டெஸ்ட் கிரிக்கெட்டில் கேப்டனாக விராட் கோஹ்லி ஆடிய 5 சிறந்த இன்னிங்ஸ்

0
247
Top 5 Captain Knocks Of Virat Kohli in Test

சென்ற ஜனவரி 15 அன்று விராட் கோஹ்லி, இந்திய டெஸ்ட் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிக் கொண்டார். ஏற்கனவே அவர் டி20ஐ மற்றும் ஓடிஐ‌ கேப்டன்சியில் இருந்து ஒதுங்கிக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த கேப்டனாக விராட் கோஹ்லி திகழ்கிறார். தான் வழிநடத்திய 68 போட்டிகளில் 40 வெற்றி, 17 தோல்வி கண்டுள்ளது.

அதிக டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்ற கேப்டன்களில் கிரேம் ஸ்மித் ( 51 ) ரிக்கி பாண்டிங் ( 48 ) ஸ்டீவ் வாக் ( 41 ) அடுத்து விராட் கோஹ்லி 4வது இடத்தைப் பிடித்துள்ளார். ஏழாவது இடத்தில் இருந்த இந்திய அணியை தொடர்ந்து 5 வருடம் முதலிடத்தில் வைத்திருந்தார். சேனாவில் டிரா செய்தாலே பெரிய விசியம் என்னும் எண்ணத்தை மாற்றியவர் கேப்டன் விராட் கோஹ்லி. சேனா நாடுகளில் அதிக வெற்றிகளைக் குவித்த ஆசிய கேப்டனும் இவர் தான்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோஹ்லி கேப்டனாக 113 இன்னிங்சில் 5864 ரன்கள் அடித்துள்ளார். அதில் 18 அரை சதமும் 20 சதமும் அடங்கும். அந்த 20 அபாரமான சதங்களில் 5 சிறந்த கேப்டன்ஸ் நாக்கைப் பற்றி இக்கட்டுரையில் பின்வருமாறு காண்போம்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 141, அடிலெய்டு 2014

பலமான ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அடிக்கப்பட்ட இந்தச் சதம் அவரது கேரியரில் மிகவும் ஸ்பெஷல். ஒரு கேப்டனாக விராட் கோஹ்லிக்கு இதுதான் முதல் போட்டி. டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 517 ரன்கள் குவித்தது. முதல் இன்னிங்சிலும் கேப்டன் கோஹ்லி சதம் விளாசியதால் இந்திய அணி 444 ரன்களை எட்டியது. இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 290 ரன்களுக்கு டிக்ளர் செய்ததன் மூலம் 364 ரன்கள் இந்திய அணிக்கு இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

கடைசி 4 செசன்களே பாக்கி இருந்ததால் டிரா செய்யும் வாய்ப்பு இந்திய அணிக்கு பிரகாசமாக இருந்தது. ஆனால் கோஹ்லி ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களை நாலாப் பக்கமும் சிதறடித்து 141 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அப்போட்டியில் இந்தியா 45 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. இருப்பினும் கேப்டனாக நியமிக்கப்பட்ட முதல் போட்டியிலேயே சிறப்பாக செயல்பட்ட கோஹ்லிக்கு இது எப்போதும் மறக்கமுடியாத போட்டியாக இருக்கும்.

இங்கிலாந்துக்கு எதிராக 236, மும்பை 2016

முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 400 ரன்கள் அடித்தது. சற்றே இமாலய இலக்காக தான் இது அமைந்தது. முரளி விஜய் மற்றும் புஜாரவின் தயவால் இந்தியா 146/2 அடித்து ஓரளவு நல்ல தொடக்கத்தை அளித்தது. பின்னர் களமிறங்கிய கேப்டன் கோஹ்லி சிறப்பான ஃபார்மைத் தொடர்ந்தார். ஆனால் இந்திய மிடில் ஆர்டர் பெரிதாக ஒத்துழைக்கவில்லை.

