நாளை வாழ்வா சாவா போட்டி ; இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன்!

0
950
Ind vs Sa

இந்தியா வந்துள்ள தென் ஆப்பிரிக்கா அணி இங்கு தலா மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடுகிறது.

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி முதலில் நடந்த டி20 தொடரை 2-1 என கைப்பற்றி, ஆஸ்திரேலியாவில் நடக்க இருக்கும் டி20 உலகக்கோப்பைக்காக பறந்திருக்கிறது!

இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை ஷிகர் தவான் தலைமையில் இளம் இந்திய அணி தென்ஆப்ரிக்க அணியை எதிர்த்து விளையாடுகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி இருந்தது.

நாளை தொடரின் வாழ்வா சாவா போட்டியில் ராஞ்சி மைதானத்தில் நடக்கிறது. இந்தப் போட்டிக்கான இந்திய அணி எப்படி அமைய வாய்ப்பிருக்கிறது என்று இந்தக் கட்டுரைத் தொகுப்பில் பார்ப்போம்.

சுப்மன் கில் – ஷிகர் தவான் தொடக்க ஜோடி மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் – சஞ்சு சாம்சன் நடுவரிசை ஜோடி, இதில் எந்த மாற்றங்களும் இருக்க வாய்ப்பு கிடையாது.

ஆனால் இதற்கு இடைப்பட்ட ருத்ராஜ் – இஷான் கிஷான் ஜோடி இருவரில் யாராவது ஒருவர் மாற்றப்பட்டு ராகுல் திரிபாதி இல்லை ரஜத் பட்டிதார் இந்திய அணிக்காக அறிமுகமாக வாய்ப்பு இருக்கிறது.

அதேபோல் வேகப்பந்துவீச்சில் முகமது சிராஜ், ஷர்துல் தாக்கூர் மற்றும் ஆவேஸ் கான் தொடர்வார்கள். தீபக் சஹர் காயத்தால் வெளியேறி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சுழற்பந்து வீச்சில் கடந்த ஆட்டத்தில் அறிமுகமான ரவி பிஷ்னோய் நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர்கள் ஷாபாஸ் அகமத் இல்லை வாஷிங்டன் சுந்தர் இருவரில் ஒருவர் வாய்ப்பு பெற அதிக வாய்ப்பு இருக்கிறது.

மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் முதல் போட்டியில் தோல்வியடைந்து இருக்கின்ற காரணத்தால், ஆடும் இந்திய அணியில் குறைந்தபட்சம் ஒரு மாற்றமாவது இருக்க நிறைய வாய்ப்புகள் உண்டு. ஏனென்றால் இந்த ஆட்டத்தை இழந்தால் தொடரையும் இழக்க வேண்டியது வரும்.

இந்தத் தொடரில் நாளைய போட்டியில் ராகுல் திரிபாதி, ரஜத் பட்டிதார், ஷாபாஸ் அகமத் மூவரில் ஒருவர் இந்திய அணிக்காக முதல் முறையாக வாய்ப்பு பெற்று அறிமுகமாவார்களா? என்பது இதில் சுவாரசியமான விஷயமாக இருக்கும்!