உண்மையைச் சொல்வதென்றால் இந்திய அணியை விட நாங்கள் பின்தங்கிதான் இருக்கிறோம் ; இங்கிலாந்து நட்சத்திர வீரர் பரபரப்பு பேட்டி!

0
6023
Ind vs Eng

எட்டாவது டி20 உலகக்கோப்பை தொடரில் முதல்சுற்று போட்டிகள் முடிவடைந்து, நாளை மறுநாள் முதல் அரைஇறுதி போட்டியில் சிட்னி மைதானத்தில் நியூசிலாந்து பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன!

இரண்டாவது அரை இறுதிபோட்டி வருகின்ற வியாழக்கிழமை 10 ஆம் தேதி நடக்க இருக்கின்றது. இதில் அடிலைட் மைதானத்தில் இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதவிருக்கின்றன!

- Advertisement -

இந்தியா அணி முதல் சுற்றில் பாகிஸ்தான் நெதர்லாந்து பங்களாதேஷ் ஜிம்பாப்வே அணிகளை வென்று, தென் ஆப்பிரிக்கா அணி உடன் தோற்று, அரையிறுதிக்குத் தனது குழுவில் முதல் அணியாகத் தகுதி பெற்றது.

இங்கிலாந்து அணி ஆப்கானிஸ்தான் அணி உடனான முதல் ஆட்டத்தில் சிறிய இலக்கை கடைசி ஓவரில்தான் எட்டி வெற்றி பெற்றது. அதேபோல் அயர்லாந்து அணி உடன் மழையால் பாதிக்கப்பட்ட ஆட்டத்தில் டக்வோர்த் லிவிஸ் படி தோற்றது. இதையடுத்து இந்த அணியின் அரை இறுதி வாய்ப்பு கேள்விக்குறியாக இருக்க, ஆஸ்திரேலியா அணி தனது முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி உடன் மோசமான தோல்வியைத் தழுவி ரன் ரேட்டில் பெரிய அளவில் சரிந்த காரணத்தால், தனது குழுவில் இரண்டாம் இடம் பிடித்து இங்கிலாந்து அணி அரையிறுதிக்குத் தகுதி பெற்றது.

ஒரு பேப்பரை எடுத்து அதில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணி வீரர்களின் பெயர்களை எழுதினால் இங்கிலாந்து அணிதான் அதிக ஆல்ரவுண்டர்களுடன், வேகப்பந்துவீச்சு மற்றும் சுழற் பந்து வீச்சில் பலமாகத் திகழ்கிறது. அதிரடியான துவக்க ஆட்டக்காரர்கள் மேலும் பென் ஸ்டோக்ஸ் மாதிரியான பெரிய தொடர்களை வெல்லும் வீரர்கள் என பலமாக இருக்கிறது.

- Advertisement -

இந்த வகையில் பார்த்தால் இந்திய அணியும் மிகச் சிறப்பான அணிதான். ஆனால் ஆல் ரவுண்டிங் செயல்பாட்டில் மற்றும் அதிவேக பந்துவீச்சில் இந்திய அணி கொஞ்சம் பின் தங்குகிறது. மேலும் இங்கிலாந்து அணியை விட இந்திய அணி குறைந்ததான செயல்பாட்டுத் திறன் கொண்டது அல்ல.

இப்படியான நிலையில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் மொயின் அலி தைரியமாக வெளிப்படையாக யாரும் நம்ப முடியாத வகையில் ஒரு கருத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.

இந்திய அணிக்குறித்து மொயின் அலி பேசுகையில் ” இங்கிலாந்து அணி கணிக்க முடியாத ஒரு அணியாகத்தான் இருக்கிறது. கடந்த ஆண்டு முதல் இந்திய அணி மிகச் சிறப்பாக விளையாடி வருகிறது. இந்த உலகக் கோப்பை தொடரை நீங்கள் எடுத்துப் பார்த்தால் கூட இந்திய அணியின் செயல்பாடு மிகச் சிறப்பாகவே இருக்கிறது. நான் நேர்மையைக் காட்ட வேண்டும் என்பதற்காக இதைச் சொல்லவில்லை, நாங்கள் இந்திய அணியைப் பார்க்கும் பொழுது கொஞ்சம் பின்தங்கிதான் இருக்கிறோம் ” என்று கூறியுள்ளார்!