டி20 உலககோப்பைக்கு செல்லும் இந்திய அணியில் இரண்டு புதிய வீரர்கள் சேர்ப்பு!

0
7782

டி20 உலகக் கோப்பைத் தொடருக்கு செல்லும் இந்திய அணியுடன் மேலும் இரண்டு புதிய வீரர்கள் செல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

டி20 உலக கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் வருகிற அக்டோபர் 16ஆம் தேதி துவங்குகிறது. நவம்பர் இரண்டாம் வாரம் வரை நடைபெறும் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. முன்னணி இந்திய வீரர்களான ஜடேஜா தொடை பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக டி20 உலக கோப்பை தொடரில் இருந்து விலகி உள்ளார். அவருக்கு பதிலாக அக்சர் பட்டேல் உள்ளே எடுத்துவரப்பட்டிருக்கிறார்.

- Advertisement -

இந்நிலையில் சுமார் இரண்டு மாத காலமாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாமல் இருந்த புமரா காயத்திலிருந்து மீண்டு வந்து, மீண்டும் டி20 உலக கோப்பை அணியில் இடம் பிடித்தார். உலக கோப்பை தொடருக்கு முன்னதாக நடைபெறும் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான டி20 தொடரிலும் அவருக்கு இடம் கொடுக்கப்பட்டது.

ஆஸ்திரேலியா தொடர் முடிவுற்ற பிறகு தென் ஆப்பிரிக்கா அணியுடன் டி20 தொடர் துவங்கியது. முதல் டி20 போட்டி திருவனந்தபுரம் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இதில் இந்திய அணி அபாரமாக வெற்றியும் பெற்றது. இப்போட்டியில் பும்ரா பங்கேற்கவில்லை. ஏனெனில் போட்டிக்கு முன்னர் பயிற்சியில் ஈடுபடும்போது, மீண்டும் முதுகுப் பகுதியில் வலி ஏற்பட்டதாகவும் அதற்காக மருத்துவ குழுவிடம் ஆலோசனை நடத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டது.

பும்ராவை பரிசோதித்து மருத்துவர்கள் காயத்தின் தீவிரம் சற்று அதிகமாக இருப்பதால் இன்னும் சில காலம் ஓய்வு தேவை என்று அறிவுறுத்தியுள்ளனர். இதன் அடிப்படையில் பிசிசிஐ முதல் போட்டியில் விளையாட வைக்கவில்லை. காயம் குணமடைய நேரம் எடுக்கும் என்பதால் இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டியில் இருந்து விலகிவிட்டார். அவருக்கு பதிலாக மாற்று வீரர் முகமது சிராஜ் உள்ளே வந்திருக்கிறார்.

- Advertisement -

பும்ராவின் காயம் சற்று தீவிரமாக இருப்பதால் டி20 உலக கோப்பை தொடருக்குள் அவரால் குணமடைய முடியாது. ஆகையால் டி20 உலக கோப்பை தொடரிலிருந்தும் அவர் விலக நேரிடலாம் என்ற அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. பும்ரா விலக நேரிட்டால், ரிசர்வ் வரிசையில் இருக்கும் முகமது சமி மற்றும் தீபக் சகர் இருவரில் ஒருவர் இந்திய அணிக்குள் எடுத்து வரப்படலாம்.

இதற்கிடையில் அக்டோபர் நான்காம் தேதி தென் ஆப்பிரிக்கா அணியுடன் நடைபெறும் மூன்றாவது டி20 போட்டிக்கு பிறகு, இந்திய வீரர்கள் நேரடியாக ஆஸ்திரேலியா செல்கின்றனர். அவர்களுடன் வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது சிராஜ் மற்றும் உம்ரான் மாலிக் இருவரும் செல்வதற்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக பிசிசிஐ வட்டார தகவல்கள் வெளி வருகின்றன. இதனை வைத்துப் பார்க்கையில், பும்ரா நிச்சயம் டி20 உலக கோப்பையில் பங்கேற்க மாட்டார். இந்த நான்கு வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் பும்பராவிற்கு பதிலாக விளையாடுவார் என்று தெரிகிறது.

பும்ராவிற்கு வருகிற ஞாயிற்றுக்கிழமை முழு பரிசோதனை நடைபெறுகிறது. அது முடிந்த பிறகு திங்கட்கிழமை பரிசோதனை அறிக்கை வெளியிடப்படும். அப்போதுதான் பும்ராவால் உலக கோப்பையில் விளையாட முடியுமா? முடியாதா? என்ற தகவல்கள் தெரிவிக்கப்படும் என்று இந்திய அணியின் மருத்துவக் குழு தெரிவித்து இருக்கிறது