டாஸ் முடிந்தது.. 2 நட்சத்திர வீரர்கள் அவுட்.. ரோகித் எடுக்கும் வித்தியாசமான முடிவுகள்.. முக்கியமான போட்டியில் பரபரப்பு!

0
1242
Rohit

இன்று உலகக்கோப்பையில் தொடரை நடத்தும் இந்திய அணி பங்களாதேஷ் அணிக்கு எதிராக பேட்டிங் செய்ய சாதகமான புனே மைதானத்தில் விளையாடுகிறது!

இன்றைய போட்டிக்கான டாஸில் பங்களாதேஷ் அணி வெற்றி பெற்றது. அந்த அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்திருக்கிறது. இந்திய அணி தொடர்ச்சியாக நான்காவது முறையாக சேஸ் செய்ய இருக்கிறது.

- Advertisement -

அணியின் கேப்டன் ஷாகிப் அல் ஹசன் காயம் காரணமாக அணியில் இடம் பெறவில்லை. நஜிபுல் சாந்தோ கேப்டனாக தொடர்கிறார். மேலும் டஸ்கின் அகமதும் இடம் பெறவில்லை. இவர்களுக்கு பதிலாக நசும் அகமத் மற்றும் முகமத் ஹசன் இருவரும் இடம் பெற்று இருக்கிறார்கள். இந்த போட்டியில் பங்களாதேஷ் அணிக்கு இரண்டு நட்சத்திர வீரர்கள் விளையாட முடியாமல் இருப்பது பின்னடைவாக அமைகிறது.

இந்திய அணியில் எட்டாவது இடத்தில் யார் இடம் பெறுவார்கள் என்பது குறித்து பெரிய விவாதங்கள் வெளியே சென்று கொண்டு இருந்தது. ஒரு பக்கம் அஸ்வின் தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். இன்னொரு பக்கம் முகமது சமியின் உலகத்தரம் வீணாகிறது என்று பலர் வருத்தப்பட்டு வந்தார்கள்.

இந்த நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கடந்த இரு போட்டிகளாக எந்த அணி உடன் சென்றாரோ, அந்த அணி உடனே இந்த போட்டியிலும் சென்று இருக்கிறார். எந்த மாற்றத்தையும் அவர் விரும்பவில்லை.

- Advertisement -

விளையாடுகின்ற குறிப்பிட்ட ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கோ அல்லது தட்டையாகவோ இருந்தால் சர்துல் தாக்கூர், அதே சமயத்தில் ஆடுகளம் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்தால் அஸ்வின் என்பதில் இந்திய அணி நிர்வாகம் மிக உறுதியாக இருப்பது தெரிகிறது. மேலும் எக்ஸ்ட்ரா பேட்ஸ்மேனாக சூரிய குமாரையும் கொண்டு வர விரும்பவில்லை என்பதும் தெரிகிறது.

டாஸ் முடிந்ததும் ரோஹித் சர்மா பேசும்பொழுது ” டாஸ் வெற்றி பெற்றிருந்தால் நானும் முதலில் பந்து வீசுவதையே தேர்ந்தெடுத்து இருப்பேன். இந்த நேரத்தில் இது வேலை செய்கிறது. அதனால் அணியை மாற்ற எந்த தேவையும் ஏற்படவில்லை. எல்லோரையும் நல்ல இடத்தில் வைத்து, கொண்டு செல்வது உலகக்கோப்பையில் நல்லது. வீரர்கள் நல்ல மனநிலையுடன் கிரிக்கெட் ரசித்து விளையாடுகிறார்கள். இதே வேகத்தை தொடர விரும்புகிறோம். பழைய அணியுடன் விளையாடுகிறோம்!” என்று கூறியிருக்கிறார்!