டாப் 5: டி20களில் அதிக அரைசதம் அடித்த 5 வீரர்கள்!

0
88

டி20 போட்டிகளில் அதிக அரைசதம் அடித்த ஐந்து வீரர்களின் பட்டியலை காண்போம்.

சர்வதேச கிரிக்கெட் உலகில் டி20 போட்டிகளின் மோகம் நாளுக்கு நாள் உச்சத்தை பெற்று வருகிறது. ஒரு நாள் போட்டிகள் மற்றும் டெஸ்ட் போட்டிகளை மக்களுக்கு கொண்டு சேர்க்க ஐசிசி பல முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது. இருப்பினும் சமீபகாலமாக டெஸ்ட் போட்டிகளின் வரவேற்பு அதிகமாகி வந்தாலும், ஒருநாள் போட்டிகள் சுணக்கம் கண்டிருக்கிறது.

ஒரு சில அணி வீரர்கள் ஒருநாள் போட்டி, டெஸ்ட் போட்டி மற்றும் டி20 போட்டிகள் என மூன்றிலும் ஜொலித்து வருகின்றனர். அந்த வகையில் டி20 போட்டிகளில் அதிக அரைசதம் அடித்த வீரர்களின் பட்டியலை நாம் இங்கு காண இருக்கிறோம். ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் ஜொலித்த வீரர்கள் இந்த பட்டியலிலும் இடம்பெற்று இருக்கின்றனர்.

டி20 போட்டிகளில் அதிக அரைசதம் அடித்த வீரர்கள்

1. விராட் கோலி – 32 அரைசதங்கள்

2010 முதல் டி20 போட்டிகளில் விளையாடும் விராட் கோலி இதுவரை 102 டி20 போட்டிகளில் பங்கேற்று 94 இன்னிங்ஸ்களில் விளையாடி இருக்கிறார். இதன் மூலம் 3462 ரன்கள் அடித்திருக்கும் விராட் கோலி, 32 அரை சதங்கள் பூர்த்தி செய்து இருக்கிறார். துரதிஷ்டவசமாக சர்வதேச டி20 போட்டிகளில் இவர் ஒரு சதம் கூட அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது..

2. ரோகித் சர்மா – 31 அரைசதங்கள்

31 அரை சதங்களுடன் இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கும் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, 2007 ஆம் ஆண்டு முதல் டி20 போட்டிகளில் விளையாடி வருகிறார். இதுவரை 135 போட்டிகளில் 127 இன்னிங்ஸ்கள் விளையாடி, 3548 ரன்கள் அடித்திருக்கிறார். டி20 போட்டிகளில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார்.

3. பாபர் அசாம் – 27 அரைசதங்கள்

2016 ஆம் ஆண்டு முதல் டி20 போட்டிகளில் விளையாடி வரும் பாபர் அசாம் பாகிஸ்தான் அணியின் கேப்டனாகவும் இருக்கிறார். 75 போட்டிகளில் 70 இன்னிங்ஸ்களில் விளையாடி இருக்கும் இவர், 2696 ரன்கள் அடித்திருக்கிறார். இந்த பட்டியலில் இருக்கும் இளம்வீரரும் இவரே. மற்ற வீரர்கள் அனைவரும் 30 வயதை கடந்தவர்கள்.

4. டேவிட் வார்னர் – 23 அரைசதங்கள்

2009 ஆம் ஆண்டு முதல் விளையாடி டேவிட் வார்னர், 91 டி20 போட்டிகளில் விளையாடியிருக்கிறார். 2684 அடித்திருக்கிறார். இதுவரை 23 அரைசதங்கள் அடித்திருக்கும் இவர் இந்த பட்டியலில் நான்காவது இடத்தில் இருக்கிறார்

5. மார்ட்டின் கப்டில் – 22 அரைசதங்கள்

2009 ஆம் ஆண்டு முதல் டி20 போட்டிகளில் விளையாடும் கப்டில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். இதுவரை 121 போட்டிகளில் 117 இன்னிங்ஸ்கள் விளையாடியிருக்கும் இவர், 3,497 ரன்கள் அடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இவர் 22 அரை சதங்களுடன் இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருக்கிறார்.