கிரிக்கெட் போட்டிகளில் மகேந்திர சிங் தோனி தொடங்கிய 5 டிரேட்மார்க் விஷயங்கள்

0
322
MS Dhoni Trends in Cricket

மகேந்திர சிங் தோனி இந்திய கிரிக்கெட் கேப்டன்கள் மத்தியில் ஒரு மிகச் சிறந்த கேப்டன் என்பதில் எந்தவித சந்தேகமும் கிடையாது. மகேந்திர சிங் தோனி ஒரு வீரராக எவ்வளவு சிறப்பாக விளையாடுகிறார் அதே அளவு ஒரு தலைவனாக அணியின் வீரர்கள் எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்து நன்றாக தெரிந்து விளையாடும் ஒரு வீரர்.

பல போட்டிகளில் இவர் பல புதுமையான விஷயங்களை செய்வார். அது பின்னாளில் பலரால் பின்பற்றப்பட்டு வந்த விஷயம் நம் அனைவருக்கும் தெரியும். இப்படி கிரிக்கெட் போட்டிகளில் இவர் முதலில் ஆரம்பித்து வைத்த சில ட்ரேட்மார்க் விஷயங்களைப் பற்றி பார்ப்போம்

முதல் ஓவரை ஸ்பின் பவுலர்களிடம் கொடுப்பது

ஐபிஎல் தொடரில் குறிப்பாக மகேந்திர சிங் தோனி எப்பொழுதும் தனது எதிர் அணியில் விளையாடும் வீரர்கள் அதிக ரன்களை ஆரம்பத்தில் எடுத்து விடக்கூடாது என்றுதான் யோசிப்பார். குறிப்பாக இடது கையை வீரர்கள் விளையாடும் நிலையில் தனது அணியில் இருக்கும் ஆப் ஸ்பின் பவுலர்களை பந்து வீச வைப்பார்.

ரவிச்சந்திரன் அஷ்வின் எப்பொழுதும் பவர் பிளே ஓவர்களில் சென்னை அணிக்காக ஆரம்பம் முதலே பந்துவீச துவங்குவார். அதேபோல ஹர்பஜன் சிங்கை பயன்படுத்தி கிறிஸ் கெயில் விக்கெட்டை மகேந்திர சிங் தோனி கைப்பற்றுவதும் தனிச்சிறப்பாகும். அந்த யுக்தியை தற்போது பலரும் பின்பற்றி வருகிறார்கள்.

கடைசி ஓவரில் கிளவுஸை அகற்றுவது

இறுதி ஓவரில் குறிப்பாக கடைசி பந்தில் எப்பொழுதும் விளையாடிக் கொண்டிருக்கும் வீரர்கள் ரன் ஓட முயற்சிப்பார்கள். அவர்கள் கூடுதலாக ரன்கள் எடுத்து விடக்கூடாது என்பதற்காக மகேந்திர சிங் தோனி எப்பொழுதும் தனது கிளவுஸை கழற்றி வைத்து விடுவார்.

அதன் மூலம் பந்தை பிடித்து வேகமாக ஸ்டம்ப்பை நோக்கி வேகமாக அடிக்க முடியும். பல முறை இவ்வாறு மகேந்திர சிங் தோனி செய்துள்ளதை நாம் பார்த்து இருந்திருப்போம். அதை தற்பொழுது பல விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்கள் பின்பற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்டம்புக்கு பின்னால் நின்று காலை நீட்டுவது

dhoni wicket keeping

அதேபோல மகேந்திர சிங் தோனி ஒரு சில முறை ஸ்டம்புக்கு பின்னால் நிற்கும் பொழுது திடீரென காலை நீட்டுவார். பவுலர்கள் ஒரு சில சமயம் வைடாக சற்று தள்ளி பந்து வீசுவார்கள். அப்பொழுது மகேந்திர சிங் தோனியால் பந்தை தனது கைகளை நீட்டி பிடிக்க முடியாது. எனவே சாமர்த்தியமாக யோசித்து தனது காலை சற்று நீட்டி பந்தை தனது காலின் மூலம் தடுப்பார்.

அதன் மூலம் பேட்ஸ்மேன்கள் ஓட இருக்கும் ஒரு சில ரன்களை கட்டுப்படுத்துவார். அதனை தற்போது விளையாடிக் கொண்டிருக்கும் பல விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன்கள் பின்பற்றி வருவதும் குறிப்பிடத்தக்கது.

ஹெலிகாப்டர் ஷாட் அடிப்பது

Dhoni Helicopter Shot

மகேந்திர சிங் தோனி ஒரு சில சமயம் ஹெலிகாப்டர் ஷாட் அடித்து நாம் எப்பொழுது அவரிடம் யார்க்கர் பந்துகளை வீசுகிறார்களோ, அப்போது எல்லாம் நின்ற இடத்தில் இருந்து ஹெலிகாப்டரை ஷாட்டு அடித்து சிக்ஸராக அதை மாற்றுவார்.

அதிலிருந்து பலரும் அவரது பாணியை பின்பற்றி எப்பொழுது எல்லாம் யார்க்கர் பந்துகளை தங்கள் மீது வீசுகிறார்களோ, மகேந்திர சிங் தோனி அடித்த அதே ஹெலிகாப்டர் ஷாட்டை அடித்து பந்துவீச்சாளர்கள் மீது பிரஷரை போடுவார்கள். அதற்கு சிறந்த உதாரணமாக பேட்ஸ்மேன்கள் ஹர்திக் பாண்டியா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் ஆவர்.

கோப்பையை இளம் வீரர்கள் இடம் கொடுப்பது

இது மேற்கூறிய அனைத்திலிருந்தும் மிக தனித்துவம் வாய்ந்தது. மகேந்திர சிங் தோனியின் அணி எப்பொழுது வெற்றி பெற்றாலும் ஒரு கேப்டனாக சென்று தனது அணியின் கோப்பையை வாங்கி வருவார். பின்னர் அதை அணியில் விளையாடிய இளம் வீரரிடம் கொடுத்துவிட்டு தூரத்திற்கு சென்று விடுவார்.

அந்தப் பண்பை தற்பொழுது பல வீரர்கள் பின்பற்றி வருகின்றார்கள். அதில் சில முக்கிய வீரர்கள் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆவர்.