சூப்பர் ஓவர் வரை சென்ற ஆட்டம்… 8 ரன்கள் மட்டுமே கொடுத்த சிஎஸ்கே வீரர்… நியூசிலாந்தை அடக்கி இலங்கை அபார வெற்றி!

0
314

சூப்பர் ஓவரில் நியூசிலாந்து அணியை கதிகலங்கவிட்ட சிஎஸ்கே வீரர், விறுவிறுப்பாக சென்ற ஆட்டத்தில் நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.

நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை அணி, டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடர்களை முடித்துவிட்டு, தற்போது டி20 தொடரில் விளையாடுகிறது. மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி ஈடன் பார்க் மைதானத்தில் நடைபெற்றது.

- Advertisement -

டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது நியூசிலாந்து அணி. இதைத்தொடர்ந்து இலங்கை அணிக்கு ஓபனிங் செய்த பதும் நிசங்கா முதல் பந்திலேயே அவுட் ஆனார். குசல் மெண்டிஸ் 25 ரன்கள், தனஜெயா டீ சில்வா 15 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தனர்.

குஷால் பேராரா அபாரமாக விளையாடி 53 ரன்கள் அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அசலங்கா 41 பந்துகளில் 67 ரன்கள் அடித்தார். கடைசியில் உள்ளே வந்த ஹசரங்கா 11 பந்துகளில் 2 சிக்ஸர்கள் உட்பட 21 ரன்கள் அடிக்க 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு இலங்கை அணி 196 ரன்கள் அடித்தது.

197 ரன்கள் என்கிற கடின இலக்கை துரத்திய நியூசிலாந்து அணிக்கு மோசமான துவக்கம் கிடைத்தது. பவுஸ்(2) மற்றும் சைபர்ட்(0) இருவரும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். கேப்டன் டாம் லேத்தம் 27 ரன்கள் அடித்து அவுட்டானார்.

- Advertisement -

நன்றாக விளையாடிய டெரில் மிச்சல் 44 பந்துகளில் 66 ரன்கள் விலாசினார். இவருக்கு பக்கபலமாக இருந்த சாப்மன் 33 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார். ஜேம்ஸ் நீசம் 19 ரன்கள், ரவீந்தரா 13 பந்துகளில் 26 ரன்கள் அடிக்க நியூசிலாந்து அணியும் வெற்றியை நோக்கி சென்றது.

கடைசி ஓவரில் 12 ரன்கள் தேவைப்பட்டபோது, சனக்கா நன்றாக பந்துவீசி வந்தார். கடைசி பந்தில் நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு 7 ரன்கள் தேவைப்பட்டது. 6 அடித்தால் போட்டியை ஸ்கொரை சமம் செய்து சூப்பர் ஓவருக்கு எடுத்துச் செல்லலாம் என்றும் இருந்தது. அப்போது இஸ் சோதி சிக்சர் அடித்து சூப்பர் ஓவருக்கு எடுத்துச் சென்றார்.

சூப்பர் ஓவரில் முதலில் பேட்டிங் செய்தது நியூசிலாந்து அணி. இலங்கை அணிக்கு சிஎஸ்கே வீரர் மகீஷ் தீக்ஷனா பந்துவீசினார். ஸ்பின்னர்களை அடித்து விடுவார்களோ என்று நினைத்திருந்தபோது, ஒரே பவுண்டரி மட்டுமே விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி 8 ரன்களுக்குள் நியூசிலாந்தை கட்டுப்படுத்தி மிரட்டினார்.

இலங்கை அணிக்கு மெண்டிஸ் மற்றும் அசலங்கா இருவரும் சூப்பர் ஓவரில் பேட்டிங் செய்தனர் முதல் பந்தில் மெண்டில் ஒரு ரன் எடுத்து ஸ்ட்ரைக்கை நல்ல பார்மில் இருந்த அசலங்கா-விடம் கொடுத்தார். 2ஆவது பந்தில் சிக்ஸர் அடித்து நியூசிலாந்து அணியின் நம்பிக்கையை சீர்குலைத்தார். 3ஆவது பந்துகளில் ஒயிட் மூலம் பவுண்டரி சென்றதால், இலங்கை அணி வெற்றி பெற்றுவிட்டது. இறுதியில் அசலங்கா ஆட்டநாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்