ஐசிசி தரவரிசை பட்டியலில் அனைத்து பார்மட்களிலும் நம்பர் 1 இடத்தில் இருந்த வீரர்களின் பட்டியல்

0
672
Virat Kohli

ஐசிசி தரவரிசை பட்டியலில் மூன்று வித கிரிக்கெட் போட்டிகளிலும் முதல் இடத்தை பிடித்திருந்த இரண்டு வீரர்களின் பட்டியலை இங்கே காண்போம்.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 1998 ஆம் ஆண்டு முதல் தரவரிசை பட்டியல் முறை ஐசிசி நிர்வாகத்தால் அறிமுகப்படுத்தப்பட்டு இன்றுவரை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. துவக்கத்தில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே தரவரிசை பட்டியல் இருந்து வந்தது.

- Advertisement -

கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக டி20 போட்டிகளின் அமோக வரவேற்பினால் அதிலும் தரவரிசை பட்டியல் அறிமுகப்படுத்தப்பட்டு தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகிறது. அணியின் தரவரிசை, பேட்ஸ்மேன், பந்துவீச்சாளர் மற்றும் ஆல்ரவுண்டர் என தனித்தனியாக தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது.

இதுவரை வெளியிடப்பட்ட தரவரிசை பட்டியலில் டெஸ்ட், ஒருநாள்
மற்றும் டி20 போட்டிகள் என மூன்று வித போட்டிகளிலும் நம்பர் ஒன் இடத்தில் இருந்த வீரர்களின் பட்டியலை நாம் இங்கே காணவிருக்கிறோம். இதுவரை வரலாற்றில் இரண்டு வீரர்கள் மட்டுமே மூன்று வித போட்டிகளிலும் முதல் இடத்தில் சில காலம் இருந்திருக்கின்றனர்.

ரிக்கி பாண்டிங்

ஆஸ்திரேலியா அணிக்கு வரப்பிரசாதமாக பார்க்கப்படும் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவர் ரிக்கி பாண்டிங். ஆஸ்திரேலியா அணிக்காக இரண்டு முறை உலக கோப்பைகளை பெற்றுத் தந்திருக்கிறார். கேப்டன் பொறுப்பில் மட்டுமல்லாது தனிப்பட்ட பேட்டிங்கிளும் அசாத்தியமான பங்களிப்பு கொடுத்து வந்த இவர், அவரது காலகட்டத்தில் தரவரிசை பட்டியலில் அசைக்க முடியாத இடத்தில் திகழ்ந்தார்.

- Advertisement -

சில வருடங்கள் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் முதல் இடத்தில் இருந்திருந்தாலும், டி20 தரவரிசை பட்டியல் அறிமுகப்படுத்தப்பட்ட போது சில வருடங்கள் மட்டுமே விளையாடினார். அப்போது 2005 – 2006 ஆம் ஆண்டு காலகட்டத்தில் டிசம்பர், ஜனவரி ஆகிய இரண்டு மாதங்கள் மூன்றுவித கிரிக்கெட் போட்டிகளிலும் இவர் முதல் இடத்தில் இருந்து இந்த வரலாற்றுச் சாதனை படைத்த முதல் வீரர் ஆனார் ரிக்கி பாண்டிங். 500க்கும் மேற்பட்ட சர்வதேச போட்டிகளில் விளையாடி 27000 குவித்தவர் என்று என்பது குறிப்பிடத்தக்கது. இவர் அனைத்து வித போட்டிகளிலும் சேர்த்து 70 சதங்கள் நடித்திருக்கிறார்.

விராட் கோலி

சமகால கிரிக்கெட் போட்டிகளில் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் மிக முக்கியமானவராக கருதப்படும் முன்னாள் கேப்டன் விராட் கோலி, 2011 ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரை தரவரிசை பட்டியலில் மாமன்னராக விளங்கினார். தொடர்ந்து டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் முதலிடம் வகித்து வந்தார். அத்துடன் சில காலம் டி20 போட்டிகளிலும் இவர் முதல் இடத்தில் இருந்திருக்கிறார். சுமார் 450-க்கும் மேற்பட்ட சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி, 25,000 அதிகமான ரன்களை அடித்திருக்கிறார். 70 சதங்களையும் பூர்த்தி செய்து இருக்கிறார். 2020 ஆம் ஆண்டிற்கு பிறகு விராட் கோலியின் பேட்டிங்கில் சரிவு காணப்பட்டு வருகிறது.

கிரிக்கெட் வரலாற்றில் தற்போது வரை இவர்கள் இருவர் மட்டும் தரவரிசை பட்டியலில் மூன்று வித போட்டிகளில் முதல் இடத்தில் இருந்திருக்கின்றனர்.

சமீபத்தில் வெளியிடப்பட்ட தரவரிசை பட்டியலில், டெஸ்ட் போட்டிகளை பொருத்தவரை ஜோ ரூட் முதல் இடத்தில் இருக்கிறார். டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகளில் பாபர் அசாம் முதல் இடத்தில் உள்ளார். பந்துவீச்சை பொருத்தவரை பேட்கமின்ஸ் மற்றும் ஹேசல்வுட் இருவரும் டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் முதல் இடத்தில் உள்ளனர். ஜஸ்ட்பிரீத் பும்ரா ஒருநாள் போட்டிகளில் முதலிடத்தில் இருக்கிறார்.