டி20 உலகக் கோப்பையில் விளையாட வைக்கப்படாதது ஏன்? மௌனம் கலைத்த சாகல்!

0
712
Chakal

உலகக் கோப்பை டி20 போட்டி தொடரின் தோல்வியை அடுத்து நியூசிலாந்து சுற்றுப்பயணத்தை முடித்த இந்திய அணி தற்பொழுது பங்களாதேஷ் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது . மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்துள்ள இந்திய அணி டெஸ்ட் போட்டிகளுக்காக தற்பொழுது தயாராகி வருகிறது .

டி20 உலக கோப்பை போட்டியின் அரை இறுதிப் போட்டிகளில் இந்திய அணி தோல்வி அடைந்ததிலிருந்து இந்திய அணியின் மீது விமர்சனங்கள் தொடர்ந்து எழுந்து வருகின்றன . குறிப்பாக இந்திய அணியின் தேர்வு குறித்து முன்னாள் வீரர்களும் கிரிக்கெட் விமர்சகர்களும் தொடர்ந்து விமர்சனங்களை முன் வைக்கின்றனர் .

சஞ்சு சாம்சன் மற்றும் யுசேந்திர சஹால் ஆகியோருக்கு அணியில் தொடர்ந்து இடம் மறுக்கப்படுவது விமர்சனங்களை எழுப்பியுள்ளது . உலகக் கோப்பை டி20 போட்டிகள் முடிந்து ஒரு மாதத்திற்கு பின்னர் தான் அணியில் இடம்பெறாதது பற்றி சகால் மனம் திறந்துள்ளார் .

2022 ஆம் ஆண்டின் டி20 உலக கோப்பை போட்டியின் அரை இறுதி ஆட்டத்தில் இந்திய அணி இங்கிலாந்து அணி இடம் படுதோல்வி அடைந்தது . இதற்கு இந்திய பந்துவீச்சாளர்களின் விக்கெட் வீழ்த்த முடியாத இயலாமையே காரணம் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் கிரிக்கெட் வல்லுனர்களும் விமர்சனம் வைத்தனர் . அப்போது சஹால் போன்ற விக்கெட்டுகளை வீழ்த்தக்கூடிய லெக் ஸ்பின்னரை அணியில் வைத்துக் கொண்டு அவருக்கு ஏன் ஆடும் லெவனில் இடம் கொடுக்கவில்லை என்ற விமர்சனம் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோரின் மீது எழுந்தது .

கடந்த 2021 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையின் போதும் சகால் 15 பேர் கொண்ட அணிகள் இடம்பெறாதது கேள்விகளை எழுப்பியது . இந்த உலகக் கோப்பையில் அவர் இடம் பெற்றிருந்தாலும் ஒரு போட்டியில் கூட அவருக்கு வாய்ப்பு அளிக்காதது கிரிக்கெட் விமர்சிகர்களுக்கும் ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது .

தற்போது இது பற்றி மனம் திறந்து பேசி உள்ள சஹால் கிரிக்கெட் என்பது ஒரு குழு விளையாட்டு ஒவ்வொரு அணியினரும் தங்களின் திட்டங்கள் மற்றும் மைதானத்தின் தன்மைக்கேற்ப தங்களது ஆடும் லெவனை அமைத்துக் கொள்வார்கள்.அதன்படி இந்திய அணியின் பலத்திற்கு ஏற்ப அஸ்வின் மற்றும் அக்சர் பட்டேல் ஆகியோர் அணியில் இடம் பெற்றனர் .

அவர்கள் இருவரும் உலகக் கோப்பை போட்டிக்கு முன்பே சிறப்பாக ஆடிக்கொண்டிருந்ததால் அவர்கள்தான் உலக கோப்பையில் பெரும்பாலான போட்டிகளில் ஆடுவார்கள் என்று முன்பே கணித்திருந்தேன். அதனால் எனக்கு பெரிய ஏமாற்றம் ஒன்றும் இல்லை . மேலும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் கேப்டன் ரோகித் சர்மா ஆகியோர் என்னிடம் இது குறித்து விளக்கம் அளித்திருந்தனர்” . என்று தெரிவித்தார்.

மேலும் நீங்கள் அடுத்தடுத்து இரண்டு டி20 உலக கோப்பை போட்டிகளில் ஆடவில்லையே என்ற கேள்விக்கு பதில் அளிக்கையில் ” முடிந்தது முடிந்தவையாக இருக்கட்டும் நடைபெற இருக்கின்ற 2023 ஆம் ஆண்டுக்கான 50 ஓவர் உலகக் கோப்பை போட்டிகளில் நிச்சயமாக நான் இடம் பெறுவேன்” என்று சஹால் நம்பிக்கை தெரிவித்தார் .

இதுகுறித்து மேலும் பேசிய அவர் ” வர இருக்கின்ற ஐம்பது ஒவர்கள் உலகக் கோப்பை போட்டியில் நிச்சயமாக ஆடுவேன் என்று நம்பிக்கை உள்ளது . நான் கடைசியாக ஆடிய 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பையும் 50 ஓவர் உலகக் கோப்பை தான். இது எல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் இந்திய அணிக்காக ஆட வேண்டும் என்பதுதான் என்னுடைய முதல் இலக்கு . நான் ஆடும் லெவனில் தேர்ந்தெடுக்கப்படுகிறேனா இல்லையா என்பது என் கையில் இல்லை ஆனால் இந்திய அணி நிச்சயமாக இந்த உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்பதே எனது ஆசை மற்றும் கனவு” என்று கூறி முடித்தார் .

பங்களாதேஷ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் சகாலுக்கு ஓய்வு அறிவிக்கப்பட்டிருந்தது . இந்நிலையில் வருகின்ற ஜனவரி மாதம் துவங்க இருக்கும் இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் மற்றும் டி20 போட்டி தொடர்களில் நிச்சயமாக சஹால் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது .