சிஎஸ்கே மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்ப செய்ய வேண்டிய இரண்டு முக்கியமான மாற்றங்கள்!

0
930
CSK

நடப்பு ஐபிஎல் 16ஆவது சீசனில் 9 போட்டிகளில் ஐந்து வெற்றி நான்கு தோல்விகளுடன் 10 புள்ளிகள் எடுத்து புள்ளி பட்டியலில் நான்காவது இடத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இருக்கிறது!

நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் அகமதாபாத் குஜராத் மைதானத்தில் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியுடன் ஆரம்பித்தது.

- Advertisement -

பிறகு லக்னோ, மும்பை, ஹைதராபாத் பெங்களூரு, கொல்கத்தா என ஐந்து அணிகளுடன் வெற்றி பெற்றது. நடுவில் சேப்பாக்கம் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மூன்று ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை இழந்திருந்தது.

இந்த நிலையில் 7 போட்டிகளில் ஐந்து வெற்றிகள் என்று வலுவான நிலையில் இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்பொழுது ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் அணிகளுடன் தொடர்ந்து ஏற்பட்ட இரண்டு தோல்விகளால் ஒன்பது போட்டிகளில் ஐந்து வெற்றிகள் என்று கொஞ்சம் பின்தங்கி இருக்கிறது.

ராஜஸ்தான் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் சென்னை அணியின் பந்து வீச்சுக்கு எதிராக 202 ரன்கள் சேர்த்தது. தொடர்ந்து விளையாடிய சென்னை அணியால் 170 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

- Advertisement -

இதற்கடுத்து நேற்று பஞ்சாப் அணிக்கு எதிராக முதலில் விளையாடி சென்னை 200 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய பஞ்சாப் கடைசி பந்தில் 201 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இந்த இரண்டு ஆட்டங்களிலும் கடைசியில் ரன் ரேட்டை உயர்த்த பேட்ஸ்மேன்களும், ரன்னை கட்டுப்படுத்த பவுலர்களும் தவறி விட்டார்கள். சென்னை அணிக்கு இது இரண்டும் பிரச்சனையாக இருக்கிறது. இந்த இரண்டு பிரச்சனையையும் சரி செய்ய இரண்டு மாற்றங்கள் செய்ய வேண்டியதாக இருக்கிறது.

இந்த ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்கு மொயின் அலியின் பேட்டிங் ஃபீல்டிங் பங்களிப்புகள் பெரிய அளவில் இல்லை. எனவே இவருக்கு பதிலாக வேகப்பந்துவீச்சு ஆள்ரவுண்டர் பென் ஸ்டோக்சை கொண்டு வர வேண்டும். இதன் மூலம் பவர் பிளேவில் ஒரு ஓவர் பந்து வீசவும், நடுவில் பந்து வீசவும்.ஆள் கிடைக்கும். மேலும் ஒரு முழுமையான அதிரடி பேட்ஸ்மேன் ஆகவும் இவர் விளையாடுவார்.

பென் ஸ்டோக்ஸ் வருகையால் பவர் பிளேவில் ஒரு ஓவர் கிடைக்கும் என்பதால், ஆகாஷ் சிங்கை வெளியில் வைத்து, மிடில் மற்றும் டெத் ஓவர்களில் சிறப்பாக பந்து வீசக்கூடிய ஹங்கர்கேகரை உள்ளே கொண்டு வரலாம். இதனால் ஆட்டத்தின் கடைசியில் டெத் ஓவர்களில் ரன்களை வாரி வழங்குவதில் இருந்து கொஞ்சம் தற்காத்துக் கொள்ளலாம். இந்த மாற்றங்கள் மூலம் சென்னை அணி மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்புவதற்கான வாய்ப்புகள் அதிகம்!