வருகிறது இரண்டு புதிய ஐபிஎல் அணிகள் – நீங்கள் ஒரு ஐபிஎல் அணியை வாங்க வேண்டும் என்றால் உங்களிடம் எவ்வளவு கோடி இருக்க வேண்டும் தெரியுமா ?

0
145

வரும் செப்டம்பர் 19ஆம் தேதி முதல் ஐபிஎல் தொடர் மீண்டும் தொடங்க உள்ளது. கொரோனா பெருந்தொற்று காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. அப்படி தள்ளி வைக்கப்பட்ட போட்டிகள் எல்லாம் மீண்டும் செப்டம்பர் மாதம் ஐக்கிய அரபு அமீரக மைதானங்களில் நடக்க இருக்கிறது. இந்த ஆண்டு நடக்க இருக்கும் இந்த தொடர் தான் எட்டு அணிகள் பங்கேற்கும் கடைசி ஐபிஎல் தொடர் ஆகும். அடுத்த ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் 10 அணிகள் பங்கேற்கும் என்று பிசிசிஐ முன்னமே அறிவித்துவிட்டது.

தற்போது அந்த இரண்டு புதிய அணிகளுக்கான ஏலம் தொடங்க உள்ளது. ஒரு அணியை ஏறும் கேட்பதற்கான குறைந்தபட்ச விலையாக 2,000 கோடி ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதலில் 1700 கோடி ரூபாயாக இருந்த இந்த தொகை தற்போது 2,000 கோடி என்று இறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த ஏலம் வெற்றிகரமாக நிறைவு பெற்ற பின்பு பிசிசிஐ போர்டுக்கு சுமார் 5,000 கோடி ரூபாய் வரை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

மேலும் இந்த ஏலத்தில் கலந்து கொள்வதற்கு bidding document என்ற பத்திரத்தை வாங்க வேண்டும். இந்த பத்திரத்தின் விலை 75 கோடி என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எல்லாராலும் இந்த பத்திரத்தை வாங்கி விட முடியாது. ஆண்டு வருமானம் 3000 கோடிகளுக்கு மேல் இருக்கும் நிறுவனங்களால் மட்டும்தான் இந்த பத்திரத்தையே வாங்க முடியும். அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சுமார் 74 ஆட்டங்கள் இருப்பதால் பல முன்னணி நிறுவனங்கள் இந்த இரண்டு அணிகளுல் ஒன்றை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றன.

சஞ்சீவ் கோயங்கா – ரைசிங் புனே சூப்பர்ஜயன்ட்ஸ் உரிமையாளர்

அதானி நிறுவனம், சஞ்சீவ் கோயங்கா நிறுவனம் போன்ற பல முன்னணி நிறுவனங்கள் ஐபிஎல் தொடரில் தங்களின் முத்திரையைப் பதிக்க ஆவலோடு காத்திருக்கின்றனர். புதிதாக கட்டப்பட்டுள்ள 2 முக்கிய மைதானங்கள் ஆன நரேந்திர மோடி மைதானம் மற்றும் அடல் பிகாரி வாஜ்பாய் மைதானம் என இந்த இரண்டு மைதானங்களை அடிப்படையாகக் கொண்டு தான் இரண்டு அணிகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அகமதாபாத் மற்றும் லக்னோ என்று இரண்டு பெரிய நகரங்களின் பெயரில்தான் அணிகள் வரும் என்று எதிர்பார்க்கலாம்.

கடைசியாக 10 ஆண்டுகளுக்கு முன்பு 2011 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் 10 அணிகள் பங்கேற்றன அதன் பிறகு பல சிக்கல்கள் காரணமாக 9 அணிகள் குறைக்கப்பட்டது. 2014 ஆம் ஆண்டு முதல் மீண்டும் எட்டு அணிகள் கொண்ட தொடரில் நடத்தப்பட்டு வருகிறது. பல ஆண்டுகளுக்கு பிறகு பத்து அணிகள் கொண்ட தொடர் வருவதால் ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.

- Advertisement -