பிராவோ வீசிய பந்தை நோ பாலாக அறிவித்ததற்கு கேப்டன் ஜடேஜா தான் காரணம் – விளக்கம் கொடுத்த நடுவர்

0
2214
Bravo No ball for Rayudu field placement

ஐ.பி.எல் சீசனின் 22-வது போட்டியில், ஜடேஜாவின் சென்னை அணியும், பாஃப்பின் பெங்களூர் அணியும், நவிமும்பையின் டி.ஒய்.பாட்டில் மைதானத்தில் மோதி வருகின்றன!

முதலில் டாஸ் வென்ற பெங்களூர் அணி கேப்டன் பாஃப், ட்யூ பிரச்சினையால் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி சென்னைக்குத் துவக்கம் தர வந்த ருதுராஜ் ஏமாற்ற, அடுத்து வந்த மொயீன் அலியும் ஏமாற்றினர். ஆனால் உத்தப்பாவும் சிவம் துபேவும் சேர்ந்து பெங்களூர் அணி பந்துவீச்சை எட்டுத் திசைகளிலும் சிதைத்து விட்டனர்.

- Advertisement -

இருபது ஓவர்களின் முடிவில் உத்தப்பா 88 [50], சிவம் துபே 95 [46] ஆகியோரின் சிறப்பான பங்களிப்பில் சென்னை அணி 215 ரன்களை குவித்தது. ராபின் உத்தப்பா, சிவம் துபே ஜோடி இந்த ஆட்டத்தில் மொத்தம் பதினேழு சிக்ஸர்களை விளாசியது குறிப்பிடத்தக்கது.

அடுத்து மிகப்பெரிய இலக்கோடு களமிறங்கிய பெங்களூர் அணியின் கேப்டன் பாஃப்-அனுஜ் ஜோடியை தீக்சனா வெளியேற்றினார். விராட்கோலியை முகேசும், மேக்ஸ்வெலை கேப்டன் ஜடேஜாவும் வெளியேற்ற, 50 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து விட்டது பெங்களூர்.

ஆனால் அதற்கடுத்து ஜோடி சேர்ந்த ஷாபாஸ் அகமத், சுயாஸ் பிரபுதேசாய் ஜோடி அதிரடியாய் விளையாட ஆரம்பித்தது. ஜோர்டான், ஜடேஜா, மொயீன் அலி ஓவர்களில் அதிரடி காட்டி 11 ஓவர்களில் 100 ரன்களை தாண்டி எடுத்துச் சென்றனர்.

- Advertisement -

இந்த நிலையில் பிராவோ ஓவரில் பிராவோ ஓவரில் அரிதான நோ பால் அறிவிப்பு வந்து இரசிகர்களை குழப்பியதோடு வெறுப்பேற்றியது. எதனால் நோ-பால் என்றால், உள்வட்டத்தில் ஒரு பீல்டரை குறைவாக இருந்ததால் இந்த அறிவிப்பு வந்தது. அதாவது நான்கு பீல்டர்கள் வெளியில் இருக்க, பவுலர், கீப்பர் தவிர ஐந்து பீல்டர்கள் உள்வட்டத்தில் இருக்க வேண்டும் என்பது விதி!

மேலும் பேட்டிங் கிரீஸ் அளவிலிருந்து, அதாவது லெக்-ஸைட் ஸ்கொயர்-லெக் பகுதியிலிருந்து பின்புறமாய் இரண்டு பீல்டர்களுக்கு மட்டுமே அனுமதி. ஆனால் இந்த நேரத்தில் அந்தப் பகுதியில் மூன்று பீல்டர்கள் கவனக்குறைவாய் நின்றிருந்ததால் நோ-பால் என அறிவிக்கப்பட்டது! இதைக் கேப்டன் ஜடேஜா தான் சரி பார்த்திருக்க வேண்டும்.