2022 ஐ.பி.எல் சீஸனின் அறியப்படாத 10 இளம் நட்சத்திர இந்திய வீரர்கள்

0
417
Rajvardhan Hangargekar and Yash dhull
சுயாஸ் பிரபுதேசாய்- பெங்களூர்

கோவாவைச் சேர்ந்த மிதவேக ஆல்ரவுண்டர். மாடர்ன் கிரிக்கெட் ஷாட்ஸ்கள் பிரமாதமாய் ஆடுகிறார். RCB அணியில் அனுஜ் ராவத், மகிபால் லோம்ரர் இருவருக்கும்தான் வாய்ப்பு பிரகாசமாய் இருக்கிறது. இவர்களில் ஒருவர் வாய்ப்பைப் பயன்படுத்த தவறினால் இவருக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.

பைவவ் அரோரா – பஞ்சாப்

இமாச்சல் பிரதேசத்தைச் சேர்ந்த வீரர். சமீபத்தில் இவரைப்போல இன்-ஸ்விங்கர் வீசி நான் சர்வதேச ஆட்டங்களிலும் யாரையும் பார்க்கவில்லை. ரபாடா-அர்ஸ்தீப் போன்ற முதன்மை வேகப்பந்து வீச்சாளர்களையும், ரிசிதவான்-ராஜ்பவா போன்ற மிதவேக ஆல்ரவுண்டர்களையும் தாண்டி இவர் ஆடும் வாய்ப்பை பெறுவாரா என்று தெரியவில்லை.

- Advertisement -
ரமன்தீப் சிங்- மும்பை

பஞ்சாப்பை சேர்ந்த வீரர். மிதவேக ஆல்ரவுண்டர். பிக்-ஹிட்டிங் ப்ளேயர். டிம்டேவிட், பொலார்ட் யாராவது விளையாட முடியாமல் போனால் இவருக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.

சிமர்ஜித் சிங் – சென்னை

டெல்லியைச் சேர்த்த மணிக்கு 140 கி.மீ வேகத்தில் வீசக்கூடிய வலக்கை வேகப்பந்து வீச்சாளர். உள்நாட்டின் அனைத்து தொடர்களிலும் விளையாடி உள்ளார். மும்பையின் செம்மண் ஆடுகளங்கள் வேகத்திற்குச் சாதகமானவை என்பதால், இவருக்கு ஒரு வாய்ப்பு கீற்றாய் ஒளிரவே செய்கிறது.

அபினவ் சடரங்கனி – குஜராத்

கர்நாடகாவைச் சேர்ந்த வலக்கை அதிரடி மிடில்-ஆர்டர் பேட்ஸ்மேன். 2021 சையத் முஷ்டாக் அலி டிராபியியில் கர்நாடக அணிக்கு நான்கு ஆட்டங்களில் களமிறங்கி, 162 ரன்களை 54 ஆவ்ரேஜில் அடித்து கவனம் ஈர்த்தார். குஜராத் அணியின் மோசமான மிடில்-ஆர்டர் பலகீனத்தால் இவருக்கு முதல் ஆட்டத்திலேயே வாய்ப்பு கிடைக்கலாம்.

- Advertisement -
சாமா மிலிந்த் – பெங்களூர்

ஹைதராபாத்தைச் சேர்ந்த இடக்கை வேகப்பந்து வீச்சாளர். 2021 சையத் முஷ்டாக் அலி டிராபியில் அதிகபட்சமாய் 18 விக்கெட்டுகளை கைப்பற்றியவர். புதுப்பந்தில் ஸ்விங் செய்கிறார். எகானமிதான் 8 இருக்கிறது. பின்ஆலன் பிளிசிஸ் உடன் ஓபனிங்கில் இறக்கப்பட்டு சக்சஸ் ஆனால், ஹசில்வுட்டை தைரியமாய் வெளியே வைத்து, சிராஜ்-ஹர்சல்-சாமாமிலிந்த் என வேகப்பந்து வீச்சு கூட்டணியை பிளிசிஸ் களமிறக்கலாம். இதற்கு முதலில் மேக்ஸி-ஹசில்வுட் ஆடாத முதல் மூன்று ஆட்டங்களில் பின்ஆலனுக்கு வாய்ப்பு தரவேண்டும்.

ரமேஷ் குமார் – கொல்கத்தா

பஞ்சாப்பைச் சேர்ந்த டென்னிஸ் பால் ப்ளேயர். அவர்கள் பகுதியில் இவர் இருபுறமும் ஸ்பின் செய்யும் திறமையால் நரைன் என்று அழைக்கிறார்கள். சிலரின் உதவியால் இவர் திறமை வெளியுலகிற்கு தெரிய, தற்போது இருபது இலட்சத்திற்கு கொல்கத்தா அணியால் வாங்கப்பட்டு இருக்கிறார். ஆடும் வாய்ப்பு கடினம்தான். நரைன் போல் ஆனால் இடக்கையில் இருபுறம் திருப்பும் மிஸ்ட்ரி ஸ்பின்னராய் இருப்பதால் ஏதாவது ஆச்சரியங்கள் நிகழ்ந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

யாஷ் துல் – டெல்லி

டெல்லியைச் சேர்ந்த, 2022 U19 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியின் கேப்டன். டெல்லி அணிக்காக ரஞ்சியில் சில நாட்களுக்கு முன்பு அறிமுகமாகி, இரு இன்னிங்சிலும் சதமடித்து அசத்திய வலக்கை துவக்க ஆட்டக்காரர். வாய்ப்பு கடினம்தான். ஒருவேளை வார்னர் இல்லாத முதல் மூன்று ஆட்டங்களில் ஓபனராய் பிரித்வியுடன் இறக்குவதற்கும் ஒரு சிறிய வாய்ப்பு இருக்கு.

ராஜ் பவா- பஞ்சாப்

பஞ்சாப்பைச் சேர்ந்த, 2022 U 19 உலகக்கோப்பை இறுதிப்போட்டியின் கதாநாயகன். இந்திய கிரிக்கெட்டின் பிக் டோர்னமென்ட் ப்ளேயர் யுவராஜ்சிங்கின் ஆரம்பக்கால பயிற்சியாளர் இவர் தந்தைதான். இடக்கை பேட்ஸ்மேன். வலக்கை வேகப்பந்து வீச்சாளர். வளர்ந்து வரும் ஆல்ரவுண்டர். ஒரு போட்டிக்கான வாய்ப்பாவது பஞ்சாபில் இருக்கிறதென்றே நினைக்கிறேன்.

ஹங்கர்கேகர் – சென்னை

மகாராஷ்ராவைச் சேர்ந்த, 2022 U 19 உலகக்கோப்பையை வென்ற அணியின் வேகப்பந்து வீச்சாளர். நல்ல வேகத்தில் இன்ஸ்விங், யார்க்கர் வீசக்கூடியவர். பவர்-ஹிட்டராய் பேட்டிங்கிலும் பங்களிப்பைத் தரக்கூடியவர். தீபக் சாஹர் காயமடைந்திருப்பதால், இவர் சென்னைக்கு முதல் ஆட்டத்திலேயே வாய்ப்பைப் பெறுவாரென்றே நினைக்கிறேன்.