டெஸ்ட் கிரிக்கெட்டின் ஒரே இன்னிங்ஸில் பத்து விக்கெட்டுகளையும் வீழ்த்திய இரண்டு வீரர்கள்

0
1110
Anil Kumble

டெஸ்ட் கிரிக்கெட்டில் எதிரணியின் 20 விக்கெட்டுகளை பெறுவதில்தான் வெற்றி தோல்வி தீர்மானிக்கப்படுகிறது. எவ்வளவுதான் பேட்டிங் வீரர்கள் ரன்களை குவித்த வீரர்கள் எதிரணியின் 20 விக்கெட்டுகளை எடுக்கவில்லை என்றால் அந்த ஆட்டத்தில் வெல்ல முடியாது. ஆகவே டெஸ்ட் கிரிக்கெட்டில் பந்து வீச்சு அவ்வளவு முக்கிய பங்கு வகிக்கிறது. ஐந்து நாட்களும் சிறப்பாக ஆடி கடைசியில் ஒரே ஒரு விக்கெட்டை எடுக்க முடியாமல் ஆட்டத்தை டிரா செய்த வரலாறு எல்லாம் கிரிக்கெட்டில் உண்டு. இதன் காரணமாகத் தான் ஒவ்வொரு அணியும் டெஸ்ட் கிரிக்கெட்டில் பந்து வீச்சுக்கு அதிக முக்கியத்துவம் தருகின்றனர். சில நேரங்களில் 3 அல்லது 4 பந்துவீச்சாளர்கள் இணைந்து எதிரணியின் 10 விக்கெட்டுகளை எடுக்க முடியாமல் திணறும் பொழுது, ஒரே பந்துவீச்சாளர் ஒரு இன்னிங்சில் உள்ள எதிரணியின் 10 விக்கெட்டுகளை எடுப்பது அசாத்தியமான நிகழ்வு. அப்படிப்பட்ட நிகழ்வு டெஸ்ட் கிரிக்கெட்டில் இரண்டு முறை நடந்தேறியுள்ளது. அந்த இரண்டு வீரர்கள் யார் என்பதைக் குறித்து இப்போது பார்க்கலாம்.

1.ஜிம் லேக்கர்

1956 ஆம் ஆண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா அணி இங்கிலாந்து சென்று இருந்தது. அதில் நான்காவது டெஸ்ட் ஓல்ட் டிராப் போடு மைதானத்தில் நடந்தது இந்த ஆட்டத்தின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணியின் 9 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். ஒரே ஒரு விக்கெட் மூலமாக சாதனையை பறிகொடுத்து விட்டார் என்று பலர் நினைத்தாலும், அதற்கு அடுத்த இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணியின் 10 விக்கெட்டுகளை கைப்பற்றி உலக சாதனை படைத்தார் ஜிம் லேக்கர். ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தியது ஒரே ஆட்டத்தில் 19 விக்கெட்டுகளை வீழ்த்தியது என்று இரண்டுமே இன்று வரை உலக சாதனையாக தான் இருந்து வருகிறது. எந்த ஒரு முதல்தர ஆட்டத்திலும் இதுவரை 19 விக்கெட்டுகளை ஒரே வீரர் கைப்பற்றியது இல்லை. ஜிம் லேக்கரின் இந்த சாதனையை நினைவு கூறும் வண்ணம் ஆக இந்த ஆட்டத்தை ‘லேக்கர்ஸ் மேட்ச்’ என்று இன்றுவரை குறிப்பிட்டு வருகின்றனர்.

- Advertisement -

2.அணில் கும்ப்ளே

ஜிம் லேக்கரை தொடர்ந்து பல ஆண்டுகளாக இந்த சாதனையை யாரும் நிகழ்த்தவில்லை. ஆனால் 1999ஆம் ஆண்டு இந்திய அணியும் பாகிஸ்தான் அணியும் டெல்லி மைதானத்தில் மோதிக்கொண்ட போது அணில் கும்ப்ளே இந்த சாதனையை மீண்டும் ஒருமுறை படைத்தார். 4வது இன்னிங்சில் 420 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு பாகிஸ்தான் அணி ஆடிக்கொண்டிருந்த போது எடுத்த பிறகும் அந்த அணி ஒரு விக்கெட் கூட இழக்கவில்லை. ஆனால் அதன் பின்பு பந்துவீச வந்தபோது அப்ரிடியை அவுட்டாகி முதல் சரிவை தொடங்கி வைத்தார். அதன் பின்பு விக்கெட்டுகள் மடமடவென விழ விழ, விழுந்த அத்தனை இருக்கட்டுமே கும்பலின் கை வசம் சென்றது. 9 விக்கெட்டுகளை கைப்பற்றிய பிறகு மொத்த இந்திய அணியும் கும்ப்ளே 10 விக்கெட் எடுக்க வேண்டுமென உதவியது. குறிப்பாக ஸ்ரீநாத் தனது ஓவரில் விக்கெட் விழுந்து விடக்கூடாது என்பதற்காக ஒரு ஓவர் முழுவதும் வைடாகவே வீசினார். கடைசியாக ஆட்டத்தின் 60 ஆவது ஓவரில் வாசிம் அக்ரமை அவுட்டாக்கி ஒரேவித ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய மற்றொரு வீரர் என்ற சாதனையை படைத்தார் அணில் கும்ப்ளே.