சுழற்பந்து வீச்சாளர் ஜெயன்ட் யாதவ்வுடன் ஜோடி சேர்ந்த கேப்டன் இந்திய அணியை எட்டா உயரத்திற்கு அழைத்துச் சென்றார். விராட் கோஹ்லித 235 ரன்கள் அடித்து தன் 3வது இரட்டைச் சதத்தைப் பதிவு செய்தார். மறுமுனையில் ஜெயன்ட் யாதவ் சதம் விளாசினார். இந்திய அணி 631 ரன்கள் அடித்தது. இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய பந்து வீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் இன்னிங்ஸ் 36 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

தென்‌ ஆப்ரிக்காவுக்கு எதிராக 153, செஞ்சூரியன் 2018

2018 இந்தியா – தென்னாபிரிக்கா டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்தியா அணி தோல்வியை தழுவியது. இரண்டாவது போட்டி செஞ்சூரியன் மைதானத்தில் நடைபெற்றது. பேட்டிங் செய்வதற்குக் கடினமான ஆடுகளத்தில் தென்னாபிரிக்கா 355 ரன்கள் அடித்தது. முரளி விஜய் ஒரு பக்கம் சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தார். மறுபக்கம் கேப்டன் விராட் கோஹ்லி மிகவும் சிறப்பாக ஆடிக் கொண்டிருந்தார். பந்துவீச்சாளர்களை அற்புதமாக சமாளித்து கட்டுப்பாடுடன் காணப்பட்டார். ரவி அஸ்வினிடமிருந்தும் நல்ல ஆதரவு கிடைத்தது.

விராட் கோஹ்லியின் அபார ஆட்டம் இந்திய அணியை 307 ரன்களுக்கு கொண்டு சேர்த்தது. இரண்டாவது இன்னிங்ஸில் விராட் கோஹ்லியின் நெருங்கிய நண்பர் ஏபி டிவில்லியர்ஸ் இந்திய அணியின் வெற்றி எண்ணத்தை நொறுக்கியது. அதிரடி பேட்ஸ்மேன் ஏபிடி 80 ரன்கள் விளாசியாதன் மூலம் தென்னாபிரிக்கா 258 ரன்கள் குவித்து பெரிய இலக்கை அளித்தது. லுங்கி இங்கிடியின் வேகத்தில் இந்திய அணி 135 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது.

இங்கிலாந்துக்கு எதிராக 149, எட்ஜ்பஸ்டன் 2018

இந்திய அணி 2018ஆம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது பெரிதாகக் பேசப்பட்டது. விராட் கோஹ்லியின் கிரிக்கெட் வாழ்க்கையில் கடினமான தொடராக இது அமைந்தது. குறிப்பாக எட்ஜ்பஸ்டனில் நடந்த போட்டியில் இந்திய அணிக்கு ஒருபக்கம் நிலைத்து ஆட ஒரு பேட்ஸ்மேன் தேவைப்பட்டார். அதை கேப்டன் விராட் கோஹ்லி சிறப்பாகச் செய்தார். முதல் இன்னிங்சில் இந்தியா 100 ரன்களுக்கு 4 முக்கிய விக்கெட்டுகளை இழந்தது பரிதவித்து.

பேட்டிங்கில் இந்திய பந்து வீச்சாளர்கள் கேப்டன் விராட் கோஹ்லிக்கு நன்றாக ஒத்துழைத்தார்கள். கோஹ்லி 149 ரன்களில் இன்னிங்ஸை முடித்தார். இரண்டாவது இன்னிங்ஸிலும் அவர் பிரமாதமாக ஆடினார். ஆனால் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் இந்திய அணியின் வெற்றியைப் பறித்தார். 31 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி இந்தியாவை வீழ்த்தியது.

தென்னாபிரிக்காவுக்கு எதிராக 254, புனே 2019

இந்த டெஸ்ட் போட்டி இந்திய மைதானங்களில் இந்தியாவின் ஆதிக்கத்தை காட்டியது. அத்தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி அது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து பட்டையைக் கிளப்பியது. இந்திய கேப்டன் 33 பவுண்டரி & 2 சிக்ஸர்கள் சேர்த்து மொத்தம் 254 ரன்கள் அடித்தார். இது அவரது அதிகபட்ச டெஸ்ட் ஸ்கோர் ஆகும்.

விராட் கோஹ்லி தவிர அகர்வால் சதம், ஜடேஜா 91, ரஹானே மற்றும் புஜாரா அரை சதம் விளாசி இந்திய அணி 601 எனும் இமாலய ஸ்கோரை அடைந்தது. தென்னாபிரிக்கா பந்துவீச்சாளர்கள் ஒன்றும் புரியாமல் விழித்தனர். அடுத்து இரண்டு முறை பேட்டிங் செய்தும் தென் ஆப்ரிக்கா அணியால் 601 ரன்களைத் தாண்ட இயலாமல் இன்னிங்ஸ் 137 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.