இன்று உலகக்கோப்பையில் உலகச் சாதனை படைக்க இருக்கும் விராட் கோலி!

0
883
Viratkohli

ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் எட்டாவது டி20 உலக கோப்பை தொடர் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது. 12 அணிகள் இரு குழுக்களாக பிரிக்கப்பட்டு முதல் சுற்று போட்டிகள் நடந்து வருகிறது.

இந்த முதல் சுற்றில் முதல் குழுவில் நியூசிலாந்து ஏறக்குறைய அரை இறுதி வாய்ப்புக்கு தகுதி பெற்று இருக்கிறது என்று கூறலாம். இன்னொரு அணியாக இடம்பெறப் போகும் அணி ஆஸ்திரேலியாவா அல்லது இங்கிலாந்தா என்பதுதான் கேள்வி!

இரண்டாவது குழுவில் இப்போது வரை அப்படி எந்த முடிவுகளும் எட்டப்படவில்லை. ஆனால் இன்று பெர்த் மைதானத்தில் இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிக் கொள்ளும் போட்டியில் யார் வெல்கிறார்களோ அவர்களுக்கு அரையிறுதி வாய்ப்பு மிக மிகப் பிரகாசமடையும். குறிப்பாக இந்தியா வென்றால் இந்தியா ஏறக்குறைய ஒரு காலை எடுத்து அரையிறுதி சுற்றில் வைத்தது போல்தான்.

இன்று இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடக்கும் போட்டியில் இந்தியா வென்றால்தான் பாகிஸ்தான் அணிக்கான அரையிறுதி வாய்ப்பு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய போட்டியில் பாகிஸ்தான் அணியின் ரசிகர்களின் ஆதரவு இந்திய அணியின் பக்கம் இருக்கும் என்பது சுவாரசியமான ஒரு விஷயம்.

இந்தப் போட்டியில் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் ரன் மெஷின் விராட் கோலி 28 ரன்களை அடிப்பதன் மூலம் டி20 உலக கோப்பை தொடர்களில் ஒரு புதிய உலகச் சாதனையைப் படைக்க இருக்கிறார். அது என்னவென்றால், இலங்கை அணியின் முன்னாள் வீரர் மகேல ஜெயவர்த்தன 31 ஆட்டங்களில் 1016 ரன்களை எடுத்து, டி20 உலகக் கோப்பை தொடர்களில் அதிக ரன்கள் எடுத்தவர் என்ற உலகச் சாதனையை படித்திருக்கிறார்.

தற்போது விராட் கோலி 23 ஆட்டங்களில் 21 இன்னிங்ஸில் 989 ரன்களை குவித்துள்ளார். இன்னும் 28 ரண்களை குவிப்பதன் மூலம் இந்த பட்டியலில் விராட் கோலி முதலிடத்திற்கு முன்னேறி உலகச் சாதனை படைப்பார். மேலும் இந்த பட்டியலில் 89 என்ற பெரிய ரன் சராசரியை விராட் கோலி வைத்திருக்கிறார். மேலும் அவர் இதுவரை டி20 உலகக் கோப்பை தொடர்களில் 12 அரை சதங்கள் அடித்து முதலிடத்தில் இருக்கிறார்.

மகேல ஜெயவர்த்தன 31 இன்னிங்ஸ் 1016 ரன்கள்
விராட் கோலி 21 இன்னிங்ஸ் 989 ரன்கள்
கிறிஸ் கெயில் 31 இன்னிங்ஸ் 965 ரன்கள்
ரோகித் சர்மா 32 இன்னிங்ஸ் 904 ரன்கள்
திலகரத்தின தில்ஷன் 34 இன்னிங்ஸ் 897 ரன்கள்