2022 ஐபிஎல் தொடரில் லாக்கி பெர்குசன் வீசிய 153.9 கி.மீ வேகப்பந்தை விட அதிவேகமாக வீசி உம்ரான் மாலிக் சாதனை – வீடியோ இணைப்பு

0
388
Lockie Ferguon and Umran Malik

ஐ.பி.எல் பதினைந்தாவது சீஸன் நட்சத்திர வீரர்கள் சறுக்கவும், இளம் வீரர்கள் நட்சத்திரங்கள் ஜொலிக்கவும், சாம்பியன் அணிகள் தொடர் தோல்விகளால் நிலைகுலையவும், புதிய அணிகள் தொடர் வெற்றிகளால் வாய்ப்பை உறுதி செய்யவும் என்று, எதிர்பாராத திருப்பங்களோடு பரபரப்பாய் நடந்து வருகிறது.

ரவீந்திர ஜடேஜா கேப்டன் பதவியிலிருந்து விலகி இருக்க, தோனி மீண்டும் பொறுப்பை எடுத்துக்கொண்டு, ஹைதராபாத் அணியை எதிர்த்து சென்னை அணியை வழிநடத்த வந்திருக்கிறார். ஹைதராபாத் அணி தனது பலமான வேகப்பந்து வீச்சு படையைக்கொண்டு தாக்க, டாஸை வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது!

- Advertisement -

சென்னை அணியின் பேட்டிங்கை துவங்க வந்த கான்வோ-ருதுராஜ் ஜோடி முதலில் மெதுவாக ஆரம்பித்து, பின்பு தாக்க ஆரம்பித்திருக்கிறது. குறிப்பாக கடந்த ஐ.பி.எல் தொடரின் கதாநாயகன் ருதுராஜிக்கும், இந்த ஐ.பி.எல் தொடரின் கதாநாயகன் அதிவேக உம்ரான் மாலிக்கும் இடையே ஒரு தனிப்பட்ட போட்டியே நடந்து வருகிறது.

உம்ரான் மாலிக் பவர்-ப்ளே முடிந்து வந்த முதல் ஓவரிலேயே எடுத்ததும் தாக்க ஆரம்பித்துவிட்டார் ருதுராஜ். அவர் தாக்க ஆரம்பித்ததுமே உம்ரான் மாலிக் வேகமும் அதிகரிக்க ஆரம்பித்தது. தனது இரண்டாவது ஓவரை வீசவந்த உம்ரான் மாலிக்கை பவுண்டரியால் ருதுராஜ் தாக்க, உம்ரான் மாலிக் அடுத்து ஷார்ட் பந்தாக வீசிய பந்து டாப் எட்ஜ் எடுத்தாலும், கீப்பரின் தலைக்குமேல் பவுண்டரி ஆனது. இந்த பந்தில் ருதுராஜிக்கு அரைசதம் வந்தாலும், இந்த பந்துதான் இந்தத் தொடரில் அதிவேகமாக வீசப்பட்ட பந்தாக அமைந்தது. இதன் மூலம் இந்தத் தொடரில் பெர்குசனின் வேக சாதனையை முறியடித்திருக்கிறார் உம்ரான் மாலிக்!

இந்த ஐ.பி.எல் தொடரில் ஐந்து அதிவேக பந்துகள்

உம்ரான் மாலிக்- மணிக்கு 154 கி.மீ
பெர்குசன் – மணிக்கு 153.9 கி.மீ
உம்ரான் மாலிக் – மணிக்கு 153.3 கி.மீ
உம்ரான் மாலிக் – மணிக்கு 153.1 கி.மீ
உம்ரான் மாலிக் – மணிக்கு 152.9 கி.மீ

- Advertisement -