“இதுக்குத்தான் தோனி வேணும்கிறது” – ரன் அவுட் மிஸ் செய்த ரிஷப் பண்ட் – வீடியோ!

0
384

தோனியுடன் ஒப்பிட்டு ரிஷப் பன்ட் செய்த தவறை ட்விட்டரில் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

நடைபெற்று வரும் ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றில் இந்திய அணி மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது. முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியிடம் ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இரண்டாவதாக நடந்த இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை மேலும் சிக்கலாக்கி கொண்டது.

- Advertisement -

செப்டம்பர் ஆறாம் தேதி நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்தஇந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக ரோகித் சர்மா 41 பந்துகளுக்கு 72 ரன்கள் விலாசினார். இதில் நான்கு சிக்ஸர்கள் ஐந்து பவுண்டரிகள் அடங்கும். ஒரு கட்டத்தில் இந்திய அணி 200 ரன்கள் எட்டும் என்று இருந்தது. ரோகித் சர்மா ஆட்டமிழந்த பிறகு மற்ற வீரர்களும் அடுத்தடுத்து ஆட்டம் இழக்க இந்திய அணி 173 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சற்று சிக்கலான இலக்கைத் துரத்திய இலங்கை அணிக்கு எந்தவித தடுமாற்றமும் இன்றி துவக்க வீரர்களான நிஷன்கா மற்றும் குசால் மெண்டிஸ் இருவரும் அதிரடியாக விளையாடினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டிற்க்கு 97 ரன்கள் சேர்த்தது. நிஷங்கா 52 ரன்கள், குஷால்57 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தனர். மிடில் ஓவரில் நன்றாக பந்துவீசிய சஹல், ஒரே ஓவரில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை கைப்பற்றி இலங்கை அணிக்கு அழுத்தம் கொடுத்தார். அஸ்வின் மேலும் ஒரு விக்கெட் கைப்பற்றி இந்திய அணி பக்கம் ஆட்டத்தை திருப்பினார்.

நாலு விக்கெட்டுகளை இழந்த இலங்கை அணி சற்று தடுமாறி வந்தது. பின்னர் ஜோடி சேர்ந்த அனுபவ வீரர்களான பானுகா ராஜபக்சே மற்றும் கேப்டன் சனக்கா இருவரும் ஆட்டத்தை கடைசி வரை எடுத்துச் சென்று வெற்றியை பெற்றுக் கொடுத்தனர். போட்டியின் இருபதாவது ஓவரில் இலங்கை அணி வெற்றி பெற ஏழு ரன்கள் தேவைப்பட்டது. முதல் நான்கு பந்துகளில் 5 ரன்கள் எடுக்கப்பட்டுவிட்டது. இரண்டு பந்துகளில் இரண்டு ரன்கள் தேவைப்பட்டபோது சனக்கா பந்தை அடிக்க தவறினார். பந்து கீப்பரிடம் சென்றது. ஆனாலும் ரன் ஓட துவங்கினர். ரிஷப் பன்ட் ரன் அவுட் செய்வதற்கு சிறிது தாமதம் செய்தார். அதன்பிறகும் அவரால் ரன் அவுட் செய்ய முடியவில்லை. அந்த பந்தை பிடித்த அர்சதீப் சிங் மற்றொரு முனையில் பந்தை எரிந்தார். அதைப் பிடிப்பதற்கு யாரும் இல்லை என்பதால் கூடுதல் ஒரு ரன் சென்று இலங்கை அணி வெற்றி பெற்றது.

- Advertisement -

ரிஷப் பண்ட் சரியாக ரன் அவுட் செய்திருக்க வேண்டும் என்று ட்விட்டர் பக்கத்தில் பலரும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இதே போன்ற ஒரு சூழ்நிலையில் வங்கதேச அணிக்கு எதிராக தோனி மிகச் சிறப்பாகவும் சமயோஜிதமாகவும் செயல்பட்டார். ரிஷப் பண்ட் அதுபோன்ற சூழலை பார்த்த பிறகும், அதிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளவில்லை என்று இந்த இரு சம்பவத்தையும் ஒப்பிட்டு கடும் விமர்சனத்தை முன்வைத்து வருகின்றனர்.