முதல் 3 பந்தில் குளறுபடி ; 2 முறை அவுட் ஆகாத பந்துக்கு கையை உயர்த்திய நடுவர் அவுட் ஆன பந்திற்கு தவறான பதில் அளித்ததால் கடுப்பான டெல்லி அணி

0
526
Umpire giving wrong decisions for Rahane

2022 ஆம் ஆண்டின் ஐ.பி.எல் பதினைந்தாவது சீசனின், டபுள் ஹெட்டர் நாளான இன்று முதல் ஆட்டத்தில், மும்பையின் ப்ரோபோர்ன் மைதானத்தில், ஸ்ரேயாஷின் கொல்கத்தா அணியும், ரிஷாப்பின் டெல்லி அணியும் மோதி வருகின்றன.

டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் பீல்டிங்கை தேர்வு செய்ய, டெல்லிக்குத் துவக்கம் தர களம்புகுந்த வார்னர்-பிரித்வி ஜோடி, கொல்கத்தா பவுலர்களை வறுத்தெடுத்துவிட்டனர். இவர்கள் இருவரது அதிரடி அரைசதங்களாலும், அக்ஸர் படேல், சர்துல் தாகூரின் கடைசி அதிரடியாலும், இந்தத் தொடரின் அதிகபட்ச ஸ்கோரான 215 ரன்களை குவித்தது டெல்லி அணி!

- Advertisement -

இதற்குப் பின் கொல்கத்தா அணிக்காக துவக்கம் தர ரகானேவும் வெங்கடேசும் வந்தார்கள். ஆட்டத்தின் இரண்டாம் பகுதியின் துவக்கத்தில் வீசிய,முதல் மூன்று பந்துகளிலும் சுவாரசியமான வினோதமான சம்பவங்கள் நடைபெற்றது. டெல்லியின் தலைமைப் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் வரை விரக்தியின் உச்சிக்கே போய்விட்டார்கள்.

அப்படி என்ன நடந்தது என்றால்; ஆட்டத்தின் முதல் பந்தை பங்களாதேசின் முஸ்தாபிஷூர் வீச, ரகானே தடுக்க, அது விக்கெட் கீப்பர் ரிஷாப்பிடம் கேட்ச்சாக, அம்பயர் அவுட் தந்தார். ஆனால் ரகானேவின் அப்பீலில் அது அவுட் இல்லையென்று தெரிய வந்தது.

அடுத்த இரண்டாவது பந்தில் எல்.பி.டபிள்யூ கேட்க, அம்பயர் அவுட் கொடுத்துவிட்டார். மீண்டும் ரகானே அப்பீல் போக, அது நாட்-அவுட் என்று தெரிந்தது. அப்பீலில் இருமுறை தப்பித்த ரகானே, மூன்றாவது பந்தை எட்ஜ்செய்ய, அது ரிஷாப்பிடம் கேட்ச்சானது. ஆனால் டெல்லி அணியிலிருந்து எந்த பெரிய அப்பீலும் இல்லை. அம்பயரும் அவுட் தரவில்லை!

- Advertisement -