கையில் இருந்த ஆட்டத்தை லக்னாவுக்கு தூக்கிக் கொடுத்து ராஜஸ்தான் மோசமான தோல்வி!

0
294
LSG

ஐபிஎல் 16ஆவது சீசனின் 26 ஆவது போட்டி இன்று ராஜஸ்தான் மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையே நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ராஜஸ்தான் மைதானத்தில் நடைபெற்றது!

இந்தப் போட்டிக்கான டாசில் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. லக்னோ அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் மிக சுமாராக விளையாடி விக்கெட் இழப்பு இல்லாமல் பவர் பிளேவில் 37 ரன்கள் மட்டும் எடுத்தார்கள்.

- Advertisement -

தொடர்ந்து விளையாடிய லக்னோ அணிக்கு கே.எல்.ராகுல் 39, பதோனி 1, தீபக் ஹூடா 2, கையில் மேயர்ஸ் 51, ஸ்டாய்னிஸ் 21, பூரன் 29, யுத்வீர் சிங் 1, குர்னால் பாண்டியா 4* ரங்கல் எடுக்க நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 154 ரன்கள் லக்னோ அணி எடுத்தது. ரவிச்சந்திரன் அஸ்வின் 4 ஓவர்களுக்கு 23 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

தொடர்ந்து விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதல் விக்கட்டுக்கு 87 ரன்கள் சேர்த்தது. ஜெய்ஸ்வால் 44 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதற்கு மேல் வெற்றி எளிது என்று இருந்த நிலையில் அடுத்து வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் இரண்டு ரன்களில் ரன் அவுட் ஆகி வெளியேறினார். உடனே பட்லர் 40 ரன்களில் ஆட்டம் இழந்தார். ராஜஸ்தான் அணியின் கடந்த ஆட்டத்தின் கதாநாயகன் சிம்ரன் ஹெட்மையர் 2 ரன்களில் வெளியேறினார்.

தொடர்ந்து ரியான் பராக் மற்றும் படிக்கல் இருவரும் களத்தில் நின்று கடைசி ஐந்து ஓவர்களுக்கு விளையாட ஆரம்பித்தார்கள். இந்த நேரத்தில் வெற்றிக்கு 50 ரன்கள் தேவைப்பட்டது. படிக்கல் 26 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். இதற்கு அடுத்து கடைசி ஓவரில் 19 ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட்டது. ஆனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் 8 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் 10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி நான்காவது வெற்றியை பெற்றது. ரியான் பராக் ஆட்டம் இழக்காமல் 15 ரன்களும், அஸ்வின் மூன்று ரன்களும் எடுத்தார்கள். ஜுரல் சந்தித்த முதல் பந்திலேயே ரன் இல்லாமல் ஆட்டம் இழந்தார். ஆவேஷ் கான் நான்கு ஓவர்கள் பந்துவீசி 25 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

- Advertisement -