இந்த ஐ.பி.எல் சீசனில் வாய்ப்புக்காகக் காத்திருக்கும் 4 தமிழக வீரர்கள்

0
1336
Sai Kishore and Baba Indrajith

டெல்லியைச் சேர்ந்த ஆயுஷ் பதோனி லக்னோ அணிக்காகவும், ஹைதராபாத்தைச் சேர்ந்த திலக் வர்மா மும்பை அணிக்காகவும், உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த யாஷ் தயால் குஜராத் அணிக்காகவும், இமாச்சல் பிரதேசத்தைச் சேர்ந்த வைபவ் அரோரா பஞ்சாப் அணிக்காகவும், இந்த ஐ.பி.எல் சீசனில் குறிப்பிடத்தக்க அளவு வாய்ப்புகள் பெற்ற இளம் இந்திய வீரர்களாக இருக்கிறார்கள்.

தமிழகத்தைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தர், நடராஜன், தினேஷ்கார்த்திக், வருண் சக்ரவர்த்தி ஆகியோர் வாய்ப்புகள் பெற்று விளையாடுவதோடு, மிகச்சிறப்பாகவும் செயல்பட்டு வருகிறார்கள். இவர்கள் நால்வருமே இந்திய கிரிக்கெட் அணிக்குத் தேர்வாகி விளையாடியவர்கள்.

அதேசமயத்தில் இந்திய அணிக்கு ஆடியிராத ஆனால் சாதிக்கும் அளவுக்குத் திறமை இருந்தும், வாய்ப்புகள் கிடைக்காமல் காத்திருக்கும் நான்கு வீரர்கள் பற்றிதான் இதில் பார்க்கப்போகிறோம்.

பாபா இந்திரஜித்

இந்த ஆண்டு ரஞ்சி சீஸனில் தமிழக அணி நெருக்கடியில் அடுத்தடுத்து இரு சதங்களை விளாசி நல்ல பார்மில் இருக்கும் வீரர். தற்போது கொல்கத்தா அணியில் வாய்ப்புக்காகக் காத்திருக்கிறார்.

ஜெகதீசன்

சிலபல ஆண்டுகளாக வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் தமிழக அணிக்காக நல்ல முறையிலேயே செயல்பட்டு வரும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான இவர் வாய்ப்புக்காகச் சென்னை அணியில் காத்திருக்கிறார்.

சாய் கிஷோர்

சையத் முஷ்டாக் அலி டிராபி, விஜய் ஹசாரே டிராபியில் லெப்ட்-ஹேன்ட் ஆர்த்தடாக்ஸ் ஸ்பின் பவுலிங்கில் கலக்கி வரும் இவர் பேட்டிங்கிலும் பங்களிக்கக் கூடியவர். தற்போது குஜராத் அணியில் இருக்கிறார்.

ஹரி நிஷாந்த்

தமிழக அணியின் அதிரடி துவக்க ஆட்டக்காரரான இவர் தற்போது சென்னை அணியில் இருக்கிறார். வாய்ப்புகள் கிடைத்தால் குறிப்பிடத்தக்க அளவில் செயல்படும் திறமையுடைய இடக்கை பேட்ஸ்மேன்.