத்தியது. இறுதிப்போட்டியில் ஆட்டநாயகன் விருதை மகேந்திர சிங் தோனி வாங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

2013ம் ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரையும் இவர் விட்டு வைக்கவில்லை. இங்கிலாந்தில் நடந்த தொடரில் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை கடைசி வரை நிதானமாக விளையாடி வீழ்த்தியது. அதன் மூலமாக ஐசிசி சார்பில் நடத்தப்படும் மூன்று வகை கிரிக்கெட் கோப்பைகளையும் கைப்பற்றிய ஒரே கேப்டன் என்கிற பெருமையை முதல் முறையாக இவர் பெற்றார்.

- Advertisement -

2. ஆறுமுறை டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணியை வழிநடத்திய கேப்டன்

2007ஆம் ஆண்டு முதல் முறையாக இந்திய அணியை உலக கோப்பை டி20 தொடரில் வழிநடத்தினார். அந்த தொடரில் இந்திய அணி கோப்பையை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

அதுபோலவே 2009, 2010, 2012, 2014 மற்றும் 2016 ஆம் ஆண்டு வரை இந்திய அணியை உலக கோப்பை டி20 தொடரில் இவர் தலைமை தாங்கி இருப்பதும் குறிப்பிடத்தக்கது. அதில் 2014 ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில் இலங்கை அணிக்கு எதிராக இந்திய அணி தோல்வி பெற்றது. அதுபோலவே 2016 ஆம் ஆண்டு அரையிறுதி ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக இந்திய அணி தோல்வி பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

மொத்தமாக ஆறு முறை ஒரு அணியை உலக கோப்பை டி20 தொடரில் வழிநடத்திய கேப்டனாக மகேந்திரசிங் தோனி திகழ்கிறார். இதுபோல இன்றைய காலகட்டத்தில் ஒரு கேப்டன் ஆறு அல்லது அதற்கு மேல் தன்னுடைய அணியை இது போல உலக கோப்பை டி20 தொடரில் வழி நடத்துவாரா என்பது சந்தேகம் தான்.

3. சர்வதேச போட்டிகளில் அதிக முறை தன்னுடைய அணியை தலைமை தாங்கிய ஒரு கேப்டன்

2007ஆம் ஆண்டு மகேந்திர சிங் தோனி இந்திய அணிக்கு முதல் முறையாக கேப்டனாக நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் ஒரு நாள் டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகள் என அனைத்திற்கும் மகேந்திர சிங் தோனி தான் கேப்டனாக இந்திய அணியை வழி நடத்தினார். மொத்தமாக இதுவரை 332 போட்டிகளில் இந்திய அணியை சர்வதேச அளவில் தலைமை தாங்கி இருக்கிறார். வேறு எவரும் இவ்வளவு போட்டிகள் சர்வதேச அளவில் தலைமை தாங்கியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது ஒவ்வொரு கிரிக்கெட் பார்மெட்டிற்கும் தனித்தனி கேப்டன்களை ஒவ்வொரு கிரிக்கெட் நிர்வாகமும் நியமிக்க தொடங்கிவிட்டது. எனவே அதன் அடிப்படையில் பார்த்தால் இனி எந்த ஒரு கேப்டனும் மகேந்திர சிங் தோனி போல் இவ்வளவு போட்டிகள் சர்வதேச அளவில் தலைமை தாங்க முடியாது என்பதுதான் உண்மை.

4. சர்வதேச அளவில் அதிக முறை ஸ்டெம்பிங் செய்த ஒரு வீரர்

மகேந்திர சிங் தோனி மொத்தமாக 538 சர்வதேச போட்டிகளில் விளையாடி 195 ஸ்டெம்பிங் செய்துள்ளார். அதிகமுறை ஸ்டம்பிங் செய்த வீரர்கள் இவர் தான் முதலிடத்தில் உள்ளார். இவருக்கு அடுத்தபடியாக இலங்கையை சேர்ந்த குமார் சங்ககாரா 139 முறை ஸ்டெம்பிங் செய்து இரண்டாவது இடத்தில் உள்ளார்.

ஒரு திறமையான விக்கெட் கீப்பரால் மட்டுமே மகேந்திர சிங் தோனி அமைத்த வைத்துள்ள இந்த சாதனையை முறியடிக்க முடியும். ஆனால் அதற்கும் ஒரு சில ஆண்டுகள் எடுத்துக் கொள்ளப் படும் என்பது குறிப்பிடத்தக்கது.

5. ஒருநாள் போட்டிகளில் அதிக முறை நாட் அவுட்

மஹென்ற சிங் தோனி ஒருநாள் போட்டியில் நிறைய முறை இந்திய அணிக்காக கடைசி நேரத்தில் இறங்கி விளையாடி அணியை வெற்றி பெறச் செய்திருக்கிறார். இதன் காரணமாகவே இவர் நிறைய போட்டிகளில் அவுட்டாகாமல் கடைசிவரை நிலைத்து நின்று இருப்பார். மொத்தமாக 350 ஒருநாள் போட்டிகளில் 84 முறை இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்திருக்கிறார். இதன்மூலம் ஒருநாள் போட்டிகளில் அதிக முறை நாட் அவுட் ஆகாமல் நிலைத்து நின்ற வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் மகேந்திர சிங் தோனி உள்ளார்.

இவருக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் சமிந்தா வாஸ் மற்றும் ஷான் பொல்லாக் ஆகிய இருவரும் 72 முறை ஒரு நாள் போட்டிகளில் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்த இருக்கின்றனர்.

6. உலகக் கோப்பை தொடரை சிக்சர் அடித்து வெற்றி பெற்ற சாதனை

2011 ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பை தொடரில் இலங்கை அணிக்கு எதிராக மகேந்திர சிங் தோனி சிக்ஸர் அடித்து இந்திய அணியை வெற்றி பெறச் செய்தார். ஒரு உலகக் கோப்பை தொடரின் இறுதி போட்டியில், அணிக்கு தேவைப்படும் வெற்றி ரன்களை சிக்சர் மூலமாக எடுத்த வீரர் என்கிற சாதனையையும் மகேந்திர சிங் தோனி விட்டுவைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.