இந்தியாவின் பந்துவீச்சை பதம்பார்த்த நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள்.. ஆட்டம் கைநழுவி செல்கிறதா?

0
256

நியூசிலாந்து விக்கெட்கீப்பர் பேட்ஸ்மேன் டாம் லேத்தம் சதம் விலாசி அசத்தியுள்ளார். இதனால் வலுவான நிலையில் இருக்கிறது நியூசிலாந்து அணி.

இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கிடையே ஈடன் பார்க் மைதானத்தில் நடைபெற்று வரும் போட்டியில் முதலில் பேட்டிங் செய்து வந்த இந்திய அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 306 ரன்கள் அடித்தது.

- Advertisement -

கேப்டன் ஷிகர் தவான் 72 ரன்கள் மற்றும் சுப்மன் கில் ஐம்பது ரன்கள் என இரண்டு துவக்க வீரர்களும் அரைசதம் அடித்ததால் இந்திய அணி வலுவான துவக்கம் பெற்றது.

மிடில் ஓவரில் அசத்திய ஷ்ரேயாஸ் 80 ரன்கள் அடித்தார். கடைசி கட்டத்தில் களம் இறங்கி கேமியோ விளையாடிய வாஷிங்டன் சுந்தர் 16 பந்துகளில் 37 ரன்கள் விலாசினார்.

சற்று கடினமான இலக்கை துரத்திய நியூசிலாந்து அணிக்கு சிறப்பான துவக்கம் அமையவில்லை. பின் ஆலன் 22 ரன்கள், டிவான் கான்வே 24 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தனர். டெரல் மிச்சல் 11 ரன்களுக்கு அவுட்டாகினர்.

- Advertisement -

நூறு ரன்களுக்குள் மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நியூசிலாந்து அணிக்கு கேப்டன் வில்லியம்சன் மற்றும் டாம் லெத்தம் இருவரும் ஜோடி சேர்ந்து சிறப்பான பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர். கேன் வில்லியம்சன் நங்கூரம் போல விளையாடி அரைசதம் கடந்தார்.

மறுமுனையில் துவக்கத்தில் சற்று நிதானமாக விளையாடி வந்த டாம் லேத்தம் அரைசதம் கடந்த பிறகு அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த துவங்கினர் இந்திய அணியின் பந்துவீச்சை அனாயசமாக எதிர்கொண்டு 76 பந்துகளில் சதம் அடித்தார்.

நான்காவது விக்கெட் இருக்கு ஜோடி சேர்த்த வில்லியம்சன் மற்றும் டாம் லேத்தம் இருவரும் தற்போது 200 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை நெருங்கி வருகின்றனர். 44 ஓவர்கள் முடிவில் லேத்தம் 112 ரன்களுடனும் வில்லியம்சன் 89 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். நியூசிலாந்து அணி 269 ரன்கள் எடுத்திருந்தது. ஆறு ஓவர்களுக்கு 38 ரன்கள் தேவை என்ற நிலையில் தற்போது விளையாடி வருகிறது.