ஐசிசி டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியின் 5 குறைந்தபட்ச ஸ்கோர்கள்

0
74
Lowest Score of India in T20 WCs

2007ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவில் நடந்த முதல் ஐசிசி டி20 தொடரை எம்.எஸ்.தோனி தலைமையிலான இளம் இந்திய அணி கைப்பற்றியது. 14 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால் நம் இந்திய அணியால் இரண்டாவது கோப்பையை இன்னுமும் வெல்ல இயலவில்லை. 2014ம் ஆண்டு இறுதிப் போட்டியில், இலங்கை அணியிடம் பரிதாமாக தோற்றது. 2 வருடங்களுக்குப் பின்னர் இந்தியாவில் நடந்த தொடரிலும், முக்கியமான அரை இறுதிப் போட்டியில் சொதப்பி, வெளியேறியது.

டி20 உலகக்கோப்பையில் மற்ற அனிகளைக் காட்டிலும், இந்திய பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஆடியுள்ளார். எப்படிப்பட்ட அணியாக இருந்தாலும், ஏதாவது ஒரு சூழ்நிலையில் மோசமான ஆட்டம் வெளியாகும். இந்திய அணியும் ஒரு சில முறை சிறப்பிக்கத் தவறியுள்ளது. இந்திய அணியின் 5 குறைவான ஸ்கோர்களைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

2010ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 135 ஆல் அவுட்

ஐசிசி தொடர்களில் ஆஸ்திரேலியாவை சமாளிப்பது இந்திய அணிக்கு ஓர் சவாலகாவே இருக்கிறது. 2010ஆம் ஆண்டு சூப்பர் 8 சுற்றில் இரு அணிகளும் மோதின. ஷேன் வாட்சன் மற்றும் டேவிட் வார்னரின் அதிரடி அரை சதத்தால், ஆஸ்திரேலிய அணி 184 ரன்கள் குவித்தது. இமாலய இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணியில் ரோஹித் ஷர்மா தவிர அனைத்து வீரர்களும் சொற்ப ரன்னில் வெளியேறினர். ரோஹித்தின் 79 ரன்கள், இந்திய அணியை 135 எனும் ஸ்கோருக்கு எடுத்துச் சென்றது.

2014ல் இலங்கைக்கு எதிராக 130/4

டி20 உலகக்கோப்பைத் தொடரில், இந்திய அணி இரண்டு முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. 2014ல் நடந்த பைனலில் இலங்கை அணியிடம் மண்ணைக் கவ்வியது. இந்திய அணி தரப்பில் விராட் கோஹ்லி மட்டுமே தனி ஆளாக போராடினார். அவர் 58 பந்துகளில் 77 ரன்கள் விளாசினார். குலசேகரா மற்றும் மலிங்காவின் சிறப்பான பந்துவீச்சால் இந்திய அணியை 130 ரன்களுக்கு கட்டுபடியது. 18 ஓவர்களில் இலங்கை அணி எளிதாக வென்று கோப்பையைத் தட்டிச் சென்றது

2009ல் தென்னாபிரிக்காவுக்கு எதிராக 118/9

ஐசிசி 2009 டி20 உலகக்கோப்பைத் தொடர் இந்திய அணிக்குச் சாதகமாக அமையவில்லை. சூப்பர் 8 சுற்றில் தென்னாபிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில், இந்திய அணி சிறப்பாக பந்திவீசி 130 ரன்கள் மட்டுமே அடிகவிட்டது. டி வில்லியர்ஸின் பிரமாதமாக ஆடி அரை சதம் அடித்தார். 131 எனும் எளிய இலக்கைக் கூட இந்தியாவால் அடைய முடியவில்லை. 20 ஓவர்கள் முடிவில் 118/8 என முடித்தது. ஜோஹன் போத்தாவின் 3/16, ஆட்டத்தை தென்னாபிரிக்கா பக்கம் அழைத்துச் சென்றது.

2021ல் நியூசிலாந்துக்கு எதிராக 110/7

டி20 உலகக்கோப்பையில், இந்திய ஆடுகளங்களுக்கு வெளிய ஆடிய போட்டிகளில் இந்தியாவின் குறைந்தபட்ச ஸ்கோர் இது தான். கட்டாயம் வெற்றி பெற வேண்டிய போட்டியில் இந்திய அணி பரிதாபமாக தோற்றது. கேப்டன் விராட் கோஹ்லி வழக்கம்போல டாஸை ஏமாற்றமடைந்தார். சரியான நேரத்தில் நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் விக்கெட்டுகள் எடுத்து இந்திய அணியை 110 ரன்களுக்குக் கட்டுப்படுத்தினர். நியூசிலாந்து அணி 14.3 ஓவர்களிலேயே அவ்விலக்கை அடைந்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

2016ல் நியூசிலாந்துக்கு எதிராக 79 ஆல் அவுட்

இத்தொடரில் இந்திய அணியின் மிகக் குறைந்த ஸ்கோர், நியூசிலாந்து அணிக்கு எதிராக பதிவானது. 2016ஆம் ஆண்டு நாக்பூரில் இந்திய அணி தனது முதல் போட்டியை ஆடியது. பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். இந்திய அணிக்கு 127 ரன்களை இலக்காக நிர்ணயித்தது நியூசிலாந்து. அவர்களது பவுலர்கள் இந்திய அணியை விட அற்புதமாக பந்துவீசி, 79 ரன்களுக்குச் சுருட்டினர். 4 முக்கிய விக்கெட்டுகளை வீழ்திய மிட்செல் சான்ட்னர் ஆட்டநாயகன் விருது வென்றார்.