” உம்ரான் மாலிக்கிட்ட வேகம் இருக்கு விவேகம் இல்லை!” பாகிஸ்தான் வீரர் விமர்சனம்!

0
230
Salmam Butt

இந்தியா வந்துள்ள இலங்கை அணி தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒரு நாள் தொடர்களில் விளையாட இருக்கிறது!

தற்போது முதலில் நடைபெற்று வரும் டி20 தொடரில் மோதி வருகிறது. இந்தத் தொடரில் முதல் இரண்டு போட்டிகள் நடந்திருக்க முதல் போட்டியில் இந்தியாவும் இரண்டாவது போட்டியில் இலங்கையும் வென்று தற்பொழுது தொடர் சமநிலையில் இருக்கிறது!

- Advertisement -

நேற்று இந்தத் தொடரின் இரண்டாவது போட்டி மகாராஷ்டிரா புனே மைதானத்தில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சின் போது பவர் பிளேவில் இந்திய அணி பெரிய அளவில் சொதப்பி தோல்வியை தழுவியது.

இந்த ஆட்டத்தில் இந்தியாவின் அதிவேகப் பந்துவீச்சாளர் உம்ரான் மாலிக் பந்துவீச்சு நன்றாக இருந்தது. அவர் மூன்று விக்கட்டுகளை வீழ்த்தினார் ஆனால் அதற்கு 48 ரண்களை விட்டுக் கொடுத்தார். இது அவரிடம் ஒரு கவலைக்குரிய அம்சமாக இருக்கிறது.

இது குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் துவக்க ஆட்டக்காரர் சல்மான் பட் கூறுகையில் ” அனுபவத்தால் மட்டுமே நாம் சிறப்பாக வர முடியும். அனுபவம் இல்லாததால் உம்ரான் மாலிக் நிறைய ரன்களை விட்டுக் கொடுத்தார். அவரின் ரிதம் ஆக்சன் வேகம் எல்லாமே மிக நன்றாக இருந்தது. பிரச்சனை என்னவென்றால் அவருக்கு எதிரே இருந்த பேட்ஸ்மேன் அனுபவசாலி மற்றும் புத்திசாலி. அவர் உம்ரான் மாலிக்கின் வேகத்தை மிகச் சிறப்பாக பயன்படுத்திக் கொண்டார். உம்ரான் மாலிக் வேகப் பந்துவீச்சு யூகிக்கக்கூடிய ஒன்று. அவர் யார்க்கர்களையோ அல்லது மெதுவான பந்துகளையும் வீசவில்லை!” என்று தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

மேலும் இதை விளக்கிப் பேசிய அவர்
” பேட்ஸ்மேன் பந்தை அடிக்க இடம் கொடுத்து நகர்ந்து விளையாடியதை அவர் பார்த்தார். அவர் ஆப் ஸ்டெம்புக்கு வெளியே யார்க்கர்களை அப்பொழுது வீசி இருக்கலாம். இல்லை கொஞ்சம் மெதுவான பந்துகளை வெளியே வீசி இருக்கலாம். ஆனால் அவர் அப்படி எதையும் செய்யவில்லை. எனவே அனுபவம் முக்கியம். அதேபோல் வெளியில் அமர வைக்கப்பட்டு இருந்தால் அனுபவம் வராது. எனவே அவருக்கு தொடர்ந்து விளையாட வாய்ப்பு அளிக்க வேண்டும் ” என்று கேட்டிருக்கிறார்!