155 கிலோமீட்டர் வேகத்தில் ஆட்டத்தை மாற்றிய உம்ரான் மாலிக்; வீடியோ இணைப்பு!

0
643
Umranmalik

இந்திய அணி ஹர்திக் பாண்டியா தலைமையில் இந்தியா வந்துள்ள இலங்கை அணி உடன் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் தற்பொழுது விளையாடி வருகிறது!

இந்தத் தொடரின் முதல் போட்டி இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடந்தது. இந்திய அணியில் இந்த ஆட்டத்தில் கில் மற்றும் சிவம் மாவி இருவரும் அறிமுகமானார்கள்.

- Advertisement -

முதலில் டாசில் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணிக்கு கில் மற்றும் சூர்யா இருவரும் ஏழு ரன்களில் வெளியேறி ஏமாற்றம் தந்தார்கள். இசான் கிசான் 37 ரன்கள் ஹர்திக் பாண்டியா 29 ரன்கள் எடுத்து ஓரளவு அணியை மீட்டார்கள்.

இதற்கு அடுத்து ஜோடி சேர்ந்த தீபக் ஹூடா மற்றும் அக்சர் பட்டேல் இருவரும் இணைந்து 68 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்திய அணியை 162 ரன்கள் எட்ட வைத்தார்கள். இவர்கள் 41 ரன் மற்றும் 31 எடுத்தார்கள்.

இதற்கடுத்து களமிறங்கிய இலங்கை அணியின் விக்கெட்டுகளை அறிமுக வீரர் சிவம் மாவி ஆரம்பத்தில் அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதை எடுத்து ஆட்டம் இந்திய அணியின் பக்கம் வந்தது.

- Advertisement -

ஆனால் இந்திய அணியுடன் சிறப்பாக விளையாடும் பழக்கத்தை வைத்துள்ள இலங்கை கேப்டன் சனகா திடீரென்று அதிரடியாக ஆட ஆரம்பித்து ஓவருக்கு 10 ரன்கள் அடித்தால் போதும் என்று கடைசி கட்டத்தில் கொண்டு வந்து திடீர் அச்சத்தை ஏற்படுத்தினார்.

அவர் 45 ரன்கள் எடுத்து களத்தில் இருக்க பந்து வீசும் வந்த உம்ரன் மாலிக் தனது வேகத்தால் அவரை திணறடித்தார். எக்ஸ்ட்ரா கவர் திசையில் தூக்கி அடிப்பதற்கு ஏதுவாக ஒரு பந்தை அவர் வீச, அந்தப் பந்தை சனகா அடிக்க, அது உள் வட்டத்தில் நின்ற சாகலிடம் கேட்ச் ஆனது. இதற்குக் காரணம் மணிக்கு 155 கிலோ மீட்டர் வேகத்தில் அந்த பந்து வீசப்பட்டதால் தான் அதை சரியாக தூக்கி அடிக்க முடியவில்லை. உம்ரான் மாலிக்கின் வேகம் இந்திய அணிக்கு ஆட்டத்தில் பெரிய திருப்புமுனையை உருவாக்கித் தந்தது. இதை அடுத்து இந்த ஆட்டத்தில் இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

உம்ரான் மாலிக் இந்தப் பந்தை தவறான திசையில் வீசி இருந்தாலும் பந்து அதி வேகமாக வீசப்பட்டதால் பேட்ஸ்மேனால் அடிக்க முடியவில்லை. இதை களத்தில் நின்ற கேப்டன் ஹர்திக் பாண்டியா உணர்ந்து விக்கெட் கிடைக்கவும் சிரிக்கச் செய்தார். இதே வேகம் குறைவான வேறு யாராவது வீசி இருந்தால் அந்த பந்து குறைந்தபட்சம் 4 ரன்கள் ஓடி இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது!