கோலியை வச்சு பாபருக்கு புத்தி சொன்னேன்.. மக்கள் என்ன துரோகினு சொன்னாங்க.. ஆனா இப்ப? – பாகிஸ்தான் முன்னாள் வீரர் பரபரப்பு பேச்சு!

0
749
Virat

நடப்பு உலகக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி மிகப்பெரிய சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்தத் தொடரில் பாகிஸ்தான் அணியை தோல்விகள் பாதித்தது போல மற்ற எந்த அணிகளையும் பாதிக்கவில்லை.

பாகிஸ்தான் அணி முதல் இரண்டு ஆட்டங்களை வென்று மூன்றாவது ஆட்டத்திற்கு இந்தியாவை சந்தித்தது. அந்த போட்டியில் அவர்களுடைய பலம் பலவீனம் என்னவென்று வெளிப்படையாக வெளியில் தெரிந்தது.

- Advertisement -

இதற்கு அடுத்து ஆஸ்திரேலியா அணிக்கு எதிராகவும் அதே நடந்தது. ஆனால் இதுவரை அமைதியாக இருந்த பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் மற்றும் பாகிஸ்தான் ரசிகர்கள், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக சென்னையில் பாகிஸ்தான் தோல்வி அடைந்ததும் வெகுண்டெழுந்து விட்டார்கள்.

தற்பொழுது பாகிஸ்தான் அணி மற்றும் அதன் நிர்வாகம் கேப்டன் என நிறைய விமர்சனங்களும் குற்றச்சாட்டுகளும் சூழ்ந்து இருக்கிறது. உலகக்கோப்பை தொடரில் அந்த அணி மேற்கொண்டு சிறப்பாக செயல்படுவது இந்த சூழ்நிலையை தாண்டி வந்தால் மட்டுமே முடியும்.

மேலும் தற்போதைய அணி எந்த விதமான நல்ல ஆலோசனைகளையும் ஏற்பதில்லை, மிஸ்பா கொண்டு வந்த உடல் தகுதி அளவையும் உதறிவிட்டார்கள், இவர்களைப் பார்த்தால் தினமும் 8 கிலோ ஆட்டுக்கறி தின்பவர்களைப் போல இருக்கிறார்கள் என்று வாசிம் அக்ரம் கடுமையாகக் குற்றம் சாட்டி இருந்தார்.

- Advertisement -

இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் பஷீத் அலி, கடந்த வருடங்களில் பாபர் அசாமுக்கு தான் வழங்கிய அறிவுரை, மக்களால் எவ்வாறு திரிக்கப்பட்டு, தான் தூற்றப்பட்டேன் என்பதன் மனக்குமுறலை தற்போது வெளிப்படுத்தி இருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறும் பொழுது “ஒரு வருடத்திற்கு முன்பு என்னுடைய சேனலில் பாபர் அசாம் ஒரு சிறந்த பேட்ஸ்மேன் என்று கூறினேன். மேலும் விராட் கோலி கேப்டன் பதவியை ராஜினாமா செய்தது போல பாபர் அசாமும் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் சொல்லி இருந்தேன். ஏனென்றால் விராட் கோலி கேப்டன் பதவியை துறந்த பின்னால் அவரது பேட்டிங் செயல்பாடு சிறப்பாக மாறியது.

ஆனால் நான் தெளிவாக கூறிய வார்த்தைகளை மக்கள் திரித்து சமூக வலைதளத்தில் என்னை இது சம்பந்தமாக துரோகி என்று அழைத்தார்கள். எனக்கு பாபர் அசாமை பிடிக்கவில்லை என்று கூறினார்கள்!” என்று பேசியிருக்கிறார்!

அதே சமயத்தில் கேப்டன்சி பொறுப்பு குறித்து நேற்று பேசி இருந்த பாபர் அசாம், கேப்டன் பதவியால் தன்னுடைய பேட்டிங் செயல்பாட்டுக்கு எந்தவித அழுத்தமும் கிடையாது அதனால் பாதிப்பும் கிடையாது என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது!