இந்திய கிரிக்கெட்

ஆஸியில 3 வருட வரலாற பாருங்க.. இந்திய அணியால இங்க ஜெயிக்க முடியாது.. காரணம் இதான் – டிராவிஸ் பேட்டி

இந்திய அணிக்கு ஆஸ்திரேலியாவில் கடந்த முறை இருந்தது போல் இந்த முறை சூழ்நிலைகள் இருக்காது எனவும் அதனால் வெற்றி பெறுவது மிகவும் கடினம் எனவும் டிராவிஸ் ஹெட் கூறியிருக்கிறார்.

- Advertisement -

கடந்த இரண்டு முறை இந்திய அணி ஆஸ்திரேலியாலில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்திருக்கிறது. இந்த முறை அப்படி செய்ய முடியாததற்கு ஆஸ்திரேலியாவில் சில சூழல்கள் மாறி இருப்பது குறித்து டிராவிஸ் ஹெட் விளக்கமாக பேசியிருக்கிறார்.

இந்த விஷயங்கள் இங்கு மாறி விட்டன

கடந்த மூன்று வருடமாக ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுகின்ற பாணி மாறிவிட்டது இன்றும் அதற்கு மிக முக்கிய காரணமாக ஆடுகளங்கள் மாறி இருக்கின்றன என்றும் டிராவிஸ் ஹெட் கூறியிருக்கிறார். இதன் காரணமாக கடந்த முறை போல் இந்திய அணிக்கு இந்த முறை விளையாடுவது சுலபமாக இருக்காது என்று தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து டிராவிஸ் ஹெட் கூறும்பொழுது “நீங்கள் கடந்த மூன்று வருடமாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடர்களை கொஞ்சம் திரும்பிப் பாருங்கள். நாங்கள் விளையாடிய டெஸ்ட் போட்டிகள் கொஞ்சம் கொஞ்சமாக மாறிவிட்டன. இங்கு அமைக்கப்பட்ட ஆடுகளங்களால் நாங்கள் விளையாடுகின்ற பாணியும் மாறிவிட்டது. இங்கு பொதுவாகவே கடந்த இரண்டு ஆண்டுகளாக விளையாடுவது கடினமாகவே இருக்கிறது”

- Advertisement -

முன்பு போல இந்தியாவுக்கு இருக்காது

மேலும் பேசிய டிராவிஸ் ஹெட் “கடைசி முறை இந்தியா வந்ததற்கும் தற்போதும் நிறைய வித்தியாசம் சூழ்நிலைகளில் இருக்கும். கடந்த முறை நிறைய போட்டிகள் ஐந்தாவது நாளுக்கு சென்றன. ஆனால் கடந்த கோடைகாலத்தில் இங்கு நடைபெற்ற ஒரு டெஸ்ட் போட்டி கூடஐந்தாவது நாளுக்கு செல்லவில்லை என்று நான் நினைக்கிறேன். சில கடினமான ஆடுகளங்களில் போட்டி ஏற்ற இறக்கம் கொண்டதாக இருந்தது”

இதையும் படிங்க : கம்பீர் ரூல்ஸ் செல்லாது.. ஹைடன் பாண்டிங் அப்படிதான் பேசுவாங்க.. நான் இங்கிலாந்து போகணுமா? – மைக்கேல் வாகன் விமர்சனம்

“இந்திய வீரர்கள் தென் ஆப்பிரிக்கா சூழ்நிலையில் கொஞ்சம் கடினப்பட்டார்கள். அவர்கள் இரண்டு வெவ்வேறான சூழ்நிலை கொண்ட இரண்டு டெஸ்ட் போட்டியில் ஒன்றை வென்று ஒன்றை தோற்றார்கள். இது இந்தியா சென்று மற்ற அணிகள் விளையாட சங்கடமாக இருப்பது போன்றது. இது போன்ற விஷயங்கள் எங்களுக்கும் உதவியாக இருக்கும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -
Published by