நெதர்லாந்து வீரரை தமிழில் பேசி திட்டம்போட்டு தூக்கிய இரண்டு தமிழர்கள்; டி20 உலகக்கோப்பை நெதர்லாந்து / யுஏஇ!

0
6258
Uae vs Ned

எட்டாவது டி20 உலகக் கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் இன்று தகுதி சுற்று போட்டிகள் மூலம் துவங்கியது. முதல் போட்டியிலேயே இலங்கையை நமிபியா வீழ்த்தி அட்டகாசமாக ஆரம்பித்திருக்கிறது டி20 உலகக்கோப்பை தொடர்!

இரண்டாவது போட்டியாக தகுதிச்சுற்று ஏ குழுவில் இடம்பெற்றுள்ள நெதர்லாந்து மற்றும் யுஏஇ அணிகளுக்கு இடையே கீலாங் மைதானத்தில் இரண்டாவது போட்டி நடந்து வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற யுஏஇ முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

- Advertisement -

யுஏஇ அணியின் தொடக்க ஆட்டக்காரர் முகமது வாசிம் மட்டும் தாக்குப்பிடித்து 47 பந்துகளில் 41 ரன்கள் அடித்தார். மற்ற யாரும் பெரிதாக ரன்கள் அடிக்கவில்லை. இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் யுஏஇ அணி 8 விக்கெட் இழப்பிற்கு 111 ரன்கள் எடுத்தது. நெதர்லாந்து தரப்பில் பாஷ் டி லீட் 3 ஓவர்கள் பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து எளிய இலக்கை நோக்கி விளையாட ஆரம்பித்தது நெதர்லாந்து அணி. இந்த இன்னிங்ஸ் போது யுஏஇ அணிக்காக விளையாடும் லெக் ஸ்பின்னர் திருச்சி தமிழகத்தை பூர்விகமாக கொண்ட கார்த்திக் மெய்யப்பன் பஷ் டி லீடுக்கு பந்துவீசினார். அப்போது விக்கெட் கீப்பராக யு ஏ இ அணியில் உள்ள சென்னை தமிழகத்தை பூர்விகமாகக் கொண்ட அரவிந்த், பஷ் டி லீட்க்கு லெக் ஸ்பின் போட வேண்டுமென்றும், இன்னொரு பேட்ஸ்மேனுக்கு கூக்ளி வீசலாம் என்றும் தமிழில் கூறினார்.

விக்கெட் கீப்பர் அரவிந்த் கூறியபடி பஷ் டி லீடுக்கு கார்த்திக் மெய்யப்பன் லெக் ஸ்பின் வீச, அவர் அடித்து பந்து ரிஸ்வான் இடம் கேட்ச்சாகி ஆட்டமிழந்தார். தமிழகத்தைச் சேர்ந்த இரு வீரர்களும் காலத்தில் தமிழில் பேசி திட்டம் தீட்டி விக்கெட் வீழ்த்தியதை பார்ப்பதற்கு சுவாரசியமாக இருந்தது.

- Advertisement -

இந்த ஆட்டத்தில் நெதர்லாந்து அணி வெல்லும் பட்சத்தில், அடுத்து நெதர்லாந்து இலங்கை அணி மோதும் போட்டி ஒரு நாக் அவுட் போட்டி போல அமையும். ஏனென்றால் அந்தப் போட்டியில் வெல்லும் பட்சத்தில் நெதர்லாந்து அடுத்த சுற்றுக்கு நுழையும். அதே சமயத்தில் இலங்கை தோற்றால் உலகக்கோப்பை விளையாடாமலே நாடு திரும்ப வேண்டியதுதான்.