பங்களாதேஷுக்கு எதிரான முதல் டெஸ்டில் மூன்று இந்திய நட்சத்திர வீரர்கள் விலகல்!

0
346
Ind vs Ban

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு எதிரான இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடர் வருகின்ற 14ஆம் தேதி பங்களாதேஷின் சட்டகிராம் நகரில் தொடங்க இருக்கிறது.2=1 என்ற கணக்கில் ஒரு நாள் போட்டி தொடரை இழந்த நிலையில் டெஸ்ட் தொடரை கைப்பற்றும் முனைப்பில் உள்ளது இந்திய அணி .

ஜூன் மாதம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான இறுதிப் போட்டி நடைபெற இருப்பதால் இந்த டெஸ்ட் தொடரை கைப்பற்ற வேண்டிய கட்டாயம் இந்தியா அணிக்கு உள்ளது . தற்போது நடைபெற போகும் பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றி அதற்குப் பின் இந்தியாவில் நடக்க இருக்கும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தடவையும் கைப்பற்றும் பட்சத்தில் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவதற்கு வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன .

- Advertisement -

நீண்ட நாட்களாக டெஸ்ட் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தி வந்த இந்திய அணி கடந்த சில வெளிநாட்டு பயணங்களில் ரசிகர்கள் எதிர்பார்த்தது போல் சிறப்பாக செயல்படவில்லை தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தின் போது 2-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை இழந்தது . மேலும் இங்கிலாந்துக்கு எதிரான ஒரு டெஸ்ட் போட்டியையும் தோல்வியடைந்து இங்கிலாந்து மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரை கைப்பற்றும் வாய்ப்பையும் இழந்தது .

இந்நிலையில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை எதிர்பார்த்து காத்திருந்த இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மாவின் காயம் பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. பங்களாதேஷ் மற்றும் இந்திய அணிகளுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ரோஹித் சர்மாவுக்கு பீல்டிங்கின் போது கை விரலில் காயம் ஏற்பட்டது .இதன் காரணமாக அவர் மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் பங்கேற்கவில்லை.

காயத்தின் தீவிரத் தன்மை அறிய மும்பையில் உள்ள மருத்துவ நிபுணர்களை சந்தித்து அவர்களின் ஆலோசனையை பெற இந்தியா திரும்பிய கேப்டன் ரோகித் சர்மா முதல் டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகுவதாக பிசிசிஐ இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. ரோஹித் சர்மாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது காயம் குணமாக சிறிது காலம் ஓய்வு தேவைப்படும் என்று அறிவுறுத்தியதன் அடிப்படையில் ரோஹித் சர்மாவுக்கு முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

அவர் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்பது குறித்து பிசிசிஐ’யின் மருத்துவ அணி இன்னொரு அறிக்கையை
சமர்ப்பிக்கும் என்றும்
தெரிவிக்கப்பட்டுள்ளது .
கேஎல்.ராகுல் இந்திய அணிக்கு கேப்டனாக செயல்படுவார் என்றும் சத்தீஸ்வர் புஜாரா அணிக்கு துணை கேப்டனாக செயல்படுவார் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

ஏற்கனவே காயமடைந்திருந்த இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா மற்றும் வேகப்பந்துவீச்சாளர் முகமது சமி ஆகியோர் காயத்திலிருந்து முழுவதுமாக குணமடையாத நிலையில் அவர்களுக்கு மாற்று வீரர்களாக பவுலிங் ஆல் ரவுண்டர் சவுரப் குமார் மற்றும் வேகத்தந்துவீச்சாளர் நவ்தீப் ஷைனி ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர் .

மேலும் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு மாற்று ஆட்டக்காரராக துவக்க வீரர் அபிமன்யு ஈஸ்வரன் சேர்க்கப்பட்டுள்ளார் இவர் சமீபத்தில் பங்களாதேஷ் சுற்றுப்பயணம் செய்த இந்திய ஏ அணியின் கேப்டன் என்பது குறிப்பிடத்தக்கது . இந்திய அணியில் கூடுதலாக ரஞ்சிப் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வந்த ஜெய்தேவ் உணாட்கட்’டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் .