அதிரடி ஃபார்மில் கொல்கத்தா பவுலர் ; பஞ்சாப் அணிக்கு எதிராக சுனில் நரைன் செய்திருந்த சாதனையை உடைத்த உமேஷ் யாதவ்

0
93
Sunil Narine and Umesh Yadav

ஐ.பி.எல்-ன் ஏழாவது நாளான இன்று எட்டாவது ஆட்டத்தில் ஷ்ரேயாஷ் தலைமையிலான கொல்கத்தா அணியும் மயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதி வருகின்றன.

பனிப்பொழிவு ஆட்டத்தின் முடிவில் ஆதிக்கம் செலுத்துவதால், முதலில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் ஸ்ரேயாஷ் பந்துவீச முடிவு செய்தார். இதன்படி பஞ்சாப்பை ஆட்டத்தைத் துவக்க வந்த மயங்க் அகர்வாலை உமேஷ் யாதவ் முதல் ஓவரிலேயே வெளியேற்றினார்.

- Advertisement -

ஆனால் அடுத்து வந்த இலங்கையின் பனுகா ராஜபக்சே சிவம் மாவியின் முதல் ஓவரில் 4, 6, 6, 6 என்று ருத்ரதாண்டவம் ஆடி, அதே ஓவரில் 31 [9] என ஆட்டத்தையும் இழந்தார். இவருக்குப் பின் பெரிதாய் யாரும் பேட்டிங்கில் சோபிக்காததால், இருபது ஓவரின் முடிவில் 137 ரன்களுக்கு பஞ்சாப் சுருண்டது.

இதில் அடிப்படை விலையில் ஏலத்தில் வாங்கப்பட்ட இந்திய வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் மிகச்சிறப்பாக 4 ஓவர்கள் பந்துவீசி 1 மெய்டனோடு 23 ரன்கள் தந்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். ஐ.பி.எல் தொடரில் அவரது சிறந்த பந்து வீச்சு இதுதான்!

மேலும் 15 வருட ஐ.பி.எல் வரலாற்றில் பஞ்சாப் அணிக்கெதிராக அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் என்ற சாதனையையும் நிகழ்த்தியிருக்கிறார். மேலும் ஒரு அணிக்கெதிராக அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் என்ற சாதனையையும் நிகழ்த்தி இருக்கிறார். ஒரே ஆட்டத்தில் இரு ஐ.பி.எல் சாதனைகளை உமேஷ் யாதவ் படைத்திருக்கிறார்!

- Advertisement -

உமேஷ் யாதவ் – பஞ்சாப் – 33
சுனில் நரைன் – பஞ்சாப் – 32
லசித் மலிங்கா – சென்னை – 31
டிவைன் பிராவோ – மும்பை- 31
அமித் மிஸ்ரா – ராஜஸ்தான்- 30