உம்ரான் மாலிக் பவுலிங் இனிமே எடுபடாது.. எல்லாரும் கண்டுபுடிச்சிட்டாங்க – முன்னாள் பாகிஸ்தான் வீரர் கருத்து!

0
440

உம்ரான் மாலிக் பவுலிங் இனிமேல் எடுபடாது என கடுமையாக விமர்சித்து இருக்கிறார் சல்மான் பட்.

இந்திய அணியின் அதிவேக பந்துவீச்சாளர் உம்ரான் மாலிக், இலங்கை அணியுடன் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியின் போது 155 கிலோ மீட்டர் வேகத்தில் பந்துவீசி சர்வதேச போட்டிகளில் இந்திய வீரர் வீசிய அதிவேக பந்துவீச்சு என்ற சாதனையை படைத்தார்.

அதே போட்டியில் முதல் மூன்று ஓவர்களில் நன்றாக கட்டுப்படுத்தி வீசினார். ஆனால் கடைசியில் 20 ரன்களுக்கு மேல் வாரிக்கொடுத்துவிட்டார். அதற்கு முன் மூன்று போட்டிகளிலும் ரன்களை வாரி கொடுத்ததால் இவரது எக்கனாமி 12க்கும் மேல் இருந்தது.

இதனை குறிப்பிட்டு உம்ரான் மாலிக் வேகமாக பந்துவீசுகிறாரே தவிர, அவரது பந்துவீச்சில் விவேகம் இல்லை என கடுமையாக விமர்சித்ததோடு.. அவரை எப்படி விளையாட வேண்டும் என்று பலரும் கணித்துவிட்டனர் என பேசியுள்ளார் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சல்மான் பட். அவர் பேசியதாவது:

“வெகுசில போட்டிகளிலேயே வேகம் என்பது எடுபடும். பல போட்டிகளில் சுலோ-பந்து, ஸ்விங் பந்து என பலவற்றை பயன்படுத்த வேண்டும். உம்ரான் மாலிக் அப்படி பயன்படுத்துவது போல தெரியவில்லை. குறிப்பாக டெத் ஓவர்களில் படுமோசமாக வீசுகிறார்.

அவரின் பந்துவீச்சை கண்டுபிடித்து விட்டார்கள். எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று பலரும் தெரிந்து கொண்டதால், ஒவ்வொரு போட்டியிலும் திணறுகிறார். இப்படியே சென்று கொண்டிருந்தால் அவரது பந்துவீச்சு எடுபடாது. பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும். அணி நிர்வாகம் அவருக்கு என்ன அறிவுரைகளை கூறப்போகிறது என்று.” என விமர்சித்தார்.