வீடியோ: அவ்ளோ தான் மேட்ச், நம்ம தோத்துட்டோம்னு நினைச்சப்போ.. தரமான சம்பவம் செய்த அக்ஸர் பட்டேல்; திக் திக் கடைசி ஓவர் வீடியோ!

0
1228

சிக்ஸர் கொடுத்தபிறகு, மீண்டும் ஆட்டத்தை இந்தியா பக்கம் திரும்பிய அக்ஸர் பட்டேல். திக் திக் நிறைந்த கடைசி ஓவரின் வீடியோ இங்கே உள்ளது.

இந்தியா வந்துள்ள இலங்கை அணி மூன்று டி20 போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது. முதல் டி20 போட்டி வான்கடே மைதானத்தில் ஜனவரி 3ஆம் தேதி நடைபெற்றது.

இதில் முதலில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. இந்திய அணிக்கு துவக்க வீரர் இசான் கிஷன்(37) அதிரடியாக விளையாடினார்.

முதல் முறையாக டி20 போட்டிகளில் அறிமுகமான சுப்மன் கில்(7), எதிர்பார்த்து துவக்கத்தை தரவில்லை. அவரும் அவுட்டானார். அடுத்து வந்து சூரியகுமார் யாதவ்(7) தவறுதலான ஷாட் ஆடி ஆட்டம் இழந்தார்.

சஞ்சு சாம்சனும்(5) ஒற்றை இலக்க ரன்களுக்கு ஆட்டம் இழந்து வெளியேற இந்திய அணி மிகவும் தடுமாறியது. ஹர்திக் பாண்டியா சிறிது நேரம் பார்ட்னர்ஷிப் அமைத்து, 29 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார்.

கடைசியில் ஜோடி சேர்ந்த தீபக் ஹூடா மற்றும் அக்ஸர் பட்டேல் இருவரும் அணியை சரிவிலிருந்து மீட்டு சிறந்த ஸ்கோரை எட்டுவதற்கு உதவினர். இந்த ஜோடி 35 பந்துகளுக்கு 68 ரன்கள் சேர்த்தது.

இதில் ஹூடா 23 பந்துகளில் 41 ரன்களும் அக்சர் பட்டேல் 20 பந்துகளில் 31 ரன்கள் எடுத்திருந்தனர். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி ஐந்து விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் சேர்த்தது.

163 ரன்கள் இலக்கை சேஸ் செய்த இலங்கை அணி, 68 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து மிகவும் தடுமாறியது. அப்போது கேப்டன் ஷனக்கா அதிரடியாக விளையாடி இலங்கை அணிக்கு வெற்றி வாய்ப்பை பெற்று விடலாம் என்ற நம்பிக்கையை கொடுத்தார்.

அவரும் 45 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த வீரர்களும் நிலைத்திருக்காமல் ஆட்டமிழக்க, இந்திய அணி வெற்றி பெற்று விடும் என்ற நம்பிக்கை வந்தது. கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவைப்பட்டபோது அக்சர் பட்டேல் வீசினார்.

அதில் மூன்றாவது பந்தில் கருனரத்னே சிக்சர் அடித்தார். அதற்கு முன்னர் ஒரு ஒயிட் மற்றும் ஒரு ரன் எடுக்கப்பட்டிருந்தது. கடைசி மூன்று பந்துகளில் ஐந்து ரன்கள் மட்டுமே தேவைப்பட்டதால், ஆட்டம் இந்திய அணியின் கையை விட்டு சென்று விட்டதோ? என பலரும் எண்ணினர்.

அப்போது லாவகமாக பந்துவீசி ஆட்டத்தை இந்திய அணியின் பக்கம் திருப்பி இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்தார் அக்சர் பட்டேல். இலங்கை அணி 160 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இருக்கையின் இறுதியில் நம்மை அமர வைத்து, கடைசி பந்து வரை திக் திக் என உணர வைத்த அந்த கடைசி ஓவரின் வீடியோவை இங்கே பார்ப்போம்.