எனக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட் கேப்டன் இவர்தான் ; ஒரு வாய்ப்பு கிடைத்தால் இவருடன் டின்னர் டேட் செல்வேன் – உம்ரான் மாலிக்கின் பதில்

0
1099
Umran Malik

22 வயதான ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த இளம் வேகப்பந்து வீச்சாளரான உம்ரான் மாலிக் கடந்த ஒரு ஆண்டில் பல வாய்ப்புகளை தட்டிப் பறித்தார். கடந்த ஆண்டு துவக்கத்தில் ஜம்மு காஷ்மீர அணிக்காக முதல் முதலாக சையது முஷ்டாக் அழி டிராபி தொடரில் களமிறங்கினார். பின்னர் பிப்ரவரி மாதம் லிஸ்ட் ஏ போட்டிகளில் ஜம்மு-காஷ்மீர் அணிக்காக விளையாட தொடங்கினார்.

இவரது சிறப்பான பந்துவீச்சை பார்த்த ஹைதராபாத் அணி நிர்வாகம் நெட் பௌலராக இவரை தங்களது அணியில் தேர்ந்தெடுத்தது. கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் நடராஜன் காயம் காரணமாக வெளியேற, இவர் அவருக்கு மாற்று வீரராக ஐதராபாத் அணியில் உள் நுழைந்தார். கொல்கத்தா பெங்களூரு மற்றும் மும்பை அணிகளுக்கு எதிராக மூன்று போட்டியில் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் உம்ரான் விளையாடினார்.

- Advertisement -

கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 4 ஓவர்களில் 27 ரன்கள், பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் 4 ஓவர்களில் ஒரு விக்கெட் கைப்பற்றி 21 ரன்கள் மற்றும் மும்பைக்கு எதிரான போட்டியில் 4 ஓவர்களில் 48 ரன்கள் விட்டுக் கொடுத்தார். பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் ஒரு ஓவருக்கு தொடர்ச்சியாக 5 பந்துகளை 150 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் வீசி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.

இவரது திறமையைக் கண்ட இந்திய கிரிக்கெட் நிர்வாகம் உலக கோப்பை டி20 தொடரில் இவரை நெட் பௌலராக தேர்ந்தெடுத்துக் கொண்டது. கடந்த ஆண்டு இறுதியில் தென் ஆப்பிரிக்கா ஏ அணிக்கு எதிராக இந்திய ஏ அணியிலும் இடம் பெற்று விளையாடினார். அதுமட்டுமின்றி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்வாகம் இவரை 4 கோடி ரூபாய்க்கு கடந்த ஆண்டு இறுதியில் இனி வரும் ஐபிஎல் தொடருக்காக தக்க வைத்தும் கொண்டது.

மகேந்திர சிங் தோனியை பற்றி புகழ்ந்து பேசிய உம்ரான் மாலிக்

சமீபத்தில் மாலிக் கிடம் நடந்த ஒரு உரையாடலில், கேள்வி பதில் தொகுப்பு முன்னெடுத்து வைக்கப்பட்டது. அதில் உங்களைப் பொறுத்த வரையில் அனைத்து காலகட்டத்திற்கும் ஏற்ற சிறந்த கேப்டன் யார் என்ற கேள்வி முதலில் முன்னெடுத்து வைக்கப்பட்டது. அந்தக் கேள்விக்கு சற்றும் யோசிக்காமல் “மகேந்திர சிங் தோனி தான் அனைத்து காலகட்டத்திற்கு ஏற்ற சிறந்த கேப்டன்” என்று பதிலளித்தார்.

- Advertisement -

பின்னர் ஒரு கேள்வியில் நீங்கள் ஒரு நபருடன் டின்னர் டேட்டிங் செய்ய விரும்பினால் யாரை தேர்ந்தெடுப்பீர்கள் என்று கேட்கப்பட்டது. அந்தக் கேள்விக்கும் சற்றும் யோசிக்காமல் “எனக்கு அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் மகேந்திரசிங் தோனியுடன் நான் டின்னர் டேட் செல்வேன்” என்று பதில் அளித்துள்ளார்.