நான் பந்து வீசவே பயப்படும் நபர் இவர்தான் – டிரென்ட் போல்ட் கூறிய யாரும் எதிர்பார்க்காத பெயர்

0
10918
Trent Boult

அடுத்த மாதம் 17ஆம் தேதி முதல் டி20 உலக கோப்பை தொடர் தொடங்க இருக்கிறது. ஐபிஎல் தொடர் நடந்து முடிந்தவுடன் டி20 உலகக்கோப்பை தொடர் தொடங்குகிறது. தற்போது கொரோனா தொற்றின் காரணமாக இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் 5வது டெஸ்ட் மேட்ச் தள்ளி வைக்கப்பட்டுள்ளதால், இந்த தொடரில் பங்கேற்ற வீரர்கள் எல்லாம் சீக்கிரம் அமீரகம் திரும்ப காத்திருக்கின்றனர்.

கோலி, ரோகித், தோனி போன்ற முன்னணி வீரர்கள் விளையாடுவதால் ஐபிஎல் தொடர் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது மேலும் ஐபிஎல் தொடர் முடிந்த பின்னர் அடுத்த சில நாட்களிலேயே டி20 உலக கோப்பை தொடங்க இருக்கிறது அதிலும் கோலி, ரோகித், ராகுல் போன்ற முன்னணி வீரர்கள் பங்கேற்க இருக்கின்றனர், இந்திய அணி சார்பாக. முன்னாள் இந்திய கேப்டன் தோனியும் வழிகாட்டியாக இந்த தொடரில் இந்திய அணிக்கு பங்காற்ற உள்ளார்.

ஏற்கனவே பல நாடுகள் இந்த தொடருக்காக தாங்கள் விளையாட அனுப்பும் வீரர்களின் பட்டியலை முடிவு செய்து வெளியிட்டு விட்டனர். இந்திய அணியும் சில சீனியர் வீரர்களைப் புறக்கணித்தும் பல இளம் வீரர்களை நினைத்தும் ஒரு சிறப்பான அணியை வெளியிட்டிருந்தது. இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து போன்ற பல முன்னணி நாடுகள் விளையாடுவதால் இந்தத் தொடரை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

மேலும் மேற்சொன்ன நான்கு அணிகளிலும் சில சிறப்பான வீரர்கள் அந்தந்த நாட்டுக்கு கோப்பையை வென்று தர மிகவும் தீவிரமாக உள்ளனர். அப்படிப்பட்ட ஒரு முக்கியமான வீரர்தான் நியூசிலாந்து அணியின் பந்துவீச்சாளர் டிரென்ட் போல்ட். மின்னல் வேகத்தில் வீசப்படும் இவரது பந்து வீச்சிற்கு முன்பு பல பெரிய பேட்ஸ்மேன்களே அவுட்டாகி உள்ளனர். அதனால் இந்த உலக கோப்பையில் யாருக்கு பந்து வீசுவதில் உங்களுக்கு கடினமாக இருக்கும் என்று கேள்வி கேட்கப்பட்டபோது அதற்கு பலரும் ஆச்சரியப்படும் விதமான பதிலொன்றை போல்ட் தெரிவித்துள்ளார்.

பலரும் கோலி ரோகித் என்று பதில் வரும் என்று நினைத்த நிலையில் போல்ட்டோ அயர்லாந்து வீரர் பால் ஸ்டிர்லிங்குக்கு பந்து வீசுவது தான் கடினமாக இருக்கப் போகிறது என்று கூறியுள்ளார். உலகமே அஞ்சக்கூடிய பந்து வீச்சாளரான டிரென்ட் போல்ட் பால் ஸ்டிர்லிங்கின் பெயரைக் கூறியுள்ளதால் அந்த ஸ்டிர்லிங்கின் ஆட்டத்தை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.