“சூரியகுமார் ஸ்கோர் கார்டை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து பின்ச்க்கு அனுப்பினேன்!” – மேக்ஸ்வெல் தாறுமாறு புகழ்ச்சி!

0
14110
Maxwell

இன்றைய தேதியில் டி20 கிரிக்கெட்டில் யாரும் தொட முடியாத உயரத்தில் பேட்டிங் திறமையில் இருப்பது யார் என்று கேட்டால், கிரிக்கெட்டை ஓரளவுக்குப் பின் தொடர்பவர்கள் கூட சூரியகுமார் யாதவைத்தான் கை காட்டுவார்கள்!

அந்த அளவிற்குச் சூரியகுமார் யாதவின் டி20 கிரிக்கெட் பேட்டிங் ஃபார்ம் யாரும் நினைத்துப் பார்க்க முடியாத வகையில் இருக்கிறது. 40 ஆட்டங்களில் 1408 ரண்களை 180 ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசித் தள்ளி இருக்கிறார். பேட்டிங்கில் மிடில் வரிசையில் வரக்கூடிய எவராலும் இந்த ஸ்ட்ரைக் ரைட்டில் தொடர்ந்து ஆடவே முடியாது என்பதுதான் நிதர்சனம்!

- Advertisement -

இங்கிலாந்து அணி உடன் இங்கிலாந்து மண்ணில் யாரும் கற்பனை கூட செய்து பார்த்திடாத வகையில் ஒரு அற்புதமான டி20 சதத்தை அடித்திருந்தார். தற்போது அதை மிஞ்சும் அளவுக்கு நியூசிலாந்து மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக ஒரு டி20 சதத்தை அடித்திருக்கிறார். சூரிய குமாரின் இந்த ஆட்டம் உலகின் பலரது கவனத்தை ஈர்த்து இருக்கிறது. ஆஸ்திரேலியா கிரிக்கெட்டில் அதிரடி ஆட்டத்திற்கு பெயர் போன மேக்ஸ்வெல்லும் சூரியகுமார் யாதவின் அதிரடியை பார்த்து அதிசயத்துப் போய் இருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறும் பொழுது “நியூசிலாந்து இந்தியா மோதிய இரண்டாவது டி20 போட்டியின் முதல் இன்னிங்சின் ஸ்கோர் கார்டை பார்த்தேன். நான் அதை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து நேரடியாக பின்ச்சுக்கு அனுப்பி வைத்தேன். நான் அவரிடம் ‘ இதில் என்ன நடக்கிறது? இவர் வேறு ஒரு கிரகத்தில் பேட்டிங் செய்கிறார்! எல்லோருடைய ஸ்கோரையும் பாருங்கள். இவர் 50 பந்தில் அடித்திருக்கும் ரன்களையும் பாருங்கள்’ என்றேன். அடுத்த நாள் நான் சூரியகுமார் விளையாடிய முழு ஆட்டத்தையும் மறு ஒளிபரப்பில் பார்த்தேன் ” என்று கூறியிருக்கிறார்…

மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” இதில் ஒரு சங்கட்டமான விஷயம் என்னவென்றால் அவர் எல்லாரையும் விட சிறந்தவர். உண்மையில் இப்படி பார்ப்பது மிகவும் கடினம். எங்களுக்கு கிடைத்த வீரர்களில் இவருக்கு அருகில் யாரும் இல்லை. சூரியகுமார் யாதவ் அதிரடியாக ஒரு வினோதமாக செயல்படுகிறார். மிகவும் அனாயசமாக அடிக்கிறார். மணிக்கு 145 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் பந்துவீச்சாளரை அடிக்க முடிவு செய்தார். அவரை அடிக்கவும் செய்தார். பின்பு வாயில் பபுள்கமை மென்று கொண்டு, கிளவுசை கழட்டி மாட்டி, மறுபடியும் பேட்டை தரையில் தட்டி நின்று அதையே செய்கிறார்” என்று வியந்து போய் கூறியிருக்கிறார்!

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசி அவர்
” நான் இதுவரை பார்த்தே இராத வித்தியாசமான அபத்தமான ஷாட்களை எல்லாம் அவர் அடிக்கிறார். அது ஒரு மாதிரி முட்டாள்தனமாகத் தெரிகிறது. அதையெல்லாம் பார்ப்பதற்கே கடினமாக இருக்கிறது. ஏனென்றால் அதையெல்லாம் மற்றவர்களால் செய்ய முடியாததால் அப்படி மோசமாக தெரிகிறது!” என்று புகழ்ந்து புகழ்ந்து பேசி இருக்கிறார்!