கேன் வில்லியம்சன், டிம் சவுத்தி இல்லை… புதிய கேப்டனை நியமித்த நியூசிலாந்து நிர்வாகம் – டி20 அணி அறிவிப்பு!

0
3555

இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் டி20 தொடருக்கான அணியை அறிவித்துள்ளது நியூசிலாந்து அணி நிர்வாகம்.

இலங்கை அணியுடன் நடைபெற்று வரும் ஒருநாள் தொடர் முடிவற்ற பிறகு, வருகிற ஜனவரி 18ஆம் தேதி நியூசிலாந்து அணியுடன் ஒருநாள் தொடர் துவங்கவிருக்கிறது. 18, 21 மற்றும் 24 ஆகிய தேதிகளில் 3 ஒருநாள் போட்டிகள் நடக்கவுள்ளது. அதைத்தொடர்ந்து நடைபெறவுள்ள டி20 தொடரில் 27, 29 மற்றும் பிப்ரவரி 1 ஆகிய தேதிகளில் மூன்று போட்டிகள் நடக்கவிருக்கின்றன.

இந்தியாவுடன் நடைபெற உள்ள டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகளில் நியூசிலாந்து அணியின் முன்னணி வீரர்கள் கேன் வில்லியம்சன் மற்றும் டிம் சவுத்தி இருவரும் கலந்துகொள்ள மாட்டோம் என அந்த அணி நிர்வாகத்திடம் தெரிவித்திருக்கின்றனர். தற்போது பாகிஸ்தான் தொடரில் விளையாடிவரும் இருவரும் இந்தியாவிற்கு வராமல் நேரடியாக நியூசிலாந்து பயணிக்கின்றனர். இதற்கான காரணத்தை இருவரின் தரப்பில் இருந்தும் தெரிவிக்கவில்லை

இந்நிலையில் டி20 அணியின் கேப்டனாக மிட்ச்சல் சான்ட்னர் நியமிக்கப்பட்டு இருக்கிறார். ஒருநாள் போட்டிகளுக்கு கேப்டனாக டாம் லேத்தம் நியமிக்கப்பட உள்ளார் என்கிற தகவல்கள் வந்திருக்கிறது. ஒருநாள் போட்டிகளுக்கான அணி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

நியூசிலாந்து டி20 அணி :

மிட்செல் சான்ட்னர் (கேப்டன்), ஃபின் ஆலன், மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சாப்மேன், டேன் கிளீவர், டெவோன் கான்வே, ஜேக்கப் டஃபி, லாக்கி பெர்குசன், பென் லிஸ்டர், டேரில் மிட்செல், க்ளென் பிலிப்ஸ், மைக்கேல் ரிப்பன், ஹென்றி ஷிபிளே, இஸ் சோதி, பிளேயர் டிக்னர்.