“இந்த இளம் வீரர் தான் இந்திய அணியின் அடுத்த சூப்பர் ஸ்டார்”!- இர்பான் பதான் நம்பிக்கை!

0
382

இலங்கை அணி உடனான போட்டி தொடர்கள் முடிந்து இந்திய அணியானது நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டிகளுக்காக தயாராகிக் கொண்டிருக்கிறது .

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்த இலங்கை அணி மூன்று டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளைக் கொண்ட தொடரில் ஆடிவந்தது . இதில் டி20 தொடரை 2-1 எனக் கைப்பற்றி இந்தியா ஒரு நாள் போட்டி தொடரை 3-0 என்ற கணக்கில் வென்று ஒயிட் வாஷ் செய்தது .

இந்தத் தொடரில் இந்திய அணியின் சார்பாக டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் எல்லோரும் மிகச் சிறப்பான பங்களிப்பை அளித்தனர். குறிப்பாக விராட் கோலி மற்றும் சுப்மன் கில் ஆகியோர் இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடினர் . விராட் கோலி முதல் போட்டியில் 113 ரண்களையும் கடைசி ஒரு நாள் போட்டியில் 166 ரன்களையும் எடுத்து தொடர் நாயகன் விருதை வென்றார் .

சுப்மன் கில் முதல் போட்டியில் 71 ரன்களையும் கடைசி ஒரு நாள் போட்டியில் 115 ரன்களையும் எடுத்தார் . இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் இவர் மிகச்சிறப்பாக ஆடிக்கொண்டிருந்தார் ஆனால் துரதிஷ்டவசமாக ஆட்டம் இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது . கடந்த ஆறு மாத காலமாகவே இந்திய அணிக்காக ஒரு நாள் போட்டிகளில் சிறப்பான பங்களிப்பை அளித்து வருகிறார் சுப்மன் கில்.இவர் ஜிம்பாப்வே மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான தொடர்களில் தொடர் நாயகன் விருதை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது . சமீபத்தில் இந்திய அணி நியூசிலாந்து சுற்றுப்பயணம் சென்ற போது நியூசிலாந்திலும் சிறப்பாக ஆடி 2 அரை சதங்களை குவித்தார் .

இந்நிலையில் சுப்மன் கில் பற்றி பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் இர்பான் பதான் சுப்மன் கில்தான் இந்திய அணியின் அடுத்த சூப்பர் ஸ்டார் என தெரிவித்திருக்கிறார் . இதுகுறித்து பேசியுள்ள இர்பான் பதான்.நேற்று சுப்மன் கில் தொடங்கிய விதத்தை பார்க்கும் போது அவர் நிச்சயமாக பெரிய ஸ்கோர் எடுப்பார் என்ற நம்பிக்கையை கொடுக்கும் விதத்தில் தனது இன்னிங்சை தொடங்கினார்.ஆட்டம் செல்லச் செல்ல போட்டியில் அவர் ஆதிக்கம் செலுத்திய விதத்தை பார்க்கும் போது மிகவும் அலாதியாக இருந்தது என்று குறிப்பிட்டுள்ளார் .

மேலும் இது பற்றி தொடர்ந்து பேசிய இர்ஃபான் ” கில் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் மிகச் சிறப்பான ஆட்டத்தை தற்போது வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார் . டி20 போட்டிகளில் மட்டும் அவர் தனது ஆட்டத்தில் சிறிது வேகத்தை மேம்படுத்த வேண்டி உள்ளது . நிச்சயமாக அவர் விரைவில் ஒரு சிறந்த டி20 பேட்ஸ்மேன் ஆகவும் சர்வதேச அரங்கில் வலம் வருவார். தன்னுடைய கிரிக்கெட் கேரியரின் ஆரம்ப கட்டத்திலேயே இவ்வளவு தொடர்ச்சியாக ரண்களை குவித்து வருகிறார் . அவர் கண்டிப்பாக எதிர்காலத்தில் இந்திய கிரிக்கெட்டின் சூப்பர் ஸ்டாராக வருவார் என்று கூறி முடித்தார் இர்பான் பதான்.

இந்திய அணியானது வருகின்ற 18-ஆம் தேதி முதல் நியூசிலாந்து அணிக்கு எதிராக மூன்று போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் போட்டி தொடரில் ஆட இருக்கிறது இந்த இரண்டு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒரு நாள் போட்டி வருகின்ற 18ஆம் தேதி ஹைதராபாத்தில் வைத்து நடக்க இருக்கிறது.