புவனேஷ்வர் குமாரை விட இந்த இந்திய இளம் வீரர் சிறப்பாக செயல்படுகிறார் – சஞ்சய் மஞ்ரேக்கர் கருத்து

0
82
Sanjay Manjarekar about Bhuvaneshwar Kumar

ஐ.பி.எல் தொடர் என்றாலே யாரும் எளிதாய் கேலி செய்திட முடிகிற வகையில்தான் பஞ்சாப் அணியின் செயல்பாடு இருந்து வருகிறது. ஒரே ஒருமுறை மேக்ஸ்வெல்லின் அதிரடியினால் சிறந்த சீசனாய் அமைந்திருக்கிறது.

இதை மாற்றி அமைக்கும் வகையில் இந்த முறை நடந்த மெகா ஏலத்தில் பந்துவீச்சு, பேட்டிங் என பலமான ஒரு அணியைப் பஞ்சாப் கட்டியிருக்கிறது. தவான், ராஜபக்சே, பேர்ஸ்டோ, லிவிங்ஸ்டன், ரபாடா என ஆட்டத்தை தனி ஆளாய் மாற்றக்கூடிய வீரர்களாக அணியில் அணிவகுத்து நிற்கிறார்கள்.

- Advertisement -

ஏலத்திற்கு முன்பாக பஞ்சாப் அணி தக்க வைத்தது இருவரைத்தான் ஒருவர் கேப்டன் மயங்க் அகர்வால். இன்னொருவர் இந்திய அணிக்காக விளையாட வாய்ப்பு பெறாத பஞ்சாப் இடக்கை வேகப்பந்து வீச்சாளர் அர்ஸ்தீப் சிங்.

கடந்த ஐ.பி.எல் தொடரில் பந்துவீச்சில் மிகச்சிறப்பாகச் செயல்பட்டார். புதிய பந்தில் ஸ்விங் செய்வது, இறுதி ஓவர்களில் வேகத்தில் மாற்றம் செய்வது, நல்ல பிலாக் ஹோல் பந்துகளைப் போடுவதென அமர்க்களப்படுத்தினார். இந்தத் தொடரில் முதலிரண்டு ஆட்டங்களில் சற்றுத் தடுமாறினாலும், உடனே சுதாரித்து அசத்தி வருகிறார்.

இவர் குறித்து சஞ்சய் மஞ்ரேக்கர் கூறும்பொழுது “புவனேஷ்வர் குமார் சிறந்த வீரர்தான். ஆனால் அவரை விட தற்பொழுது அர்ஷ்தீப் சிங் சிறப்பாகப் பந்துவீசுகிறார். இருபது ஓவர் போட்டியின் சிறப்பான முதல் ஐந்து பவுலர்களில் ஒருவராக இருக்கிறார். இதனால் லிமிடட் ஓவர் போட்டிகளில் புவனேவர்குமாருக்குப் பதிலாய் இவருக்கு வாய்ப்பு தரவேண்டும்” என்று தெரிவித்துள்ளார்!

- Advertisement -