“இந்த இளம் வீரர் பயத்தில் இருக்கிறார்!” – முகமது கைஃப் அதிரடி கருத்து!

0
441
Kaif

இந்திய அணியின் இளம் ஆல் ரவுண்டர் தீபக் ஹூடா. இவர் இரண்டாவது டி20 போட்டியில் சிறப்பாக பந்துவீசி 10 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார் . மூன்றாவது டி20 போட்டி மழையால் சிறிது தாமதமானதால் போட்டி துவங்குவதற்கு முன்பாக இவரிடம் பேட்டி எடுக்கப்பட்டது .

அப்போது அவர் தனக்கு விருப்பமான பேட்டிங் ஆடும் இடம் குறித்து பேசியது தொடர்பாக இந்தியாவின் முன்னாள் வீரர்கள் கூறிய கருத்து சர்ச்சையாக அமைந்துள்ளது.

அந்தப் பேட்டியில் தனது விருப்பமான பேட்டிங் பொசிஷன் பற்றிய கேள்விக்கு பதில் அளிக்கையில் “நான் மூன்றாவது இடத்தில் ஆடுவதை விரும்புகிறேன் ஆனால் நம் எல்லோருக்கும் தெரியும் இந்திய அணியில் மூன்றாவது இடத்தில் ஆடுவது யார் என்று ! உலகின் தலைசிறந்த லெஜெண்ட் இந்திய அணிக்காக அந்த இடத்தில் ஆடிக் கொண்டிருக்கிறார் அதனால் அந்த இடத்தில் ஆடுவதற்கான வாய்ப்புகள் எனக்கு கிடைப்பது குறைவாகவே இருக்கிறது . எதார்த்தமாக எனக்கு வழங்கப்பட்ட ஐந்தாவது இடம் அல்லது ஆறாவது இடத்தை தக்க வைத்துக் கொள்ள முயற்சிக்கிறேன் ” என்று தீபக் கூறி இருந்தார் .

போட்டிக்கு பின் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது இந்த பேட்டி பற்றி இந்தியாவின் முன்னாள் மிடில் ஆர்டர் பேட்ஸ்மனான முஹம்மத் கைப் தன்னுடைய கருத்தை தெரிவித்து இருந்தார் . அதில் அவர் ” தீபக் ஹூடா தனக்கு மூன்றாவது இடத்தில் ஆடுவதை விருப்பம் இருப்பதாக தெரிவித்திருக்கிறார் மேலும் தன்னால் கே எல் ராகுல் மற்றும் விராட் கோலி போன்ற வீரர்களுக்கு பதிலாக தன்னால் ஆட முடியும் என்றும் தெரிவித்துள்ளார் ஆனால் அவரிடம் ஒரு பயம் இருக்கிறது நீங்கள் இந்தியாவிற்காக சிறப்பாக விளையாட வேண்டுமானால் இது போன்ற பயமில்லாமல் நம்பிக்கையுடன் விளையாட வேண்டும் . நீங்கள் விராட் கோலியை யோகே.எல் ராகுலையோ ரீப்ளேஸ் செய்து விளையாடுவேன் என்று கூறுவதில் எந்த தவறும் இல்லை ” இவ்வாறு முஹம்மத் கைப் கூறியிருந்தார்

அதே நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்தியாவின் முன்னாள் வேத பந்துவீச்சாளர் அஜித் அகர் கரும் முகமது கைபின் கருத்தை ஆதரித்து பேசியுள்ளார் . “நீங்கள் இந்திய அணியில் உலக அளவில் சிறந்து விளையாட வேண்டும் என்றால் உங்கள் மீது அதிகமாக நம்பிக்கை வைத்து விளையாட வேண்டும்” என்று அவர் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

தீபக் ஹூடா நியூசிலாந்து சுற்றுப்பயணம் செய்துள்ள இந்தியாவின் ஒரு நாள் அணியிலும் இடம் பெற்றுள்ளார் . ஒரு நாள் போட்டிக்கான விளையாடும் அணியில் அவருக்கு வாய்ப்புகள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .